வங்கிகள் தேசியமயமானதன் 50 ஆண்டு நிறைவு!



Image result for indira gandhi illustration



வங்கிச் சீர்த்திருத்தங்களில் முக்கியமானது 14 வங்கிகளை அரசு தேசியமயமாக்கியதுதான். இது காங்கிரசுக்கு சோசலிச அரசு என்று பெயர் தந்ததோடு, தேர்தலிலும் வெல்ல உதவியது. ஏழை மக்களிடம் இதன் மூலம் இந்திராவுக்கு செல்வாக்கு பெருகியது.


1960 ஆம் ஆண்டு பல்வேறு தனியார் வங்கிகள் மக்களின் பணத்தை ஏமாற்றிவிட்டு காணாமல் போய்க்கொண்டிருந்தன. பெங்களூருவில் ஜூலை 12 அன்று வங்கிகளை தேசியமயமாக்குவதை நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாயிடம் கூறினார். ஆனால் அவர், தனியார்மயத்தை , தொழிற்சாலைகளுக்கு ஊக்கம் தருபவர். எப்படி அதை ஏற்பார்? உடனே தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அப்போது இந்திராவுக்கு பதவியை தக்க வைத்துக்கொள்ளும் அவசியமும் இருந்தது.

இந்திராவின் தேசியமயமாக்கல் முடிவுக்கு ஆர்பிஐ ஆளுநர் எல் கே ஜா, ஐ பொருளாதார செயலாளர் ஜே படேல் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். அப்போது வங்கிகள் விவசாயத்திற்கு 2 சதவீதத்திற்கு மட்டுமே வங்கிகள் தந்து வந்தன. தொழிற்சாலைகளுக்கு 68 சதவீத கடன்களை வழங்கியிருந்தன. அப்போதுதான் பசுமைப் புரட்சி திட்டமும் அமலுக்கு வந்தது. திட்டத்தைத் தயாரித்து அமைச்சரவையைக் கூட்டி முடிவைச் சொல்லி அவர்களின் அனுமதி பெற்றது ஜூலை 19 அன்று 5 மணி.  24 மணிநேரத்தில் மசோதாவை தயாரித்து அதனை சட்டமாக இந்திரா அறிவித்தது இரவு 8.30 மணிக்கு. அவரின் ஆதரவாளரான விவி கிரி குடியரசுத்தலைவராக இருந்தபோது பிரச்னை என்ன வரப்போகிறது?


அப்போது 5.7 கோடிகள் இந்த தேசியமய வங்கிகளில் லாபமாக இருந்தது. ஆனால் அரசுகள் பொதுத்துறை வங்கிகளை மிக மோசமாக நடத்தியதால் இன்று 49, 700 கோடி இழப்பில் அரசு கை கொடுக்கவேண்டிய நிலையில் உள்ளது.

செய்தி:லிவ் மின்ட், எகனாமிக் டைம்ஸ் படம் பின்டிரெஸ்ட்