இடுகைகள்

தேசியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டாவது வாய்ப்பில் அரசியல்வாதியை திட்டம்போட்டு பழிவாங்கும் அரசு வழக்குரைஞர்! அகெய்ன் மை லைஃப்

படம்
  அகெய்ன் லைஃப் தென்கொரிய டிவி டிராமா எஸ்பிஎஸ்  லீ ஜூன் ஜி, கிம் ஜி யூன், கையாங் இயாங் இயக்குநர் ஹன் சுல் ஹூ வெப் நாவல் எழுத்தாளர் லீ ஹா நால் ராகுட்டன் விக்கி ஆப் சியோயில் உள்ள அரசு வழக்குரைஞர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்பவர், கிம் ஹியூ வூ. இவர் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினரான அதிகாரம் பொருந்திய ஜே டே சியோப் என்பவரை   விசாரணைக்கு அழைக்கிறார். அவருக்கு எதிரான சாட்சியத்தை வழக்குரைஞர் தக்க வைத்த தைரியத்தில் இதை செய்கிறார். ஆனால், சாட்சியத்தை கொன்றதோடு, தன்னை வழக்குரைஞர் நிறுவனத்திற்கு வரவைத்த கிம் ஹியூ வூவையும் இரக்கமே இல்லாத அடியாள் மூலம் அடித்து   போதை ஊசி போட்டு கொன்று கட்டிடத்தில் இருந்து தூக்கி வீச செய்கிறார் ஜே டே சியோப். இது முதல் எபிசோடில் நடந்துவிடுகிறது. கதை அம்புட்டுத்தானா என தோன்றுகிறதா அங்க தான் முக்கியமான ட்விஸ்ட்.   இறந்துபோன வழக்குரைஞர் கிம்மின் உடலில் இருந்து ஆத்மா தனியாக பிரிந்து இறந்துபோன கட்டிட மொட்டை மாடியில் நிற்கிறது. தனக்கு என்ன நேர்ந்தது என தெரியாமல் பதற்றத்தில் இருக்கிறது. அப்போது, அவரது அருகில் சிவப்பு உடை அணிந்த பெ

பொருளாதாரத்தை அடித்து நொறுக்கும் ஊழல்!

படம்
பொருளாதார வளர்ச்சியை சிதைக்கும் ஊழல்!  இந்தியா, சீனா என இரண்டு நாடுகளிலும் ஊழல் பிரச்னை உள்ளது. ஆனால் சீனா ஊழலையும் மிஞ்சி பொருளாதார வளர்ச்சியில் சாதனை செய்து வருகிறது.  2019ஆம் ஆண்டில் வெளியான ஊழல் பட்டியலில் சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் 80ஆவது இடத்தில் உள்ளன. சீனாவில் ஊழல் பிரச்னை இந்தியாவைப் போலவே இருந்தாலும் 1961ஆம் ஆண்டு தொடங்கி அங்கு பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் வளர்ந்து வருகிறது. 1971 தொடங்கி 22 ஆண்டுகளாக 27 சதவீத பொருளாதார வளர்ச்சியை சீனா கொண்டுள்ளது. உலகளவிலான ஏற்றுமதிச் சந்தையில் இதன் பங்களிப்பு 1948இல் 0.3 இருந்து 2019இல் 13.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.  ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆய்வுப்படி உலகளவில் உற்பத்திச்சந்தையில் சீனா, 28.4 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பங்கு அதேகாலகட்டத்தில் 3% ஆகும்.  இரண்டரை லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் ஏற்றுமதியை சீனா செய்து வருகிறது. இந்தவகையில் கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு 1.7 சதவீதமாக உள்ளது.  இந்தியாவில் ஊழல் என்பது தேர்தல் மூலமாக நாடெங்கும் பரவலாக்கப்பட்டது. இதற்கு எதிராக 1974இல் ஜெயப்பி

தேசியவாதத்தின் தந்தைகள் உருவானது இப்படித்தான்!

படம்
மொழிபெயர்ப்பு நேர்காணல் பேராசிரியர். சுனில் பி இளையிடோம் கேரளத்தின் முக்கியமான கலாசார விமர்சகர் சுனில், எழுதுவதை விட இவரின் பொதுமேடைப் பேச்சு அனைத்து மக்களாலும் ரசிக்கப்படுகிறது. இவரின் முக்கியமான படைப்பு  political unconsciousness of Modernism .  மார்க்சியத்தை புகழ்ந்து மட்டும் பேசாமல் அதன் பிரச்னைகளை பட்டென போட்டு உடைப்பதோடு அண்மையில் பாஜக முன்னெடுத்து வரும் தேசியவாத வரலாறு, நாராயணகுரு என பொதுமேடையில் அசத்தலாக பேசிவருகிறார். இசை, இலக்கியம், நடனம் என்பதைத் தாண்டி தேசியவாதம், அதன் வரலாறு வரை பேசுகிறீர்கள். உங்களது எழுத்திலும் பேச்சிலும் கூட தத்துவத்தின் சாயல் உள்ளது. எப்படி இப்படி ஒரு பாணியை பிடித்தீர்கள்.  கலாசார வரலாற்றில் நவீனத்தன்மையை ஆராய்வதே என்னுடைய பாணி. நான் இதுவரை செய்த ஆராய்ச்சிகளை இம்முறையில் செய்துள்ளேன். ஒரே ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதை  நோக்கியே எழுதவேண்டும் பேசவேண்டும் என்பதில்லை. மார்க்சும் இம்முறையில் எதையும் வலியுறுத்தியவரில்லை. நான் கைக்கொள்ளும் முறையில் தத்துவத்தில்  சிக்கிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளதால், நான் இம்முறையை அனைவருக்கும் பரிந்துரைக்க

ஒரு நாடு, பல மொழிகள்! - மொழியை நொறுக்கும் அரசியல்!

படம்
pinterest தெரிஞ்சுக்கோ! மொழித்தீ! உள்துறை அமைச்சர் இந்தி மொழியை மாநிலங்கள் இரண்டாவது மொழியாக கற்க வேண்டும் என்று இந்தி திவஸ் நிகழ்ச்சியில் அறிவிக்கிறார். மத்திய அரசு அமைச்சர்கள் ஆண்டுதோறும் இந்தி மொழி தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம்தான். ஆனால் இம்முறை அமித் ஷா உள்துறை அமைச்சராகி பங்கேற்று சர்ச்சைக்கு திரி கொளுத்தியிருக்கிறார். இந்தி என்றாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பொறுத்தவரை அது தற்காலிகம்தான். சமஸ்கிருதத்தை இந்தியின் இடத்தில் பொருத்துவது அவர்களின் லட்சியம். அதற்கான அடிக்கல்லை ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவுக்கு முன்பே நடத்தொடங்கிவிட்டனர். கல்வி விஷயத்தில் பாஜக அரசு ஏற்கனவே தன் கருத்துகளை நடவு செய்யத் தொடங்கிவிட்டது. வரலாற்றை திருத்தி தனக்கேற்றபடி மாற்றி எழுத தொடங்கிவிட்டனர். அதிகாரம் கையில் இருக்க கவலை என்ன? எனது சொல்லே  கட்டளை, அதுவே  சாசனம் என தினமொரு கட்டளை டெல்லியிலிருந்து வருகிறது.  நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை யாரும் விமர்சிக்காமலிருக்க ஏதேனும் ஒரு அறிவிப்பை வீசிக்கொண்டே இருக்கிறது மத்திய அரசு. ஓகே. மொழி பற்றிய டேட்டா இதோ! 22 மொழிகளை இந்திய அரசு அதிக

அறம் சார் இதழியல் பணி! - தினமணி 85

படம்
குறுக சொல் நிமிர் கீர்த்தி! ஓர் பத்திரிகை ஏன் தொடங்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை வெளியிட்டு, அதன் பெயரைக்கூட வாசகர்கள் சூட்டி பத்திரிகை உருவாகிறது என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தினமணி அப்படித்தான் உருவானது. வளர்ந்த நகரங்களில் இல்லாமல் விழுப்புரம், தருமபுரி போன்ற பகுதிகளில் பத்திரிகை பதிப்புகள் தொடங்கியது முதல் அனைத்தும் புதுமைதான். மத்திய, மாநிலச் செய்திகளை சார்பின்றி வெளியிடும் தன்மை தமிழகத்திற்கு புதியது. தினமணிக்கென்ற தனிக் கொள்கை தலையங்கம் மற்றும் நடுப்பக்க கட்டுரைகள். அன்றிலிருந்து இன்றுவரை அதனைச் சிறப்பாகச் செய்து வருகிறது. இக்கட்டுரைகளின் நேர்த்தி இன்றும் குறையாமல் இருப்பது ஆசிரியர்களின் கீர்த்தியைச் சொல்லுகிறது.  தினமணி 85  இதழ் வியாழன் அன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 96 பக்கங்கள். இதுவரை தினமணி இதழில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் பற்றி அவருடன் பணிபுரிந்தவர்கள் நேர்த்தியாக நினைவுகூர்ந்து கட்டுரைகளை செம்மையாக எழுதியுள்ளனர். 2007 ஆம் ஆண்டிலிருந்து தினமணி இதழின் ஆசிரியராக இருப்பவரான கி.வைத்தியநாதன், இதழ் பற்றிய தன் கருத்து இரண்டு பக்கங்களில் எழுதிய