இடுகைகள்

இந்தோனேஷியா அவலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குப்பையில் காசு! - இந்தோனேஷியா அவலம்!

படம்
இந்தோனேஷியாவைச் சேர்ந்த பான்குன் என்ற கிராமம், அங்கு கொட்டப்படும் குப்பைகளின் மூலமே விவசாயத்தில் வரும் வருமானத்தை விட அதிகம் சம்பாதித்து வருகிறது. வீட்டின் கதவைத் திறந்தால் டன் கணக்கிலான குப்பைதான் வரவேற்கும். எப்படி லாபம் பார்த்தாலும், குப்பை குப்பைதானே எப்படி சமாளிக்கிறார்கள்? சுப்ரியாடி என்பவர் குப்பைகளைக் கொட்டுவதற்காகவே விவசாயம் செய்யும் தன் நிலத்தை பயன்படுத்தி வருகிறார். நான் முன்பு இங்கு விவசாயம்தான் செய்து வந்தேன். ஆனால் அதைவிட வாராவாரம் இங்கு பிளாஸ்டிக் குப்பைகளில் வருமானம் கிடைக்கிறது என்று புன்னகைக்கிறார். சொல்லும்போதே குப்பை லாரி அவரது நிலத்தில் பிளாஸ்டிக்குகளைக் கொட்ட வருகிறது. அதனை ஒழுங்கு செய்யும் பணியில் சுப்ரியாடி ஈடுபடுகிறார். தற்போது இந்த கிராமத்தில் நான்கு காகித ஆலைகள் இயங்கி வருகின்றன. இவை வெளிநாட்டிலிருந்து காகிதங்களை இறக்குமதி செய்து, தொழிற்சாலைகளுக்கான அட்டைப்ப்பெட்டிகளை உற்பத்தி செய்து அளிக்கின்றன. இந்தோனேஷியாவிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் இருக்கும் சுரபாயா நகரில் தொழிற்சாலைகள் அமையத்தொடங்கியவுடன் இங்கு விவசாய நிலங்கள் மெல்ல குறையத் தொடங்கி