இடுகைகள்

மெட்டாவர்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இணையத்தில் வழியே பெருக்கெடுக்கும் காதலும், நெருக்கமும் - மெட்டாவர்ஸ் நாகரிகம்

படம்
1 இன்று இணையம் நமது உடலின் இன்றியமையாத பாகம் போல ஆகிவிட்டது. இணையம் இல்லாத ஸ்மார்ட்போன், கணினி என்பது உயிரில்லாத உடல்போல. இணையம் அனைத்தையும் தந்தாலும் உறவைத் தருமா, ஒருவர் தொடுவது போன்ற சுகத்தை தருமா என்றால் கொஞ்சம்  போலியாக இருந்தாலும் அதையும் தரும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. அவற்றைப் பற்றித்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.  தட் சாஸி திங் என்ற நிறுவனம் இந்தியாவில் உள்ளது. இதன் நிறுவனர், சாச்சி மல்ஹோத்ரா. இது டிஜிட்டல் வடிவிலான செக்ஸ் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிராண்ட். இதனை தொடங்கியவர், தனது காதலருடனான காதலை பகிர்ந்துகொள்வதும் இணையம் வழியாகத்தான். சில சமயங்களில் நாம் மனதிலுள்ள  ஆசைகளை பகிர்ந்துகொள்வது கடினமானது. அதற்கு செக்ஸ்டிங் வழிமுறை உதவுகிறது. நாம் தினசரி எதிர்கொள்ளும் சவால்களையும், சங்கடங்களையும் டிஜிட்டல் வழியாக நாம் விரும்புபவருடன் பகிர்ந்துகொள்வது சிறப்பாக இருக்கிறது என்றார் சாச்சி.  தனாயா நரேந்திரா, செக்ஸ் கல்வியாளர் பேஸ்புக், ட்விட்டர், இன்டாகிராம், வாட்ஸ்அப், டெலிகிராம் என அனைத்துமே மக்களுடன் தொடர்புகொள்ளும் சாதனங்கள்தான். முன்பை விட டிஜிட்டல் வழியாக பிறருடன் தொடர்புகொள்