சார்பியல் விதிக்கு வயது 100!





Paula Wright - Einstein 1946 Colorized 1




சார்பியல் தியரிக்கு வயது 100!

1919 ஆம் ஆண்டு பிரபல இயற்பியலாளர் ஐன்ஸ்டீனால் கூறப்பட்ட சார்பியல் தியரிக்கு இந்த ஆண்டு நூறு வயதாகிறது. 1919 ஆம் மே 29 அன்று ஏற்பட்ட சூரிய கிரகணம், ஐன்ஸ்டீனின் சார்பியல் தியரியை அறிவியலாளர்  மட்டுமல்ல மக்களுக்கும் புரிய வைத்தது.

சிறப்பு சார்பியல் விதி, பொது சார்பியல் விதி என இருவிதிகள் உண்டு. இங்கு கூறப்படுவது பொது சார்பியல் விதி. இதன் அடிப்படையில்தான் இன்று விண்வெளி ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இப்போது சார்பியல் விதி எளிய வடிவில்:

எழுபது கி.மீ வேகத்தில் செல்லும் பேருந்தில்  சென்று கொண்டிருக்கிறீர்கள். இப்போது உங்கள் கையிலுள்ள பந்தை முன்னோக்கி பத்து கி.மீ. வேகத்தில் எறிகிறீர்கள். பந்தின் வேகம் என்ன என்று உங்களைக் கேட்டால், பத்து கி.மீ. என்று கூறுவீர்கள். பேருந்துக்கு வெளியே நிற்பவர், எண்பது கி.மீ. வேகத்தில் பந்தை எறிந்தீர்கள் என்பார். ஒருவர் இருக்கும் இடம் சார்ந்து பொருளின் வேகத்தைப் புரிந்துகொள்கிறார். வேகம் என்ற இடத்தில் ஒளியைப் பொறுத்துங்கள். இங்கு வேறுபாடு, ஒளியின் வேகம் மாறாது என்பதுதான். இதுதான் பொது சார்பியல் விதி.

 சூரியன் போன்ற பெரும் நிறை கொண்ட பொருள், தன் ஈர்ப்புவிசை மூலம் ஒளியை விலக வைக்கிறது என்பது தியரியாக சரிதான். ஆனால்,  நட்சத்திரங்களின் ஒளியையும் சூரியன் தன் ஈர்ப்பு விசையால் மாற்றுகிறது என்பதை விளக்குவது நடைமுறையில் கடினம் என்பதை ஐன்ஸ்டீன் புரிந்துகொண்டார். இதனால் இதனை நிரூபிக்கும் பொறுப்பை அவர் சக ஆய்வாளர்களிடமே விட்டுவிட்டார். இது சிறப்பாக பயனளித்தது. எர்வின் ஃபினாலே, மற்றும் லிக் ஆய்வு மையம் ஆகியோர் ஐன்ஸ்டீன் கூறிய கருத்துகளை உண்மையா பொய்யா என ஆராய்ந்து பார்க்க முயற்சித்தனர். இந்த முயற்சிகள் முதலில் தோல்வியில் முடிந்தன. ஆனால் பின்னர், டைசன், எடிங்க்டன் ஆகியோரின் உதவியால் ஐன்ஸ்டீனின் ஆராய்ச்சிகள் உலகத்துக்கு வந்தது.

ராயல் சொசைட்டி மூலம் பொதுசார்பியல் கோட்பாடுகள் உலகிற்கு அறிய வர, ஜெர்மனி ஆய்வாளர் இங்கிலாந்து , அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டார். ஆப்பிள் விழுவது , கோள்கள் வட்டப்பாதையில் சுற்றிவருவது முதற்கொண்டு இவர் கூறிய விஷயங்கள்தான் அன்றிலிருந்து இன்றுவரை இயற்பியல், வானியல் உலகை ஆள்கிறது. நியூட்டன் உருவாக்கிய சில கொள்கைகள் இதனால் உடைந்து போனது.


நன்றி: அறிவியல் காதலன் பிரபு, நியூ சயின்டிஸ்ட் 

பிரபலமான இடுகைகள்