இடுகைகள்

தாய்லாந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செக்ஸ் குற்றவாளிகளை வேட்டையாடி பழியை மர்மநாவல் விற்கும் புத்தகடைக்காரர் மீது போடும் கொலைகாரன் யார்?

படம்
  லீக்கிங் புக்ஸ்டோர்  தாய்லாந்து டிராமா - டி டிராமா 10 எபிசோடுகள் மழைக்கு ஒழுகும் புத்தக கடை, இதை கேட்கவே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? அதேதான் தொடரின் பலமும் கூட. மொத்தம் நான்கு கல்லூரி நண்பர்கள் டிடக்‌ஷன் எனும் மர்மக்கதைகள் மட்டுமே விற்கும் புத்தக கடையில் சந்திக்கிறார்கள். இதில் முதன்மையானவர், அதாவது நாயகன் காவோ வென். இவர்தான் நால்வரில் சற்று வசதியான வீட்டுப்பிள்ளை, முன்னாள் நீதிபதியின் மகன். ஆனால் சட்டம் படிக்காமல் புத்தக கடை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார். அடுத்து, உளவியல் மருத்துவராக உள்ள நண்பர், அவரோடு ஒரே அறையில் வசிக்கும் பெண் தோழி, அவள், தன்னார்வ தொண்டுநிறுவனத்தில் வேலை செய்கிறாள். இவர்களுக்கு அடுத்து கல்லூரியில் ஜூனியராக படித்த லான் என்ற இளம்பெண். இவர் மருந்துக்கடையி்ல் வேலை செய்கிறார்.  காவோ வென்,புத்தக கடை வருமானத்தை வைத்துதான் தனது செலவுகளை சமாளிக்கிறார். மர்மநாவல் போட்டி ஒன்றில் பங்கேற்று கதை ஒன்றை எழுதி வருகிறார். தி யெல்லா டாக்சி கேப் என்பது அதன் பெயர். இதில் பரிசாக கிடைக்கும் பணத்தை வைத்து கடையில் மழைநீர் ஒழுகும் பிரச்னையை சரி செய்ய நினைக்கிறார். நண்பர்க

தாய்லாந்தில் சீர்த்திருத்தங்களை செய்யத்துடிக்கும் இளம் அரசியல் தலைவர் - பிடா

படம்
    pita,move forward party       எங்களுக்கும் நேரம் வரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூவ் ஃபார்வேர்ட் கட்சித்தலைவர் பிடா லிம்ஜாரோன்ராட் மேலேயுள்ள தலைப்பைத்தான் தனக்குத்தானே இப்படித்தான் சொல்லிக்கொண்டே பிரசாரம் செய்து வருகிறார் . பிடா செல்வாக்கான பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் . இவரது மாமா பாடுங் , முன்னாள் பிரதமர் தக்‌ஷினின் உதவியாளராக வேலை செய்தவர் . பிடா பாங்காக்கின் தம்மாசாட் பல்கலைக்கழகத்தில் படித்தவர் பிறகு மேற்படிப்பை அமெரிக்காவில் ஹார்வர்டில் படித்தார் . பிறகு நாடு திரும்பி குடும்பத்தொழிலான வேளாண்மை சார்ந்த தொழிலில் இயங்கி வந்தவர் , இப்போது அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார் . தாய்லாந்து நாட்டில் ஜனநாயகத்தன்மையை ஏற்படுத்தவேண்டும் . பொருளாதார சீர்திருத்தங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தவேண்டும் என தீர்மானமாக பேசுபவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அரசால் பிடுங்கப்பட்டது . அரசு அவைக்குள் வராதபடி தடுக்கப்பட்டிருக்கிறார் . ஆனால் அவர் மக்களை , ஆதரவாளர்களை சந்திப்பை அரசு தடுக்கமுடியவில்லை . அரசியல் எதிரிகள் இவரை அமெரிக்காவின் சிஐஏ

ஹாங்காங் திரைப்பட விழாவில் திரையிடப்படும் சில படங்கள்!

படம்
  டிரைவ் மை கார் ஹாங்காங் திரைப்பட விழாவில் இடம்பெறும் முக்கியமான படங்கள் இந்த திரைப்படவிழாவில் ஏராளமான புதிய இளைஞர்கள், கருத்து, நடிகர்கள் இடம்பெற்ற திரைப்படங்களை எதிர்பார்க்கலாம். சில படங்களைப் பார்ப்போம்.  அனிதா அனிதா 2003ஆம் ஆண்டு புற்றுநோயால் இறந்துபோன அனிதா இம் முயி என்ற பாப் இசைக்கலைஞர்  பற்றிய திரைப்படம் இது. லூயிஸ் வாங் அனிதாவாக நடிக்கிறார். இவர் மாடல் நடிகையாக புகழ்பெற்றவர். கவாஷிமோ யோஷிகோ, மிட்நைட் ஃபிளை என்ற இரு படங்களை திரைப்பட விழாவில் அனிதாவை நினைவுகூறும்வகையில் திரையிடுகிறார்கள்.  மடலேனா எமிலி சான் என்கா என்ற இயக்குநரின் படம். இன்சோம்னியா பாதிப்பு கொண்ட டாக்சி ஓட்டுநர், வேலை செய்து தனியாக வாழும்  குழந்தையைக் கொண்ட பெண் என இருவருக்குமான உறவும் சம்பவங்களும்தான் கதை. படம் முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.  ஃபார் ஃபார் அவே ஹாங்காங் இயக்குநர் அமோஸ் எடுத்துள்ள படம் இது. டாட் 2 டாட் என்ற படம் எடுத்து புகழ்பெற்ற இயக்குநர் இவர். காகி சாம் என்ற ஐடி துறையில் வேலை செய்பவர்தான் நாயகன். அவர் செய்யும் காதல் கலாட்டாக்களில் ஐந்து பெண்கள் சிக்குகிறார்கள். சிக்கலான காதல் உறவுகளைப்

மன்னருக்கு எதிராக ஜனநாயகத்தை முன்னெடுக்கும் மக்களின் போராட்டம் !

    தாய்லாந்து போராட்டம் தாய்லாந்தில் பல்வேறு மாதங்களாக ஜனநாயகத்தை வலியுறுத்தி மக்கள் போராடி வருகின்றனர் . அவரை்கள் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர் . அண்மையில் உலக நாடுகளில் நடைபெறும் போராட்டங்களில் தாய்லாந்து போராட்டம் அதிக கவனம் ஈர்த்து வருகிறது . பௌத்தர்கள் அதிகம் வாழும் நாடு தாய்லாந்து . 70 மில்லியன் (1 மில்லியன் -10 லட்சம் ) மக்கள் இம்மதம் தழுவியவர்கள் . 1932 முதல் அரசியலமைப்புச்சட்டம் இங்கு அமலில் இருக்கிறது . ஆனால் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற கலகத்திற்கு பிறகு ராணுவத்தின் ஆட்சிதான் பெருமளவு அங்கு நடந்து வந்தது . 2001 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் நிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டன . அதுவரை பிரதமராக இருந்த பாபுலிச தலைவரான தக்‌ஷின் ஷின வத்ரா , ராணுவத்தினால் பதவியிலிருந்து விலக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் . இந்த விவகாரம் நடந்த ஆண்டு 2006. இதுபோல ராணுவம் அங்கு நடந்துகொள்வது புதிதல்ல . 1976 ஆம் ஆண்டு அக் .6 அன்று தாய்லாந்திலுள்ள தம்மசத் என்ற பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் ஜனநாயகப் போராட்டத்தை ராணுவம் கடுமையாக ஒடுக்கியது . இத

மகளிடம் பேச முடியாமல் தடுமாறும் கூலிக்கொலைக்கார தந்தையின் மனப்போராட்டம்! - ஃபிரைடே கில்லர்

படம்
            பிரைடே கில்லர் 2011 Director: Yuthlert Sippapak Actors: Anna Chuancheun , Apinya Sakuljaroensuk , Chumphorn Thepphithak , Jaran 'See Tao' Petcharoen , Kowit Wattanakul , Ploy Jindachote , Suthep Pongam Country: Thailand வெள்ளிக்கிழமை மட்டும் பிறரை திட்டம் போட்டு கொல்லும் கொலைகாரன் . சிறைவாசம் முடிந்து வெளியே வருகிறான் . வந்தவுடன் அவனுக்கு சிகரெட் கொடுத்து புகைக்க சொல்லுகிறான் ஒருவன் . அவனை விடுதலையானவன் பார்த்ததே கிடையாது . அவன் யாரென்று கேட்கும்போது , திடீரென கத்தியால் அவனைக் குத்திவிட்டு ஓடிவிடுகிறான் . கீழே ரத்தசகதியில் கிடப்பவனை காவல்துறையைச் சேர்ந்த பெண் ஒருவள் காப்பாற்றுகிறாள் . அவனுக்கு தன் அம்மா எழுதிக்கொடுத்த கடிதத்தை கொடுக்கச்சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள் . அக்கடிதத்தைப் படிப்பவன் , ஆவேசம் அடைகிறான் . ஆனால் மீண்டும் அந்த கடிதத்தைப் படித்துவிட்டு தன்னை மருத்துவமனையில் சேர்த்த பெண்ணைப் பார்க்கச் செல்கிறான் . அங்கு நேரும் ஒரு அசம்பாவித நிகழ்ச்சியை அவன் தன்னுணர்வின்றி தடுக்க நினைக்க , அது அவன் மேல் வீண்பழியாக விழுகிறது . இதனால் அவனை ம

தாய்லாந்தில் பிளாஸ்டிக் தடை! - 2021இல் நாடு முழுக்க அமலாகிறது

படம்
giphy தாய்லாந்தில் இந்த புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் தடை அமலாகிறது. மேலும் இந்த தடை தற்போது சிறப்பங்காடிகளுக்கும், அடுத்த ஆண்டு பிற சிறு கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. தாய்லாந்திலுள்ள ஆமைகள், மீன்கள் உள்ளிட்ட உயிரிகள் பிளாஸ்டிக்கை தவறுதலாக உண்டு செரிக்க முடியாமல் இறந்து போயின. மேலும் கடலில் கூடும் பிளாஸ்டிக் கழிவுகளையும் அந்நாட்டு அரசு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் எறிவதில் உலகளவில் எங்கள் நாடு முன்னர் மூன்றாவது இடத்தில் இருந்தது. இன்று மக்களின் ஆதரவினால் ஐந்து மாதங்களில் நாங்கள் பத்தாவது இடத்திற்கு வந்துவிட்டோம் என்று பெருமையாக பேசுகிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் சில்பா ஆர்ச்சா. பிளாஸ்டிக் தடை என்றால் என்ன நடக்கும்? அதேதான். நீங்கள் துணிப்பை கொண்டுபோய் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். அல்லது கடைக்கார ர்கள் கொடுக்கும் பையை காசு கொடுத்து வாங்கிப் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் தற்போது தாய்லாந்து நிலைமை. கடந்த ஆண்டில் 5,765 டன்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பயன்பாடு தற்போது பெருமளவு குறைந்துள்ளது. இன்னும் கிராம பகுதிகளில

காதலுக்காக காத்திருக்கும் பேய்!- பீ மாக் ஹாரர் காமெடி

படம்
பீ மாக் - 2013 தாய்லாந்து இயக்குநர் - பன்ஜோங் பிசாந்தனாகுன் கதை - Nontra Khumvong Banjong Pisanthanakun Chantavit Dhanasevi இசை -  Chatchai Pongpraphaphan Hualampong Riddim ஒளிப்பதிவு - Narupon Sohkkanapituk பேய் கதைதான். ஆனால் ட்விஸ்ட் நீங்கள் பயப்பட அவசியமில்லை என்பதுதான்.  போரில் கலந்துகொண்டு குண்டுபட்டு குற்றுயிரும் குலையுயிருமாக வீடு திரும்புகிறார்கள் ஐந்து நண்பர்கள். இடையில் நண்பர் ஒருவர், தன் வீட்டில் தங்கிச்செல்லுங்கள் என்கிறார். சரி என அவரின் வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கு நடக்கும் பகீர், பகபக சிரிப்பு சம்பவங்கள்தான் படம்.  ஒளிப்பதிவு பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். நாயகனுடன் நடிக்கும் நண்பர்கள் கூட்டத்தின் நடிப்பும், ஏடாகூட வசனங்களும் பயத்திலும் சிரிக்க வைக்கின்றன. நாயகி தேவிகா பேரழகி. அந்த நண்பர் கூட்டத்தில் பேய் என்றாலும் கூட அழகிடா என வழிவதைப் போல.. அவ்வளவு அழகு. நடிக்கவும் செய்கிறார். போதாதா----  போர், போரின் பாதிப்பில் இறப்பு, நீர்நிலை மீது கிராமம், கொண்டாட்டம் என பிரேமில் அனைத்து இடங்களிலும் கலை இயக்கு