பனி உருகும் சத்தம்!

 



pixabay










பனி உருகும் சத்தம்! 



2017ஆம் ஆண்டு ஸ்விஸ் ஆல்ப்ஸில் எய்கர் மலைச்சிகரத்தில் பனிக்கட்டி உருகி நீராக மாறியது. இப்படி பனிக்கடி உடைந்து நொறுங்கி நீராவது யாரும் பார்க்காமல் நடைபெற்றது. பனிக்கட்டி உடையும் ஒலி என்பது மனிதர்களால் காதில் கேட்க முடியாத குறைந்த ஒலி அளவைக் கொண்டது. இதனால் என்ன நடந்தது என்பதை மக்கள் பின்னர்தான் அறிந்தனர். பனி உடையும், வீழும் அதிர்வு, ஒலி ஆகியவற்றை வைத்து உருகிய பனியை எளிதாக கணக்கிட முடியும். 

குறைந்த அலைநீளம் கொண்ட ஒலிகளை இன்ஃப்ரா சவுண்ட் (கேளா ஒலி அலை)என்று அழைக்கின்றனர். அதிக தொலைவிலிருந்து பயணப்படும் ஒலி அலைகள் இவை. செயல்பாட்டிலுள்ள எரிமலைகளை  கண்காணிக்க கேளா ஒலி அலைகளைஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த அலைகளைப் பனிச்சரிவை அளவிட பயன்படுத்தினாலும் ஐஸ்கட்டிகளின் உருகுதல், உடைந்து நொறுங்குவதை அளவிட முதன்முறையாக பயன்படுத்தி வருகிறார்கள். 

காற்று அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல்களை வைத்து கேளா ஒலியை இயக்கி பதிவு செய்தால் மட்டுமே பனிப்பாறை மெதுவாக உடைந்து வீழ்வதை பதிவு செய்ய முடியும். மிக மெல்ல நடக்கும் நிகழ்ச்சி இது. இதனால் அங்கு சுற்றுப்புறங்களில் வாழும் மக்கள் வெப்பநிலை அதிகரிப்பால் பாதிக்கப்படுவார்கள். எனவே இதனை முன்கூட்டியே கண்காணித்து ஆபத்தை எப்படி குறைப்பது என ஃப்ளோரன்ஸ் பல்கலைக்கழக  புவியியலாளர் இமானுல் மார்செட்டி ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வு ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. 

கேளாஒலியைப் பயன்படுத்துவதற்கு முன்னர் ரேடாரை இப்பணிக்கு பயன்படுத்தினர். ஆனால் இந்த கருவி அதிக செலவு பிடித்ததோடு, குறிப்பிட்ட ஒரு இடத்தை மட்டுமே கண்காணிக்க முடிந்தது. கேளா ஒலி குறைவான செலவில் பயன்படுத்த முடிந்ததோடு, அதிக பரப்பையும் கண்காணிக்க முடிந்தது. இதன்மூலம் பனிக்கட்டியின் அளவு, பாதை, உடையும் வேகம் ஆகியவற்றையும் கணிக்க முடியும். 

மார்செட்டி குழுவினர் கேளாஒலிக்கான டிடெக்டர்களை பொருத்தி, அதன் சமிக்ஞைகளை ஆய்வு செய்து மேம்படுத்தி வருகின்றனர். பனிப்பாறைகள் உள்ள ஐரோப்பிய பகுதிகளில் டிடெக்டர்களை  பொருத்தி ஆய்வுக்குழு சோதித்து வருகிறது.  



ஆதாரம்

SCIENTIFIC AMERICAN 

GLACIAL WHISPERS (Ellis avallone)

SCIENTIFIC AMERICAN JANUARY 2022


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்