உணவைக் கெடாமல் பாதுகாக்க இத்தனை வேதிப்பொருட்கள் தேவை!
உணவுப்பொருட்களில் பயன்படும் முக்கியப் பொருட்கள் பிரசர்வேட்டிவ். தொன்மைக்காலத்தில் உப்பு, வினிகர், வாசனைப் பொருட்கள், எண்ணெய் ஆகியவை பயன்பட்டன. இப்போது நிறைய வேதிப்பொருட்களை உணவுப்பொருட்கள் கெடாமல் இருக்க பயன்படுத்துகின்றனர். அவற்றைப் பார்ப்போம்.
ஸ்டேபிலைசர்ஸ்
இதில் எமுல்சிஃபையர்ஸ், திக்னர்ஸ், ஜெல்லிங் ஏஜெண்ட்ஸ், ஹியூமெக்டன்ஸ், ஆன்டி கேக்கிங் ஏஜெண்ட்ஸ் ஆகிய பொருட்கள் உள்ளடங்கும். இதெல்லாம் எதற்கு? உணவு கெட்டுப்போகாமல் இருக்கத்தான்.
நைட்ரேட்ஸ் -நைடிரைட்ஸ்
இறைச்சியில் நுண்ணுயிரிகள் வளராமல் தடுக்கும் வேதிப்பொருள். இதனை சேர்த்தால் இறைச்சியில் சிவப்பு நிறம் கூடுதலாக இருக்கும்.
ஆன்டிபயாடிக்ஸ்
பண்ணை விலங்குகளின் இறைச்சியில், பதப்படுத்தப்பட்ட கேன் உணவுகளில் பயன்படும் வேதிப்பொருள். எடுத்துக்காட்டு டெட்ராசைகிளைன்ஸ்.
ஹியூமெக்டன்ட்ஸ்
இவை, பொருளில் உள்ள ஈரப்பத தன்மையைக் குறைக்கிறது. இதன் காரணமாக பொருள் அதன் இயல்பான தன்மையில் சில காலம் நீடிக்கும். எடுத்துக்காட்டு துருவிய தேங்காய்.
ஆன்டி ஸ்டாலிங் ஏஜெண்ட்கள் சில பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இவை பேக்கரி உணவுகளில் ஈரப்பதமும், மென்மையும் குறையாமல் இருக்க உதவுகின்றன.
ஆன்டி மைகோட்டிக்ஸ்
பழச்சாறு, சீஸ், பிரெட், உலர்ந்த பழங்கள் ஆகியற்றில் பூஞ்சை உருவாகாமல் இருக்க இந்த வேதிப்பொருட்கள் பயன்படுகின்றன.
இதற்கு கால்சியம் புரோபையனேட், சோடியம் ஆகிய வேதிப்பொருட்கள் பயன்படுகின்றன.
ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்
கொழுப்பு, எண்ணெய் கொண்ட பொருட்களின் சுவை மாற்றம், அதன் வாசனை மாறுவதை தடுக்க இவை உதவுகின்றன.
பியூடலேடட் ஹைட்ரோஆக்சி டோலுயின் - பிஹெச்டி என்ற பொருள் இந்த வகையில் பயன்படுகிறது.
அரசு அங்கீகரித்த அளவில் பிரசர்வேட்டிவ் பொருட்களை சாப்பிட்டால் பாதிப்பு பெரிதாக இருக்காது. ஆனால், குறைந்தளவு பாதிப்பு கூட இல்லாமல் எப்படி? சோடியம் நைட்ரேட் உங்கள் உடலில் சேர்ந்தால் நாளடைவில் இதய நோய்கள், நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படும்.
பிஹெச்டி, பிஹெச்ஏ, டிபிஹெச்க்யூ ஆகிய வேதிப்பொருட்கள் உடலில் சேர்ந்தால் நிச்சயம் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். குறைந்தபட்சமாக ஒவ்வாமை, செரிமான பிரச்னையோடு அதிக பட்சமாக புற்றுநோய் ஏற்படலாம்.
ht
கருத்துகள்
கருத்துரையிடுக