இடுகைகள்

குறும்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யதார்த்த நீதியை சொல்லும் நீதிக்கதைகள்! - நிஜம் நீதி - சுஜாதா

படம்
  நிஜம் நீதி சுஜாதா 73 பக்கங்கள் நக்கீரன் பதிப்பகம்   பஞ்சதந்திர கதைகளை படித்திருப்போம். அதில் நிறைய நீதிகளை அறிந்திருப்போம். அந்த கதைகளை, காலத்திற்கு ஏற்ப சற்று மேம்படுத்தி பார்த்து நீதிகளை அறிந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் இந்த நூல். முதல் கதையே சுஜாதாவின் குறும்பான   எழுத்தில் ஜிம்மியும் கடவுளும் என்ற தலைப்பில் தொடங்குகிறது. அதற்குப்பிறகு, நூலை நீங்கள் கீழே வைக்க வைக்க மாட்டீர்கள். அந்தளவு கதைகளும் சுவாரசியமாக இருக்கிறது. கதைகள் குழந்தைகளுக்கானவை அல்ல. வயது வந்தவர்களுக்கானவை. இதைப் புரிந்துகொண்டு படிக்கவேண்டும். செயல்படுபவர்கள் பேசமாட்டார்கள், சில துரோகங்கள் எப்போதும் மன்னிக்கப்படுவதில்லை, மோசடிகளை விஞ்ஞானம் கண்டுபிடித்துவிடும் என்ற கதைகள், எழுதப்பட்டவிதத்தில் மனம் கவருபவையாக உள்ளது. இந்த நூலை, காலம்தோறும் சற்று மாற்றி எழுதிக்கொள்ள முடியும் என்பதுதான் இதன் சிறப்பு அம்சம். ஏனெனில் காலம்தோறும் பிழைப்பதற்கான விதிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, அதை வைத்து இதுபோல நிறைய கதைகளை எழுதலாம். உண்மையில் இன்றுள்ள சூழலுக்கு ஏற்ற கதை என எறும்பு, புறா கதையையும், தவளையை இரைய

குடும்ப வாழ்க்கை சோகத்தால், காதலியின் காதலுக்கு நோ சொல்லும் எழுத்தாளக் காதலன் - T&F

படம்
              ட்யூஸ்டேஸ் அண்ட் ஃப்ரைடேஸ் தரன்வீர் சிங் வாரத்தில் இரு நாட்கள் டேட்டிங் செல்லும் எழுத்தாளரும், வழக்குரைஞரும் தங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள காதலை உணர்ந்தார்களா என்பதுதான் கதை.  இந்த கதையை முக்கியமானதாக கருதுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. பெண்கள்தான் காதலை இதில் முதலில் ஏற்றுக்கொண்டு அதனை ஆண்களிடம் தெரிவிக்கிறார்கள். அதற்கு பதிலாக ஆண்கள் பெண்களை தங்களுடைய வீட்டிற்கு வரவேற்கவில்லை. பெண்களின் இடத்திற்கே வந்து வசிக்கிறார்கள். மும்பையில் வசிக்கும் சியா வழக்குரைஞர். அவர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். தனது நிறுவனத்தில் வாடிக்கையாளரான நடிகருடன் கூட டேட்டிங் செல்கிறார். ஆனாலும் கூட இதயத்திற்கு நெருக்கமாக அந்த உறவு அமையவில்லை. அனைத்து உறவுகளிலும் கறாரான விதிமுறைகளை கையாளும் பழக்கம் கொண்டவர். அதன்மூலம் தான் காயப்படக்கூடாது என்பதாக நினைக்கிறார்.  நடிகருடனான பிரேக் நடந்த பிறகு அடுத்த காதலை நிச்சயம் தான் சந்திக்கும் பிற ஆண்களுடன் வைத்துக்கொள்ளலாம். நிறுவன வாடிக்கையாளர்களுடன் செய்யக்கூடாது என உறுதியாக நினைக்கிறார். ஆனால் சியாவிற்கு அடுத்த காதலும் லண்டனில் இருந்து வரும் எழுத்தாளர் வரு