இடுகைகள்

ரோல்மாடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மகப்பேறு மருத்துவத்தின் மூலம் தன்னைச்சுற்றியுள்ள பெண்களை புரிந்துகொள்ளும் மருத்துவர்! டாக்டர் ஜி

படம்
  டாக்டர் ஜி ஆயுஷ்மான் குரானா, ரகுல் ப்ரீத் சிங், ஷெபாலி ஷா இசை அமித் திரிவேதி   பொதுமருத்துவம் படித்த உதய் குப்தா, சிறப்பு மருத்துவராக மாற எலும்புகள் பற்றி படிக்க நினைக்கிறார். ஆனால் அதை படிப்பதற்கான சீட், அவருக்கு அருகில் கிடைப்பதில்லை. எனவே மகப்பேறு மருத்துவத்தை அவர் தேர்ந்தெடுக்கிறார். ஆனால் அதை முழு மனதாக செய்யவில்லை. ஆண் என்றால் மகப்பேறு மருத்துவம் எதற்கு செய்யவேண்டும் என நினைக்கிறார். பெண்களுக்குத்தான் அது சரியானது என நினைக்கிறார். இந்த மனநிலையை அவர் மாற்றிக்கொண்டு நல்ல மகப்பேறு மருத்துவராக அவர் மாறுவதுதான் கதை. உதய் குப்தா, ஆணாதிக்க கருத்துகள் கொண்டவர். அவருக்கு அவரது நெருங்கிய உறவினரான எலும்பு மருத்துவர்தான் ரோல்மாடல். அதுபோல மருத்துவராகி சந்தோஷமாக வாழவேண்டும். வெற்றிகரமான மருத்துவராக செயல்டுவதே கனவு. ஆனால் நிலைமை அப்படி எளிதாக செல்லவில்லை. அவருக்கு மகப்பேறு மருத்துவம்தான் படிக்க கிடைக்கிறது.   மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை என இரண்டு இடங்களிலும் அவர் தன்னை மிகவும் அந்நியமாக உணர்கிறார். வகுப்பில் அவர் மட்டும்தான் ஒரே ஆண். வேலையின்போது, ஆசிரியரும் துறை தலைவருமான நந்த

விவசாய கருவிகளை புதுமையாக வடிவமைத்த டெக் விவசாயி! - செல்வராஜ்

படம்
  கண்டுபிடிப்புகள் என்பது அந்நியச் சொல் அல்ல! கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, எம் செல்வராஜ். இரண்டே முக்கால் நிலத்தை வைத்து விவசாயம் செய்கிறார். விவசாயம் செய்வதோடு, அதனை எளிமையாக செய்வதற்கான பல்வேறு கருவிகளை, சாதனங்களை கண்டுபிடித்து வருகிறார். 58 வயதான செல்வராஜ் அதனால்தான் இப்பகுதியில் சாதனையாளராக பார்க்கப்பட்டு வருகிறார். மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 110 கி.மீ. தூரத்தில் உள்ளது சேசுராஜபுரம். இங்குதான், இவரது விவசாய நிலம் உள்ளது. தனது நிலத்தில் நிலக்கடலை, தக்காளி, சிறு தானியங்களை விளைவித்து வருகிறார்.  இளைஞராக இருக்கும்போதிலிருந்து விவசாய பணிகளை செய்துவருகிறார். அப்போதிலிருந்து பல்வேறு சோதனை முயற்சிகளை நிலத்தில் செய்து பார்த்து வந்தார். சோதனை மற்றும் தவறுகள் என ஏற்க பழகியவர், வீட்டிலுள்ள பல்வேறு இரும்பு பொருட்களை வைத்து விவசாய பொருட்களை செய்யத் தொடங்கினார். இப்படித்தான் சைக்கிள் டயர்கள், மரத்துண்டுகள், கத்திகள் ஆகியவற்றை வைத்து 500 ரூபாயில் கருவி ஒன்றை உருவாக்கினார். விதைப்பது, களை பறிப்பது ஆகியவற்றை இப்படி கருவிகளை வைத்தே செய்கிறார்.  விதைகளை விதைப்பதற்கு முன்னர் மட்டும் ரோட

நவீன காலத்தின் மிகச்சிறந்த தொழிலதிபர்! துணிச்சல், தைரியம், தொலைநோக்குப்பார்வை, அசாதாரண வெளிப்படைத்தன்மை கொண்ட எலன் மஸ்க்

படம்
              2020 ஆம் ஆண்டின் சிறந்த தொழிலதிபர் ! அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ் , டெஸ்லா நிறுவனங்களைத் தொடங்கியவரான எலன் மஸ்க் , பார்ச்சூன் இதழால் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழிலதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . பொதுவாக டிவிட்டரில் தொழில்தொடர்பான விஷயங்களை பலரும் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள் . ஆனால் எலனின் பல்வேறு டிவிட்டர் பதிவுகள் நாளிதழில் தலைப்புச்செய்தியாகும் வகையில் பகிரங்கமான உண்மையை பேசுவதாக உள்ளன . இப்படி பேசுவது மட்டுமல்ல செய்யும் செயலிலும் அவர் புலிதான் . கடந்த பத்தாண்டுகளில் நாசாவின் பல்வேறு பணிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது . நூற்றுக்கு மேற்பட்ட முறை விண்வெளிக்கு அதன் ஃபால்கன் ராக்கெட்டுகள் சென்று திரும்பியுள்ளன . கடந்த ஆண்டு நவம்பரில் , அமெரிக்காவின் மூன்று விண்வெளி வீரர்களுடன் , ஜப்பான் நாட்டு வீரரையும் கூட சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி சாதனை புரிந்தது ஸ்பேஸ் எக்ஸ் . இதற்கான அனுமதி கூட ஒருவாரத்திற்கு முன்னர்தான் எலன் மஸ்க் பெற்றார் என்பது முக்கியமான விஷயம் . செவ்வாயில் மக்களை குடியேற்றுவதுதான் எலனின் நீண்டக