இடுகைகள்

காமத்துப்பால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காமத்துப்பாலை எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என அடையாளம் காட்டும் பாட்காஸ்ட்!

படம்
  ஜியோ சாவன் ஆப்பைத் திறந்து பாஸ்வேர்டு பஞ்சாயத்துகளை முடித்துவிட்டால், அடுத்து பாட்காஸ்டை திறங்கள். அதில்தான் வள்ளுவம் பேசும் காமம் என்ற பாட்காஸ்ட் உள்ளது. கட்டுமானக்கலைஞரான ஆதவன் சுந்தரமூர்த்தி திருக்குறளில் உள்ள காமத்துப்பால் குறள்களை விளக்கிப் பேசுகிறார்.  ஆரம்பமே அதிரடிதான். தன்னை பாட்காஸ்ட் தொடரில் ஆய்த எழுத்து என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். பொதுவாக போர், வன்முறை, கோபம் என பலவற்றையும் பேசும் நாம்  அன்பைப் பேசும் இடங்களில் மௌனமே சாதிக்கிறோம். பள்ளிகளில் இதனை பலரும் நினைவுகூரமுடியும். ஆண், பெண் உடல் வேறுபாடுகளை அறிவியலில் நூலில் பார்த்து கூச்சப்படுவது, தமிழில் காமத்துப்பாலை ஜஸ்ட் லைக் தட் மனப்பாடம் செய்துவிடுங்கள் என சொல்லிவிட்டு தமிழ் ஆசிரியர், ஆசிரியை நகர்ந்து விடுவதன் காரணம் என்னவென்று இன்றுவரை யாருக்கும் புரியாது.  பவா செல்லத்துரை மூலம் ஊக்கம் பெற்று பாட்காஸ்டை உருவாக்கியுள்ள ஆதவன், பகிர்ந்துகொள்ளும் முதல் எபிசோட் விஷயங்களும் இதுதான். சிம்பிளான இன்ட்ரோவாக அமைகிறது. டிசம்பர் 2020இல் வள்ளுவம் பேசும் காமத்தைத் தொடங்கியிருக்கிறார். காமத்துப்பாலில் காதல், காமம், அன்பு, பிரிவு,