இராணுவ அதிகாரியின் உயிரைப் பறிக்கும் பேராசை! -
ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் எழுதிய
ஆறாவது அறிவு
கண்ணதாசன் பதிப்பகம்
துப்பாக்கியைச் சுடும் திறனை தன் வாழ்வாதாரமாக மாற்ற நினைத்து துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளியை வாங்கி புதிய பொலிவாக மாற்றுகிறார். அதுதான் அவருக்கு சிக்கலைக் கொண்டு வருகிறது. அங்கு அவரைச் சந்திக்கும் பணக்காரர், ஐம்பதாயிரம் டாலர்களுக்கு ஒரு டீல் பேசுகிறார்.
தன் மகனுக்கு ஒன்பதே நாட்களில் குறிபார்த்து சுடக்கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. ஆனால் அவரது மகனுக்கு இருக்கும் மனநலப் பிரச்னைகள் பற்றி பென்சன் தெரிந்துகொள்ளாதது, அவரின் உயிரைப் பறிக்கும் பிரச்னையாக மாறுகிறது.
அவரது மனைவி லூசி, பணக்காரர் சவாண்டோ, அவரது அடிமை வேலைக்கார ர்கள் ரேய்முண்டோ, கார்லோ ஆகியோர் பென்சனின் தினசரி வாழ்க்கையை தலைகீழாக்குகிறார்கள். நினைத்துப் பார்க்க முடியாத திருப்பங்களுடன் கதை நகர்கிறது. கிளைமேக்ஸ் பணம் எல்லாவற்றையும் எப்படி வாங்குகிறது என்பதற்கு ரத்தசாட்சி.
தமிழில் மொழிபெயர்ப்பு என்றாலும், அதிக சேதாரம் இன்றி பன்ச் லைன்களோடு எழுதியுள்ளார் ஆசிரியர். ஸ்டைலீசான கதை.
படித்தால் கீழே நீங்கள் வைக்கவே முடியாது. அவ்வளவு வேகமாக நகருகிறது.
-கோமாளிமேடை டீம்