இடுகைகள்

கூகுள் அறிவியல் விழா 2019 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூகுள் அறிவியல் விருது! - மைக்ரோபிளாஸ்டிக் அகற்றும் கண்டுபிடிப்புக்காக...

படம்
வெப்பமயமாதல் உலகத்தை உருக்கி வருகிறது. இந்த  நேரத்தில்தான் இலண்டன் தெருக்களில் நடந்த சூழல் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. கிரேட்டா துன்பெர்க் போன்ற சிறுமிகளின் மூலம் பலரும் சூழலியல் பற்றிய விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். தற்போது அயர்லாந்தைச் சேர்ந்த பதினெட்டு வயது இளைஞர்,கடலில் சேரும் மைக்ரோபிளாஸ்டிக்கை ஒழிக்கும் வழி சொல்லி கூகுள் அறிவியல் விருதை வென்றுள்ளார். ஃபியன் ஃபெரிரா என்ற இளைஞர் காந்தம் மூலம் பிளாஸ்டிக்குகளை அகற்றும் முறையைக் கண்டுபிடித்துள்ளார். காந்தம் கொண்ட நீர்மமான ஃபெர்ரோஃப்ளூட் மூலம் பிளாஸ்டிக் மூலக்கூறுகளை அகற்ற முடியும் என இவர் கூறுகிறார். மாதிரிக்கு செய்தும் காட்டியுள்ளார். கூகுள் அறிவியல் விழா 2019 நடைபெற்றது. இதில் உலகம் முழுக்க 100 பேர் பங்கேற்றனர். அதிலிருந்து இளைஞர்களாக 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு கலிஃபோர்னியாவிலுள்ள மௌண்டன் வியூ கேம்பசில் தேர்வு நடைபெற்றது. முதலிடம் பெற்ற ஃபியனுக்கு  50 ஆயிரம் டாலர்கள் பரிசு அளிக்கப்படவிருக்கிறது. தனது வீடு அமைந்துள்ள பகுதியில் பாறை ஒன்றிருக்கிறது. அங்கு எண்ணெயில் அமிழ்ந்திருந்த பிளாஸ்டிக் உறை