ஏடிஹெச்டியைக் கண்டுபிடித்த நான்காம் வகுப்பு ஆசிரியர்!

 








கனடாவின் ஒன்டாரியோவில் உள்ளது பிராம்டன் நகரம். அங்குள்ள பள்ளி ஒன்றில் சத்னம் சிங் படித்து வந்தான். அவன் எப்போதும் போல வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வந்தாலும் மதிப்பெண்கள் என்னமோ சி, டி என அடுத்தடுத்து தரத்தின் அளவுகோல் குறைந்துகொண்டே வந்தது. அதையெல்லாம் விட முக்கியமான பிரச்னை பள்ளியிலிருந்து வந்துகொண்டே இருக்கும் புகார்களின் அழைப்புதான். பாடங்களை கவனிக்க மாட்டேன்கிறான், சண்டை போடுகிறான், பேச மாட்டேன்கிறான் என வகுப்பிற்கு வரும் ஆசிரியர்கள் அனைவரும் மறக்காமல் சத்னம் சிங்கை குறைசொல்லாமல் வகுப்பை நிறைவு செய்யவில்லை. 

இதில் ஒரே ஆசிரியர் மட்டும் சத்னம் சிங்கின் பிரச்னையை வேறுமாதிரி பார்த்தார். அவர்தான், அவனுக்கு இருந்த சிக்கலை கண்டுபிடித்து பெற்றோருக்கு சொன்னார். ஆம். சத்னத்திற்கு ஏடிஹெச்டி குறைபாடு இருந்தது. இந்த குறைபாடு உள்ளவர்களை ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார வைக்க முடியாது. உட்கார வைத்தாலும் பேசுவதை கட்டுப்படுத்த முடியாது. அப்படி கட்டுப்படுத்தினாலும் அது போரின் தொடக்கமாகவே இருக்கும். பரபரவென ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள். மேலும் அடிக்கடி மூர்க்கமாக சண்டையும் போடுவார்கள். இதெல்லாம் சேர்ந்து வகுப்பில் சத்னம் சிங்கை பிறர் கிண்டல் செய்யவும், பட்டப்பெயர் வைத்து அழைக்கும் விதமாகவும் மாற்றியது. 

ஜேனட் ஹால் மட்டும்தான் பிரச்னை பற்றி பெற்றோருக்கு சொன்னார். கூடவே அதற்கான பயிற்சிகளையும் பரிந்துரைத்தார். அவரது உதவியால் சத்னத்தை அவனது பெற்றோர், குறைபாட்டின் வேகத்தைக் குறைக்கும் மருத்துவத்தை நாடினர். ஆங்கில மருத்துவம் பக்க விளைவுகள் கொண்டதால், ஹோமியோபதியை நாடினர். இன்று சத்னம் சிங் மனதளவில் பதற்றம் குறைந்து மருந்துகளும் பயனளிக்க பிறரோடு பழகவும் தொடங்கியுள்ளேன்.இதைவிட முக்கியமாக அவனது தேர்ச்சியின் அளவும் கூடியுள்ளது. 

இதற்கு முக்கியமான காரணம், பலரும் மாணவரின் நடத்தையை பார்க்கையில் அதற்கு பின்னே உள்ள காரணத்தை தேடிய நான்காவது பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஜானட் ஹால் தான். இன்றுவரை அந்த ஆசிரியருக்கு மனதளவில் நன்றியை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் சத்னம் சிங்கின் பெற்றோர். 

அவர் கனடா இதழ்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்