இயற்கை, சூழல் சார்ந்த நூல்கள்- வாசிப்போம் வாங்க!

 









ஐ பாட் எ மௌண்டைன்

தாமஸ் ஃபிர்பேங்க்

ஷார்ட் புக்ஸ் 

1940ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நூலின் மறுபதிப்பு. கிளாஸிக்கான நூலை, இயற்கை காதலர்களுக்காக புதிய தலைமுறைக்காக பதிப்பித்து இருக்கிறார்கள். ஸ்னோடோனியா என்ற மலைமீது உள்ள பண்ணை ஒன்றை தாமஸ் வாங்குகிறார். இதனால் அவரும், அவர் மனைவியும் சந்திக்கும் நிறைய சிக்கல்களை கூறியிருக்கிறார். 





தி ஸ்லாத் லெமூர்ஸ் சாங்க்ஸ் 

அலிசன் ரிச்சர்ட்

ஹார்ப்பர் கோலின்ஸ் 

லெமூர் பற்றி 50 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர் அலிசன் ரிச்சர்ட். நூலில் காட்டுயிர் வாழ்க்கை, புவியியல், சூழல் இவற்றை உள்ளடக்கிய சமூகம் என நிறைய விஷயங்களைப் பேசுகிறார். மடகாஸ்கர்தான் நூலில் பேசப்படும் முக்கியமான இடம். அதன் ரகசியங்களை அறிய நூலை வாங்கி வாசியுங்கள். 




டீர் மேன்

ஜியோப்ராய் டெலோர்ம்

லிட்டில் ப்ரௌன் புக் க்ரூப்

புகைப்படக்காரர் டெலோர்ம் நார்மண்டியில் உள்ள லூவியர் காட்டுக்கு செல்கிறார். அங்கு சென்று தங்கி மான்களுடன் பழகுகிறார். அதன் வாழ்க்கையைக் கவனிக்கிறார். அதைப்பற்றிய குறிப்புகள், அனுபவங்கள் நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது. 





வைல்ட் சிட்டி

ஃப்ளோரன்ஸ் வில்கின்சன்

ஓரியன் பப்ளிசிங்

மனிதர்கள் தொடர்ச்சியாக நகரங்களை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள். இந்த மாற்றங்களை எதிர்கொண்டு விலங்குகளும், தாவரங்களும் பூஞ்சைகளும் சமாளித்து வாழ்ந்து வருகின்றன. நகர வாழ்க்கையில் கூட நம்மோடு வாழும் காட்டுயிர் விலங்குகளை எப்படி பாதுகாப்பது என நூலில் கூறியிருக்கிறார்கள். 










கருத்துகள்

பிரபலமான இடுகைகள்