யதார்த்த நீதியை சொல்லும் நீதிக்கதைகள்! - நிஜம் நீதி - சுஜாதா

 









நிஜம் நீதி

சுஜாதா

73 பக்கங்கள்

நக்கீரன் பதிப்பகம்

 

பஞ்சதந்திர கதைகளை படித்திருப்போம். அதில் நிறைய நீதிகளை அறிந்திருப்போம். அந்த கதைகளை, காலத்திற்கு ஏற்ப சற்று மேம்படுத்தி பார்த்து நீதிகளை அறிந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் இந்த நூல்.

முதல் கதையே சுஜாதாவின் குறும்பான  எழுத்தில் ஜிம்மியும் கடவுளும் என்ற தலைப்பில் தொடங்குகிறது. அதற்குப்பிறகு, நூலை நீங்கள் கீழே வைக்க வைக்க மாட்டீர்கள். அந்தளவு கதைகளும் சுவாரசியமாக இருக்கிறது. கதைகள் குழந்தைகளுக்கானவை அல்ல. வயது வந்தவர்களுக்கானவை. இதைப் புரிந்துகொண்டு படிக்கவேண்டும்.

செயல்படுபவர்கள் பேசமாட்டார்கள், சில துரோகங்கள் எப்போதும் மன்னிக்கப்படுவதில்லை, மோசடிகளை விஞ்ஞானம் கண்டுபிடித்துவிடும் என்ற கதைகள், எழுதப்பட்டவிதத்தில் மனம் கவருபவையாக உள்ளது.

இந்த நூலை, காலம்தோறும் சற்று மாற்றி எழுதிக்கொள்ள முடியும் என்பதுதான் இதன் சிறப்பு அம்சம். ஏனெனில் காலம்தோறும் பிழைப்பதற்கான விதிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, அதை வைத்து இதுபோல நிறைய கதைகளை எழுதலாம்.

உண்மையில் இன்றுள்ள சூழலுக்கு ஏற்ற கதை என எறும்பு, புறா கதையையும், தவளையை இரையாக பிடித்து போன கழுகு கதையையும் உதாரணமாக கூறலாம். இவை இரண்டும் அவநம்பிக்கை தருவதாக சிலர் நினைக்கலாம். ஆனால் வாழ்க்கையின் நிச்சயமின்மையை தெளிவாக உணர்த்துபவை இந்த இரண்டு கதைகள்தான்.

 கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்