இடுகைகள்

சிக்னல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடிக்க முயலும் புதிய ஆராய்ச்சி!

படம்
                வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி ! விண்வெளியிலுள்ள வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி நவீனமடைந்து வருகிறது . 1960 ஆம் ஆண்டு ரேடியோ வானியலாளர் ஃபிராங்க் டிரேக் , விண்வெளியிலிருந்து வரும் சிக்னல்களில் மாறுதல்களை கண்டார் . அவர் பணியாற்றும் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள தொலைநோக்கி ஆய்வகத்தில் , 26 மீட்டர் அளவிலான தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது . இது , எபிசிலான் எரிசிலானி என்ற விண்மீனை கண்காணித்து வந்தது . அப்போது திடீரென அதன் கருவிகளில் சிக்னல்களை பெறும் வேகம் அதிகரித்தது . வேற்றுகிரகத்திலிருந்து உயிரினங்கள் பூமியைத் தொடர்புகொள்கின்றன என டிரேக் நினைத்தார் . சில நாட்கள் கழித்து தொலைநோக்கியில் முன்னர் கிடைத்தது போன்ற சிக்னல்கள் கிடைத்தன . பிறகுதான் அது ஆகாய விமானம் ஒன்றிலிருந்து பெறப்பட்டவை என தெரிய வந்தது . வானியலாளர் டிரேக் எபிசிலான் எரிசிலானி மற்றும் தாவ் செடி என்ற இரு விண்மீன்களை கண்காணிப்பதில் சுணங்கவேயில்லை . செவ்வாய் கோளை ஆராய்தற்கு பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் போலவே , வேற்றுகிரகவாசிகளின் புத்திசாலித்தனத்தை அறியும்

மழை பெய்யும்போது இணையமும், செல்போனும் செயல்படாது! - இதற்கான அறிவியல் காரணம் என்ன?

படம்
    மழைக்காலத்தில் ஏற்படும் இயற்கையான தடங்கல்கள் ! மழைக்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் , இணையப் பயன்பாடு என இரண்டுமே பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றன 1860 ஆம் ஆண்டு , ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் ஜேம்ஸ் மேக்ஸ்வெல் , புதியவகை மின்காந்த அலையை கண்டுபிடித்தார் . அதற்குப்பிறகு இயற்பியலாளர் ஹென்ட்ரிச் ஹெர்ட்ஸ் , மேக்ஸ்வெல்லின் கோட்பாட்டை சோதித்துப் பார்த்து , அதனை உறுதியும் செய்தார் . 1895 ஆம் ஆண்டு கோல்கட்டாவில் சர் ஜெகதீஷ் சந்திரபோஸ் , மின்காந்த அலை மூலம் 23 மீட்டர் தூரத்தில் வயர்களின்றி செய்தியை அனுப்பமுடியும் என்பதை செய்து காட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார் . இன்று நாம் செய்தியை இணையத்தின் வழியாக எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும் . இதற்கு காரணமாக இருப்பது எலக்ட்ரான்கள் . அவற்றில் உருவாகும் மின்காந்தவிசை .   இரு எலக்ட்ரான்களுக்கு இடையில் மின்காந்த விசை உருவாகும்போது நாம் செய்தி அனுப்ப முடிகிறது . எளிய உதாரணமாக நாம் ஒளியை குறிப்பிட்ட கோணத்தில் அலைநீளத்தில் கண்களால் பார்ப்பதால் , அதனை எளிதாக உணர்ந்துவிடுகிறோ்ம் . தொலைத்தொடர்பு வசதி முன்னேறாத

காற்றில் பார்க்க முடியாதது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி காற்றில் நம்மால் பார்க்க முடியாதது ஏன்? காற்று என்பது வெறும் காற்று மட்டுமல்ல. அதனுடன் குறிப்பிட்ட அழுத்தமும் உண்டு. இதனால், கண்ணின் ரெட்டினா அதனை எதிர்கொள்ள முடியாமல்  கண்களை மூடிக்கொள்கிறோம். குறைந்த அழுத்தம் கொண்ட காற்று, அதிக அழுத்தம் கொண்ட காற்றை விட குறைவான அடர்த்தி கொண்டது. இதனால் ஒளிக்கற்றைகளை காற்று பாதிக்கிறது. வானில் நட்சத்திரங்களை பார்க்கிறீர்கள். அவை தூரத்தில் இருந்தாலும் அவற்றைப் பார்க்க உங்களுக்கு அதிக தடைகள் இல்லை. அவை நிலையானவையாக மூளை உணர்ந்து படமாக கண்களில் காட்டுகிறது. ஆனால் காற்று வீசும்போது உங்களால் பொருட்களில் பட்டும் எதிரொலிக்கும் ஒளியை உள்வாங்க முடியாது. இதனால் உங்களால் அந்த சமயங்களில் கண்ணில் தென்படும் பொருட்களை பார்க்க முடியாது. நன்றி: பிபிசி

போனில் அழைப்பை ஏற்பதை எப்படி அறிவது?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஒருவர் போனில் நம்பர் தட்டி அழைத்தால் எப்படி மிகச்சரியாக சிக்னல் இருக்கிறதா இல்லையா என்பதை அறிகிறோம்? காரணம், போனில் உள்ள அபாரமான நெட்வொர்க் இணைப்புத்திறன்தான். இதுவே போனிலுள்ள தகவல்களை எங்கு செல்கின்றன, தடம் பிசியாக இருக்கிறதா என்பதைக் கண்காணிக்கிறது.  ஐஎம்எஸ்ஐ எனும் கோட்டை கண்டுபிடித்து அழைப்பை அனுப்புகிறது. இதுவே போன் அழைக்கும்படி இருக்கிறதா இல்லையா என அழைப்பவருக்கு தகவல் அனுப்புகிறது.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்