கனவு காண்பதில் எந்த சமரசமும் தேவையில்லை! - சித்தானந்த் சதுர்வேதி










சித்தானந்த் சதுர்வேதி 
நடிகர்.


 உங்கள் வாழ்க்கை இப்போது எப்படி மாறியிருக்கிறது?

கல்லி பாய் படத்தில் நடிக்கும்போது நான் ராப் பாடல்கள் மற்றும் கவிதைகளை எழுதிக் கொண்டு இருந்தேன். நான் கிடைக்கும் இடைவெளியில் பாடல்களை எழுதிக்கொண்டிருப்பேன். இதைப்பார்க்கும், விஷயத்தை கேள்விப்படும் பலரும் நான் உண்மையில் ராப்பாடகர் என நினைப்பார்கள். நான் எழுதுவது மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். 

பண்டி ஆர் பப்ளி படத்தின் கதையைக்கேட்ட பிறகு, அந்த பாதிப்பில் நான் நீண்ட பாடல் ஒன்றை எழுதினேன். எனது பாத்திரங்களை மையப்படுத்தி நான் டைரி ஒன்றை எழுதி வருகிறேன். நான் அதை எழுதுவதோடு அதனை பதிவு செய்தும் வருகிறேன். நடிப்பிற்கு நான் இப்படித்தான் தயாராகிறேன். படப்பிடிப்பு தொடங்கும்போது, நான் இப்படி பதிவு செய்த எனது குரலை கேட்பேன். இது கதாபாத்திரத்திற்கு ஏற்ப தயாரித்துக்கொள்ள உதவுகிறது. நான் இப்படி பாத்திரத்திற்குள் உள்ளே சென்றபோது, அந்த பாத்திரம் எப்படி யோசிக்கும் என்றுதான் நினைப்பேன். சிந்திப்பேன். நான் இப்படித்தான் எனக்கு கொடுக்கப்படும் பாத்திரங்களை நடிக்கிறேன்.







எழுதுவதில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

சினிமாவில் வருவதற்கு தயாராக இருந்தபோது எழுத்துப்பணி தொடங்கியது. அப்போது நான் போராடிக் கொண்டிருந்தேன். எனது நண்பர்கள் அவர்களின் வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். நான் வேலையில்லாமல் இருந்தேன். எங்கும் செல்லாமல் அறைக்குள் உட்கார்ந்துகொண்டிருந்தேன். நான் என்னை தனியாக இருப்பதாக உணரும்போது, எழுத தொடங்கினேன். இப்படி எழுதியது அனைத்துமே எனக்கு பின்னாளில் உதவியது என்பேன். 

பள்ளியில் நான் எனது தோற்றத்திற்காக கடுமையாக கேலி செய்யப்பட்டவன். அதை எப்படி எதிர்கொள்வது என்று அப்போது எனக்கு தெரியவில்லை. இதைப்பற்றி எனது பெற்றோரிடம் கூட நான் கூறவில்லை. அப்போதிலிருந்து எழுத்து மட்டுமே எனக்கு பெரிய வடிகாலாக இருந்து வருகிறது. எழுத்துதான் எனக்கு உளவியல் தெரபி.

 இன்று உங்கள் தோற்றம்தான் புகழ் சேர்த்துள்ளதே... 

நான் பள்ளியில் படிக்கும்போது அழகான பையனாக இல்லை. அப்போது வெளுத்த நிறத்தில் சுருட்டை முடியுடன் இருந்தேன். எனது கண்கள் மிக சிறியவை. நான் அப்போது குளியலறையில் நின்றுகொண்டு எனது சுருட்டை முடியை  நேராக வைத்திருக்க முயல்வேன். அப்போது ஷாரூக் கானின் காலம். முடிக்கற்றை நெற்றியில் விழுவது, அதனை காற்று வருடுவது, அதை இரு கைகளை விரித்து அனுபவிப்பது எனது கனவாக இருந்தது.  சுருட்டை முடியை வைத்து அதை செய்ய முடியாதே... எனவே நான் அன்று சந்தையில் கிடைத்த நிறைய ஷாம்பூகளை பயன்படுத்திப் பார்த்தேன். எனது தோற்றத்திற்காகவே எனக்கு விளம்பர மாடல் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஏனெனில் நான் சினிமாவிற்கான முகம் கொண்டவன் அல்ல. இன்று சினிமா நிறைய மாறிவிட்டது. அதற்கு பொருத்தமில்லாத முகங்களைக் கூட இன்று ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நான் இப்போது என்னை அழகனாக உணர்கிறேன். 

கேலி கிண்டல்களை தடுக்க எழுத்து ஒரு ஆயுதமாக பயன்பட்டிருக்கிறது அல்லவா?

எட்டாம்வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கும்போது கேலி கிண்டல்களை சந்திக்க நேரிட்டது. அதனால்தான் நான் எழுத தொடங்கினேன். இப்படி நான் செயல்படுவதற்கு அந்த கேலி, கிண்டல்கள்தான் காரணம். அதனை நான் இன்று நல்ல விஷயமாகவே பார்க்கிறேன். நான் இப்படி கேலி கிண்டல் செய்பவர்களுக்கு பதில் சொல்ல, பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். வெறும் வார்த்தை அல்ல செயல்களால் அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். 

படிப்பிலும் நல்ல மதிப்பெண்களை பெறுவதில் உறுதியாக இருந்தேன். கேலி கிண்டல் செய்யும் மாணவர்கள் நான் செய்யும் ஒவ் வொரு செயலிலும் தடைகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார்கள். வாழ்க்கை இப்படித்தான் கடினமாக இருக்கப்போகிறது என்று எனக்கு தெரிந்தது. நான் அதற்கேற்ப என்னைத் தயார் செய்துகொண்டேன். புதுமுகம் என்ற விருதை நான் வென்றபிறகு என்னை கேலி செய்தவர்கள் பலரும் பாராட்டினார்கள்.






 

சமூக வலைத்தளத்தில் பிரபலங்களை கடுமையாக கிண்டல் செய்வது அதிகரித்து வருகிறது. அதனை எப்படி பார்க்கிறீர்கள்.

இதை சைபர் புல்லியிங் என்பார்கள். நான் இதை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லை. இப்படித்தான் அதை நான் எதிர்கொள்கிறேன். ஒரு நடிகராக நான் அனைத்து விமர்சனங்களையும், பதில்களையும் கவனிப்பேன். ஒருவரின் பதிலில், விமர்சனத்தில் வெறுப்பு இருந்தால் அதனை அடையாளம் கண்டுவிடுவேன். நான் இப்படிப்பட்ட பார்வையாளர்களில் ஒருவராக இருந்து நடிகர் ஆகியுள்ளேன்.இவர்களின் பதில்களை முழுமையாக புறக்கணிக்க முடியாது. ஆனால் விமர்சனங்கள் எனது வாழ்க்கையை டிக்டேட் செய்ய முடியாது. அதில் நான் கவனமாக இருக்கிறேன். எனக்கு சினிமா துறையில் காட்ஃபாதர் யாரும் கிடையாது. எனவே, நான் ரசிகர்களிடமிருந்து வரும் எதிர்வினைகளை கவனிக்கிறேன். 

எக்செல், தர்மா, யாஷ்ராஜ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் நடித்து விட்டீர்கள். பிறகென்ன?

நீ காணும் கனவில் எப்போதும் சமரசம் செய்துகொள்ளாதே என்று எனது அப்பா சொல்லுவார். நான் அப்படித்தான். நான் கனவுகள் மிகப்பெரியவை. முன்னணி நடிகைகளுடன் நான் படத்தில் நடிக்கவேண்டும் என விரும்புகிறேன். கடினமாக உழைத்தால் அந்தளவு அதிர்ஷ்டம் நமக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.  ஜோயா அக்தர் என்னை கவனித்ததால், எனக்கு கல்லிபாய் பட வாய்ப்பு கிடைத்தது.  அந்த படம் நிறைவடைந்தபிறகும் கூட நான் நல்ல பட வாய்ப்புக்காக காத்திருந்தேன். அப்படித்தான் தர்மா, யாஷ்ராஜ் பட வாய்ப்புகள் கிடைத்தன. 

Mans world

ananya ghosh








 

கருத்துகள்