குப்பையில் காசு! - இந்தோனேஷியா அவலம்!




East Java plastic 4





இந்தோனேஷியாவைச் சேர்ந்த பான்குன் என்ற கிராமம், அங்கு கொட்டப்படும் குப்பைகளின் மூலமே விவசாயத்தில் வரும் வருமானத்தை விட அதிகம் சம்பாதித்து வருகிறது.

வீட்டின் கதவைத் திறந்தால் டன் கணக்கிலான குப்பைதான் வரவேற்கும். எப்படி லாபம் பார்த்தாலும், குப்பை குப்பைதானே எப்படி சமாளிக்கிறார்கள்?


சுப்ரியாடி என்பவர் குப்பைகளைக் கொட்டுவதற்காகவே விவசாயம் செய்யும் தன் நிலத்தை பயன்படுத்தி வருகிறார். நான் முன்பு இங்கு விவசாயம்தான் செய்து வந்தேன். ஆனால் அதைவிட வாராவாரம் இங்கு பிளாஸ்டிக் குப்பைகளில் வருமானம் கிடைக்கிறது என்று புன்னகைக்கிறார். சொல்லும்போதே குப்பை லாரி அவரது நிலத்தில் பிளாஸ்டிக்குகளைக் கொட்ட வருகிறது. அதனை ஒழுங்கு செய்யும் பணியில் சுப்ரியாடி ஈடுபடுகிறார்.


தற்போது இந்த கிராமத்தில் நான்கு காகித ஆலைகள் இயங்கி வருகின்றன. இவை வெளிநாட்டிலிருந்து காகிதங்களை இறக்குமதி செய்து, தொழிற்சாலைகளுக்கான அட்டைப்ப்பெட்டிகளை உற்பத்தி செய்து அளிக்கின்றன.

இந்தோனேஷியாவிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் இருக்கும் சுரபாயா நகரில் தொழிற்சாலைகள் அமையத்தொடங்கியவுடன் இங்கு விவசாய நிலங்கள் மெல்ல குறையத் தொடங்கின. பிளாஸ்டிக் பாட்டில்கள் கொரியாவிலிருந்தும், பிஸ்கட் பாக்கெட்டுகள் இங்கிலாந்திலிருந்தும் இங்கே கொண்டு வரப்படுகின்றன. கிராமத்து மக்கள் இக்குப்பைகளின் சூழல் ஆபத்து தெரியாமல் அதிலிருந்து காசு கிடைப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில், இதன் சூழல் பாதிப்புகளை குறைக்க, சீர் செய்ய பல்லாண்டுகள் தேவை.

2016 ஆம் ஆண்டு வணிக அமைச்சகம், காகிதம் தவிர பிற பொருட்கள் அரசு கவனத்திற்குப் பிறகே இறக்குமதி செய்யப்படவேண்டும் என்று சட்டம் இயற்றியது. ஆனால் அனைத்து நாடுகளிலும் சட்டம் எப்படி நூலாக உள்ளதோ அதே நிலையில்தான் இங்கும் உள்ளது.


விதிகளுக்கு புறம்பாக இங்கு 20 சதவீத குப்பைகள் இந்தோனேஷியாவின் நிலங்களை மாசுபடுத்துகின்றன என்கிறது இங்குள்ள ஈகோடான் தன்னார்வ அமைப்பு. இந்தோனேஷியா மட்டுமல்ல, பிற ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளும் உலக நாடுகளின் குப்பை இறக்குமதி வலையில் சிக்கியுள்ளன. குப்பைகளின் வளர்ச்சி 171 சதவீதம் அதிகரித்துள்ளதாக க்ரீன்பீஸ் அமைப்பு கூறியுள்ளது.


நன்றி: சேனல் நியூஸ் ஆசியா