இடுகைகள்

நன்கொடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துறை சார்ந்த பிரபலங்கள், தங்கள் இதயத்தை திறந்து பேசும் பொதுமேடை உரையாடல்!

படம்
            துறை சார்ந்த பிரபலங்கள், தங்கள் இதயத்தை திறந்து பேசும் பொதுமேடை உரையாடல்! டெட் டாக்ஸ் உரைகளை யூட்யூபில் பார்த்திருப்பீர்கள். அதில் துறை சார்ந்த பிரபலம் ஒருவர், மேடைக்கு வந்து தன்னுடைய அனுபவங்களை அங்கு கூடியுள்ள மக்களிடம் பகிர்ந்துகொள்வார். அவர் தொழிலதிபராக, திரைப்பட இயக்குநராக, பாடகராக, விளையாட்டு வீரராக இருக்கலாம். தனது அனுபவங்களை கூடியுள்ள மக்களுக்கு கடத்துகிறார். இந்த பேச்சு நீண்டதாக இருக்கலாம். அல்லது சிறியதாக இருக்கலாம். ஆனால், ஒருவர் தன்னுடைய கதையை பிறருக்கு கூறுகிறார். கதை சொல்லும், அதை கேட்கும் ஆர்வம் உடையவர்கள்தான் நாம். எனவே டெட் டாக்ஸ் மகத்தான வெற்றி பெற்று உள்ளது. இதை நகல் செய்து டென்சென்ட் நியூஸ் நிறுவனம் சீனாவில் 2016ஆம் ஆண்டு ஸ்டார் டாக்ஸ் என்ற நிகழ்ச்சியைத் தொடங்கியது. இதில், நூறு துறை சார்ந்த பிரபலங்கள் தங்கள் அனுபவங்களை பேசுவார்கள். மக்கள் அவர்களின் அனுபவங்களை கேட்டு ரசிக்கலாம். இது மக்களில் பலருக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்துள்ளது. பிரபலங்கள் தங்களுடைய தொழில் வாழ்க்கையைக் கடந்து, வேறு தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களையும்  கூறுகி...

பிரச்னைகளைத் தீர்க்க எடுத்த முடிவுகளுக்காக வருந்தப்போவதில்லை!

படம்
        நேர்காணல் டேரன் வாக்கர் நீங்கள் ஃபோர்ட் பவுண்டேஷனை விட்டு விரைவில் விலகப்போகிறீர்கள். வரலாற்றில் இந்த நேரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஜனநாயகத்தில் இக்காலகட்டம் சவாலானது. நம்பிக்கைதான், ஜனநாயகத்திற்கு பிராணவாயு போன்றது. சமத்துவமின்மை, நம்பிக்கைக்கு எதிராக மாறுகிறது. நம்பிக்கையில்லாத மனிதர்கள், இதுவரை சமூகத்தில் இது சாத்தியமா என்று நினைத்துப்பார்க்காத செயல்களை செய்யத் தொடங்கியுள்ளனர். அதுதான் என்னை  கவலையில் ஆழ்த்துகிறது. ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறதா? நல்ல காற்றை சுவாசிப்பீர்கள், மோசமான உணவை சாப்பிடும் சூழல் நேராது. மனிதர்கள் தங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு நகர்வது சற்று வேறுவிதமானது. நான் ஃபோர்டை விட்டு வெளியேறுவதை மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். எனக்கு மிக குறைவாகவே நண்பர்கள் உள்ளனர். எதிர்காலத்தில் உண்மையான நண்பர்களோடு சேர்ந்து உணவருந்துவேன். சம்பளத்தில் பாகுபாடு உள்ள சூழ்நிலையில், மக்கள் அதை எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஹென்றி ஃபோர்ட் போன்றோர் அளிக்கும் பேரளவிலான நிதி என்பது ச...

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது! - அரசியல் கட்சிகளின் வருமானம்

படம்
            காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது! இந்தியாவில் தேர்தல் நன்கொடைகளை கட்சிகள் பெறுவது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென வலதுசாரி மதவாத ஆளும்கட்சி, தனியாக சட்டம் ஒன்றை உருவாக்கியது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக பயன்களைப் பெற்றது. அதே சட்டங்களை பிற கட்சிகளும் பயன்படுத்தின. மதவாத ஆளும்கட்சி, இன்னும் சற்று மேலே போய் நிதி அளிப்பவர்களை, தொழில் நிறுவனங்களை அமலாக்கத்துறை, வருமானத்துறை, தேசிய புலனாய்வு முகமை வைத்து மிரட்டி பேரளவிலான நிதியைப் பெற்றது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் ஒரு பார்முலா உருவானது போல, ரெய்டு நடந்த சில வார, மாதங்களில் கட்சிக்கு நிதி வரவு அதிகரித்தது. இதைப்பற்றிய உண்மையான செய்திகளை அறிய நியூஸ்மினிட், நியூஸ் லாண்ட்ரி, தி வயர், கேரவன் ஆகிய ஊடகங்களை அணுகலாம். தேர்தல் பத்திரம் மூலம் பேரளவிலான நிதியை ஆளும் கட்சி திரட்டியபிறகு, அதுவரை மீளாத உறக்கத்திலிருந்த நீதிமன்றம் எழுந்தது. தேர்தல் பத்திரம் அச்சிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பிறகு நடந்ததெல்லாம் சன்டிவி சீரியல் திருப்பங்களை விட நகைச்சுவையானது. இரண்டு தேர்தல்கள...

பெண்கள் உயிர்பிழைத்தால் உலகமும் உயிர் பிழைத்திருக்கும்! - லீனா நாயர்!

படம்
  லீனா நாயர் leena nair by alana semules பெண்கள் உயிர்பிழைத்தால் உலகமும் உயிர் பிழைத்திருக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர் லீனா நாயர். அந்த நம்பிக்கையில்தான் தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டு வருகிறார். ஆறு ஆண்டுகள் யுனிலீவரில் வேலை செய்தார். தற்போது சேனல் என்ற பேஷன் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார். இவர் பொறுப்புக்கு வந்தபிறகு, நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள உள்ள பெண் தலைவர்களின் எண்ணிக்கை அறுபது சதவீதமாக அதிகரித்துள்ளது.  நமக்கு பின்னே ஆற்றல் வாய்ந்த தலைவர் பின்னே உள்ளார் என்பதை அறியவேண்டிய காலம் இது. நாங்கள் கலந்துரையாடலின்போது, தங்கள் கருத்துகளை கூற வரும் அனைவரையும் கவனித்து அவர்களின் குரல்களையும் கேட்கிறோம் என்றார் லீனா நாயர். சானல் நிறுவனத்தின் அறக்கட்டளை ஃபாண்டேஷன் சானல் அமைப்புக்கு கொடுக்கும் நிதி கூடுதலாகியுள்ளது. இருபது மில்லியன் டாலர்களிலிருந்து நூறு மில்லியன் என நன்கொடை நிதி அதிகரித்துள்ளது. இந்த நிதியை வைத்து திருமணம் செய்யாமல் தனியாக வாழும் பெண்கள், மாங்குரோவ் காடுகளை வளர்க்கும் பெண்கள், பள்ளி செல்லும் சிறுமிகள் ஆகியோருக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறார...

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை சேர்த்து சாதித்த பிராந்திய கட்சிகள்!

படம்
  தேர்தல் பத்திரங்களில் நிதி சேர்த்த அரசியல் கட்சிகள்! 2020-2021ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற தொகையை ஐந்து பிராந்திய கட்சிகள் வெளியிட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக முன்னிலை வகிக்கிறது. இந்த கட்சி, 2020-21  காலகட்டத்தில் மட்டும் 218.5  கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர தொகை பற்றி  ஜனநாயக சீர்த்திருத்த கூட்டமைப்பு ஏடிஆர் செய்தி வெளியிட்டுள்ளது.  திமுக -218.5 கோடி தெலுங்குதேச கட்சி - 54.8 கோடி அதிமுக -42.4 கோடி ஐக்கிய ஜனதாதளம் - 24.3 கோடி தெலங்கான ராஷ்டிர சமிதி -22.3 கோடி   மொத்தமாக இந்த கட்சிகள் பெற்ற தொகை 434.3  கோடி. இது கட்சிகளின் மொத்த வருமானத்தில் 83 சதவீதமாகும். தன்னார்வ நிதியாக கட்சிகள் பெற்றுள்ள தொகை 250.60 கோடி. வருமானத்தில் இதன் அளவு 47.34 சதவீதம். பிற வழியில் பெற்ற நிதி சதவீதம் 23.9 சதவீதம்.  மொத்தமுள்ள 31 கட்சிகளில் 5 கட்சிகள் மட்டும்தான் நிதி பற்றிய தகவலை வெளியே கூறியுள்ளன. 17 பிராந்தியக் கட்சிகள் தமது நிதியை செலவிடாமல் வைத்திருப்பதையும் கூறியுள்ளன.  டைம்ஸ் ஆ...

பில், மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் அமைப்பு - முக்கியத்துவம் பெறும் தன்னார்வ அமைப்பு!

படம்
  பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு, கோவிட் -19 நோயாளிகளுக்கான பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.,  2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பவுண்டேஷன் மூலம் பல்வேறு நன்கொடையாளிகளை ஒன்றாக இணைத்து உலக நாடுகளில் பல்வேறு மனிதநேய செயல்பாடுகளை செய்து வருகின்றனர்.  வறுமை மற்றும் சுகாதாரச் செயல்பாடுகளை அதிகம் செய்கிற தொண்டு அமைப்பு இது. மெலிண்டா கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கணினி பொறியாளராக இருந்தவர். பின்னர் அங்கு மேலாளராக பணியாற்றினார்.  மெலிண்டா 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் ரேமண்ட் ஜோசப் ஜூனியர், எலைன் ஆக்னஸ் அமெர்லாண்ட்.  புனித மோனிகா கத்தோலிக்க பள்ளியில் பயின்றார். வகுப்பில் முதலிடம் பெற்றவர், கணினி அறிவியலில் ஆர்வம் காட்டினார். தனது பதினான்கு வயதில் டியூக் பல்கலையில் கணினி அறிவியல் பட்டம் பெற்றார். பிறகுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு விற்பனை மேலாளராக சேர்ந்து 1987இல் அதன் நிறுவனராக பில் கேட்ஸை சந்தித்தார்.  1994ஆம் ஆண்டு திருமணம் செய்தவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உண்டு...

5 ஆயிரம் நன்கொடை வழங்கலாமே! கடிதங்கள்

படம்
             மருந்தே உணவு ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இந்த வாரம் ஊருக்கு சென்று அம்மாவுடன் ஈரோடு சித்த மருத்துவமனைக்கு சென்றேன் . எனக்கு ஒவ்வாமை மருந்துகளுடன் அம்மாவுக்கு தலைசுற்றல் பிரச்னைக்கு கிலோ கணக்கில் கஷாயம் , மாத்திரைகள் , லேகியங்களை வாங்கி வந்தோம் . அம்மாவுக்கு நரம்புரீதியான பிரச்னை தீவிரமாகிக்கொண்டே வருகிறது . அலோபதி அவளுக்கு பெரிதாக கேட்கவில்லை . எனவே நானே சித்தமருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன் . எந்த பிரச்னைக்கும் அடுத்தவர்களை மட்டுமே குறைசொல்லும் அற்புத குணம் கொண்டவள் , என்னுடைய யோசனையை உடனே ஏற்றுக்கொண்டாள் . சித்த மருந்துகளை சாப்பிடுவதில் உள்ள பிரச்னை பத்தியம்தான் . மருந்து கால் பகுதி , பத்தியம் முக்கால் பகுதி என சாப்பிட்டால் உடலின் தன்மையே சில மாதங்களுக்கு பிறகு மாறிவிடுகிறது . எனக்கு கத்தரிக்காய் , கிழங்கு வகைகளை தவிர்க்க சொல்லிவிட்டதால் ஹோட்டலில் அவற்றை பரிமாறுவதை பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது . மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது , இவற்றை சாப்பிட்டு . நானே சமைத்து சாப்பிட்டு வருவதால...

க்ரவுட் ஃபண்டிங் மூலம் தேர்தலில் ஊழல் குறையுமா?

படம்
  மக்களுக்காக மக்கள் பணம் தரலாமா? தேர்தல் என்பது பெரும் பட்ஜெட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை நடத்துவதற்கு அரசுக்கு ஆகும் செலவைவிட கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அதிக செலவு பிடிக்கிறது.  தொழிலதிபர்கள், நடிகர்கள் போட்டியிடும்போது, தொண்டர்களைத் திரட்டுவதற்கான செலவு, உணவு ஆகியவற்றை அவர்கள் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் சாதாரண நிலையில் உள்ள கம்யூனிஸ்டுகள் போன்றோர் போட்டியிடும்போது, உண்டியல் குலுக்கித்தான் நிலையை சமாளிக்க வேண்டி உள்ளது. ஆனாலும் இது போதுமானதல்ல. எனவே, தற்போது அவர் டெமாக்கிரசி என்ற இணைய வழி நன்கொடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த வேட்பாளருக்கு நீங்கள் நன்கொடைகளை வழங்கலாம்.  கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் பொருட்களை வெளியிட்டு, அப்பொருள் உங்களுக்கு பிடித்திருந்தால் நிதியுதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்களே அதே பாணிதான். தற்போது அவர் டெமாக்கிரசி நன்கொடைத் திட்டத்தில் 14 வகை நிதிகோரும் முறைகள் செயல்பாட்டில் உள்ளன. இதனை பிலால் ஸைதி தொடங்கினார். “எங்களுடைய திட்டத்தின் வெற்றியால், இன்று சர்வர் மீது சிலர் தாக்குதல் நடத்தி வலைத்தளத்தை மூட முயற்சிக்கின்றன...

வாரி வழங்கும் ஆசிய பணக்காரர்கள்! கல்வி, சமூகம், வறுமை ஆகியவற்றுக்கே முதலிடம்

படம்
      asia rich mans- pixabay       மானுவேல் வில்லர் விஸ்டா மால் அண்ட் விஸ்டா லேண்ட் அண்ட் லேண்ட்ஸ்கேப்ஸ் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தக்காரர் . இரண்டு ஹெக்டேர் நிலத்தை கத்தோலிக்க பள்ளி கட்டுவதற்கு தானமாக அளித்துள்ளார் . பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்திற்கு ஐந்து ஹெக்டேர் நிலத்தை தானமாக அளித்துள்ளார் . மேற்சொன்ன தான நடவடிக்கையின் மதிப்பு 165 மில்லியன் டாலர்கள் . நான்கு பிலிப்பைன்ஸ் பள்ளிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்துகொடுத்துள்ளார் . தேவாலயங்களுக்கான நிதியுதவி , கொரோனாவுக்கு எதிரான பல்வேறு பொருட்கள் என வழங்கி வருகிறார் . எலினார் க்வோக் லா க்வாய் சுன் சா சா இன்டர்நேஷனல் ஹாங்காங் ஆசியாவின் அழகு சாதனப் பொருட்கள் நிறுவனமான சா சா நிறுவனத்தின் துணை நிறுவனர் சுன்தான் . இவர் தற்போது துணைத்தலைவராக நிறுவனத்தில் உள்ளார் . 9 மில்லியன் டாலர்களை பல்வேறு அறப்பணிகளுக்கு வழங்கியுள்ளார் . 19 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த போ லியுங் குக் என்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிறுவனத்திற்கு நிதியுதவியை அளித்துள்ளார...

அசத்தும் வள்ளல் பணக்காரர்கள்! - கல்வி, மருத்துவச்சேவைக்காக பணத்தை செலவிடும் பணக்கார தொழிலதிபர்கள்

படம்
                  வள்ளல் பணக்காரர்கள் ஹியூ டங் சூ ஜிஎஸ் கால்டெக்ஸ் - தென்கொரியா கடந்த ஆகஸ்ட் மாதம் ஹியூ ஜி என்ற இவரது நாற்பது வயது மகள் இறந்துபோனார் . அவரது நினைவாக பௌண்டேஷன் ஒன்றைத் தொடங்கி கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறார் . எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனர் ஹியூ டங் சூ , 1.9 மில்லியன் மதிப்பிலான பங்குகளை மகளின் பெயரில் அமைத்துள்ள பௌண்டேஷனுக்கு வழங்கியுள்ளார் . இதற்கு முன்னர் 33 மில்லியன் மதிப்பிலான தொகையை டாங்ஹெங் நலப்பணி பௌண்டேஷனுக்கு வழங்கியுள்ளார் . இந்த பௌண்டேஷன் இவரது குடும்பத்தாரால் நி்ர்வகிக்கப்படுகிறது . இதன் தலைவர் ஹியூ டங் சூதான் . 1973 இல் கால்டெக்ஸ் நிறுவனத்தில் ஹியூ இணைந்தார் . இவரது குடும்ப நிறுவனமான ஜிஎஸ் குழுமத்தை கால்டெக்ஸ் நிறுவனம் கட்டுப்படுத்துகிறது . இவர் செஸ்ட் ஆப் கொரியா என்ற இனக்குழுவை நிர்வாகம் செய்துவருகிறார் . இந்த அமைப்பு நாட்டிலேயே பெரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும் . ராபர்ட் என்ஜி , பிலிப் என்ஜி ராபர்ட் என்ஜி - சினோ குழுமம் பிலிப் என்ஜி - ஈஸ்ட் கார்ப்பரேஷன் இரு...

பள்ளியை மாற்றிய ஆசிரியர்! -பீகாரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் அகிலேஸ்வர் பதக்

படம்
                               பள்ளி ஆசிரியர் அகிலேஸ்வர் பதக்   பள்ளியை மாற்றிய ஆசிரியர் பீகாரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் அகிலேஸ்வர் பதக், 2020ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதை வாங்கியுள்ளார். பீகாரிலுள்ள சரண் மாவட்டைச்சேர்ந்த சன்புரா பைஸ்மாரா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இவர். என்ன செய்தார் என்று இவருக்கு நல்லாசிரியர் விருது? இந்த அரசுப்பள்ளிக்கு மாற்றலாகி வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. முதலில் வந்தபோது பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிவறை குடிக்க குடிநீர் என எந்த வசதியும் இல்லை என்பதைக் கவனித்தார். இதனால் அங்குள்ள மக்களை சந்தித்தார் அவர்களிடம் பள்ளியின் நிலையைச் சொல்லி நிதியுதவியைக்கேட்டார். அவர்கள் மூலம் 98 ஆயிரம் ரூபாய் நன்கொடை கிடைத்துது. தனது சேமிப்பிலிருந்து 21 ஆயிரம் ரூபாயை அதில் தன் சார்பில் கொடு்த்தார். பள்ளி ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து 5 ஆயிரம் ரூபாய் தந்தனர். இதன் காரணமாக இன்று பள்ளியில் சிசிடிவி கேமரா உள்ளது. சாப்பிடுவதற்கான அறை உள்ளது. மா...