இடுகைகள்

ஈரப்பதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காற்றிலுள்ள ஈரப்பதத்தைப் பயன்படுத்தி வளரும் தாவரம்!

படம்
  காற்றில் தாவரம்! பெரிய மரத்தின் இடையே சிறு செடிகள் வளருவதைப் பார்த்திருக்கிறீர்களா? மரத்தில் கணுக்களுக்கு இடையில் சிறு செடிகள் வளரும். இவை, வளர மண் தேவையில்லை. காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வாழ்கின்றன. இத்தாவர இனங்கள், ஒட்டுண்ணி போல மரத்தில் இருந்து சத்துகளை உறிஞ்சுவதில்லை. இந்த தாவர இனங்களுக்கு  எபிபைடஸ் ( ) என்று பெயர். பொதுவாக கூறும்போது காற்றுத் தாவரங்கள் என்று தாவரவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  எபிபைடெஸ் இன தாவரங்கள் வெப்பமண்டல மழைக்காடுகளில் அதிகம் வளர்கின்றன. இங்கு வெளிச்சம் அதிகம் கிடைக்காது. ஆனால், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இன்று அடர்ந்த காடுகளிலிருந்து எபிபைடெஸ் இன தாவரங்களை மக்கள் பலரும் வீடுகளில் அலங்காரச் செடியாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  https://www.allaboutgardening.com/epiphytes/

உணவைக் கெடாமல் பாதுகாக்க இத்தனை வேதிப்பொருட்கள் தேவை!

படம்
  உணவுப்பொருட்களில் பயன்படும் முக்கியப் பொருட்கள் பிரசர்வேட்டிவ். தொன்மைக்காலத்தில் உப்பு, வினிகர், வாசனைப் பொருட்கள், எண்ணெய் ஆகியவை பயன்பட்டன. இப்போது நிறைய வேதிப்பொருட்களை உணவுப்பொருட்கள் கெடாமல் இருக்க பயன்படுத்துகின்றனர். அவற்றைப் பார்ப்போம்.  ஸ்டேபிலைசர்ஸ் இதில் எமுல்சிஃபையர்ஸ், திக்னர்ஸ், ஜெல்லிங் ஏஜெண்ட்ஸ், ஹியூமெக்டன்ஸ், ஆன்டி கேக்கிங் ஏஜெண்ட்ஸ்  ஆகிய பொருட்கள் உள்ளடங்கும்.  இதெல்லாம் எதற்கு? உணவு கெட்டுப்போகாமல் இருக்கத்தான்.  நைட்ரேட்ஸ் -நைடிரைட்ஸ் இறைச்சியில் நுண்ணுயிரிகள் வளராமல் தடுக்கும் வேதிப்பொருள். இதனை சேர்த்தால் இறைச்சியில் சிவப்பு நிறம் கூடுதலாக இருக்கும்.  ஆன்டிபயாடிக்ஸ் பண்ணை விலங்குகளின் இறைச்சியில், பதப்படுத்தப்பட்ட கேன் உணவுகளில் பயன்படும் வேதிப்பொருள். எடுத்துக்காட்டு டெட்ராசைகிளைன்ஸ்.  ஹியூமெக்டன்ட்ஸ்  இவை, பொருளில் உள்ள ஈரப்பத தன்மையைக் குறைக்கிறது. இதன் காரணமாக பொருள் அதன் இயல்பான தன்மையில் சில காலம் நீடிக்கும். எடுத்துக்காட்டு துருவிய தேங்காய்.  ஆன்டி ஸ்டாலிங் ஏஜெண்ட்கள் சில பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இவை பேக்கரி உணவுகளில் ஈரப்பதமும், மென்மையும் குறை

காற்றில் ஈரப்பதம் அதிகரித்தால் என்னாகும்?

படம்
ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி காற்றில் ஈரப்பதம் அதிகரித்தால் கிரிக்கெட் பந்தின் சுழற்சி மாறுபடுமா? உள்நாடோ, வெளிநாடோ ஆட்ட மைதானம் கிரிக்கெட் பணியின் பலத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படும். அப்போதுதான் உள்நாட்டு அணி வெல்ல முடியும். எனவே இதில் தட்பவெப்பநிலையும் கூட்டுசேர்கிறது. இதைக் காரணமாக கூறினாலும் பந்து ஸ்விங் ஆவது ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஒருவேளை மழைபெய்து களம் ஈரமானால் பந்து எல்லைக்கோட்டை தொடுவது தாமதமாகும். அவ்வளவே. மற்றபடி இந்த நேரத்தில் அறிவிக்கப்படும் டக்வொர்த லீவிஸ் முறை யாருக்கும் புரியாத சீக்ரெட் விதி. நன்றி: பிபிசி படம்: பின்டிரெஸ்ட்