இடுகைகள்

காதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதல் உரையாடல்கள் மட்டும்!-துருவங்கள் நாவல்

துருவங்கள் நாவல்- நக்கீரன். --- ## மதன் - கார்த்திகா காதல் உரையாடல்கள் (தொகுப்பு) --- ### 1. முதல் சந்திப்பு - மின்னஞ்சல் முகவரியில் **கார்த்திகா:**  by the way, I'm not 'karthik', I'm karthika and we both seems to be in the same office, (noticed your desk number, starts with 044, our company have only once office in chennai) maybe I'll come directly to your desk If I really want :) **மதன்:**  good, great to know that!! you are always welcome **கார்த்திகா:**  do you understand tamil? **மதன்:**  magalir ani thalaiviku vanakkam :) **கார்த்திகா:**  thamasu :), anyway ippavae lateu, nan kalamburaen, appuram parpom, bye!! **மதன்:**  ok, bye!! --- ### 2. நேரில் சந்திப்பு - கல்யாணம் ஆகி நாலு பசங்க **(கார்த்திகா நேரில் வந்து மதனின் டெஸ்க்கில்)** **கார்த்திகா:**  என்ன பிரதர், உங்க டெஸ்க் வந்தாச்சு, போதுமா? இப்பவாச்சும் சொல்லிக் கொடுப்பீங்களா? **மதன்:**  வாங்க சிஸ்டர், உட்காருங்க, என்ன சாப்பிடறீங்க, காப்பி ஆர் டீ? **கார்த்திகா:**  இருக்கட்டும் ப்ரதர், ...

கன்னிராசி உள்ளவன், காதலில் வல்லவனா?

இது **உண்மையும் இல்லை, பொய்யும் இல்லை** - ஏனென்றால் இது ஒரு **பாடல் வரி** மட்டுமே! இந்த வரி **"கன்னி ராசி காதல் செய்ய வல்லவன்"** என்பது தமிழ் சினிமா பாடலில் (பெரும்பாலும் 'காதல் கோட்டை' அல்லது அதுபோன்ற படங்களில்) வரும் ஒரு கவிதை நயமான வசனம்.  இதை அறிவியல் / ஜோதிட ரீதியாக பார்க்கும் போது: - **ஜோதிடப்படி:** கன்னி ராசிக்காரர்கள் பகுத்தறிவாளர்கள், நுணுக்கமானவர்கள், குறைபாடுகளை எளிதில் கண்டுபிடிப்பவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு காதல் செய்யும் திறன் இல்லை என்று எந்த ஜோதிட நூலும் சொல்லவில்லை. எல்லா ராசிக்காரர்களுக்கும் காதல் உணர்வு உண்டு. - **உளவியல் ரீதியாக:** ராசியை விட, ஒரு நபரின் குணாதிசயம், வளர்ப்பு, அனுபவங்கள்தான் அவர் காதலிப்பதில் முக்கியம். **முடிவு:** இது பாடலாசிரியரின் கற்பனை மற்றும் ராகத்திற்காக பொருத்திய வரி. இதை உண்மை என்று நம்ப வேண்டாம்; பொழுதுபோக்கிற்காக ரசியுங்கள்! 😊 டீப்சீக்

என் மீது ஒட்டப்படும் லேபிள்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது - ஆப்கன் திரை இயக்குநர் சாஹர் பானு சதாத்

படம்
  ஆப்கானிஸ்தான், அங்கு முதலில் அமெரிக்கா,இந்தியா பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்தனர். பிறகு, பல்வேறு திட்டங்களை செய்த பிறகு என்ன நினைத்தார்களோ, தாலிபன்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு இருநாடுகளும் தங்கள் நாடு வந்து சேர்ந்துவிட்டனர். தாலிபன்கள் முட்டாள் மூர்க்கர்கள். மதச்சட்டப்படிஆட்சி நடத்தக்கூடியவர்கள்.  அமெரிக்க, இந்திய நாடுகளில் ஆதரவில் ஆப்கனில் பெண்களின் முன்னேற்றம் மேலேறி உயர்ந்து வந்தது. கல்வி கற்க, விரும்பிய உடையை உடுத்த, வெளியே வேலைக்கு செல்லக்கூடிய, பேசக்கூடிய அடிப்படை விஷயங்கள் நடைபெற்றன. இப்போது மீண்டும் அவர்கள் கற்காலத்திற்கே சென்றுவிட்டனர். அண்மையில், இந்தியா வந்த தாலிபன்கள், பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆண்களை மட்டுமே கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதற்கு பெண்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆண்கள் கண்டனம் தெரிவித்தது குறைவுதான்.  இப்போது சில நாட்களுக்கு முன்னர் ஆப்கனின் மற்றொரு சட்டம் வந்திருக்கிறது. குடும்ப வன்முறையை சட்டப்பூர்வமாக்கும் சட்டம் அது. அதாவது, கணவர் மனைவியை அடிக்கலாம். ஆனால், எலும்பு முறியும் காயம் ஏற்படக்கூடாது....

கௌரவமற்ற படுகொலைகள்

படம்
கௌரவமற்ற படுகொலைகள் - கர்நாடகத்தில் அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள் கர்நாடகம் இந்திய மாநிலங்களில் முதலாக வெறுப்பு பேச்சுக்களை தடுக்கும் விதமாக சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. இதை வலதுசாரி பார்ப்பன பாசிச கட்சிக்ககு எதிரான நகர்வு என்று கூறலாம். எளிதாக மனித கீழ்மைகளை தட்டி எழுப்பி வாக்குகளாக மாற்றும் மதவாத கட்சிக்கு இப்படியான சட்டங்கள் பெரிய தடையல்ல. ஏனெனில் அவர்கள் எந்த சட்டங்களையும் மதிப்பதில்லை. அவர்களுடைய ஒரே சட்டம் முஸ்லீம், கிறித்தவர்கள், பட்டியல் இனத்தவர்கள் ஆகியோரை அடித்து உதைத்து உரிமைகளைப் பறித்து சொத்துகளை அபகரிப்பதுதான். அப்படித்தான் ஆரிய சம்பத்து இதுவரை செயல்பட்டிருக்கிறது.  2022-2023 ஆம் ஆண்டு வரை கர்நாடகத்தில் 13 ஆணவக்கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் பனிரெண்டு நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆம் நீங்கள் நினைத்தது சரிதான். இறந்தவர்கள் அனைவருமே மேல்சாதியைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக பெண்கள். கொலை செய்தவர்கள் அந்நியர்களல்ல. அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.  அடிப்படையில் மக்கள் பெண்களை சொத்தாக கருதுகிறார்கள். அவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்தால், தங்களுக்கு ...

மினி டிராமா பெண்களின் பாத்திரம்

படம்
சீனா நாடகங்களுக்கு அரசு பெரும் இடவசதியில் தொன்மை அரசு கட்டடங்களை உருவாக்கித் தந்துள்ளது. பாராட்ட வேண்டியதுதான்.ஆனால் கதை என்றால் அப்படியே ஒரே ஐடியாவை தொடர்கிறார்கள். காப்பி அடிக்கிறார்கள். குடும்பம் என்றால் அடித்து உதைத்தாலும் அதை மகன் மகள் ஏற்கவேண்டும். பெண்ணை பாம்பு கடித்தால் அதுதான் சிறந்த காதல் காட்சி. 70,80களில் தமிழில் வரும் பாம்பு விஷத்தை வாயில் எடுத்து துப்புவது...இதை கம்யூனிச அரசு எப்படி அனுமதிக்கிறது.....

காதல் மீட்டர் - திருமண உறவைக் காப்பாற்ற என்ன செய்வது?

படம்
  காதல் மீட்டர்  4 பொதுவான திருமணங்களில் நிச்சயம் செய்வது முக்கியமான சடங்கு. இவரை இன்னாரை திருமணம் செய்துகொள்வதாக உறுதி செய்துகொள்வது. உறுதி செய்துகொண்டவரைத்தான் ஒருவர் திருமணம் செய்வார் என்று நிச்சயமில்லை. காலம் மாறிவிட்டது. கிராமங்களில் பெரும்பாலும் கொடுத்த வாக்குறுதியை யாரும் காப்பாற்றாமல் விடுவதில்லை. ஏனெனில் ஒருவரின் நம்பிக்கை தொலைந்துவிட்டால் அவர் பேசுவதை யார் கேட்பார்கள்.?  இந்த நிச்சய காலத்தில் இணையர்கள் உரையாடலாம். இன்று ஸ்மார்ட்போன் உள்ளது. போன் உயிரோடு இருந்தே ஆகவேண்டும். அதன் வழியாக பேசலாம். நிறைய விஷயங்களைப் பகிரலாம். பொதுவாக கல்யாணம் செய்துகொள்ளப்போகும் ஆட்கள் வெட்டி அரட்டைதானே அடிப்பார்கள். அதுவும் எதிர்கால உறவைப் பற்றி அறிவதற்கான வழிதான்.  ஜோதிடம், திருமண பொருத்தம் என்பதை பொதுவான பலரும் நம்புகிறார்கள். குறிப்பாக திருமணம் எனும்போது... ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் என்னுடைய நேரத்தை நானே உருவாக்குவேன் என இருப்பவர்கள் தங்களுக்கு பிடித்த ஒருவரை மணந்துகொள்ளலாம். நிச்சயத்திலும் மோதிரத்தை போடுவதுண்டு. இது ஒரு ஒப்பந்தம் போல செயல்படுகிறதாக கொள்ளலாம். இன்...

கள்ளக்காதல் கதையில் கொடூர கொள்ளை குழுவும் போதைப்பொருள் குழுவும் ஒன்றாக சேர்ந்தால்....

படம்
  தகத்தே லே தெலுங்கு நவீன் சந்திரா, திவ்யா பிள்ளை, அனன்யா ராஜ், ரவிசங்கர் க்ரைம் திரில்லர் பவானி மூவிஸ் - யூட்யூப் சேனல் ஏ பிளஸ் சான்றிதழ் வாங்கக்கூடிய பாலுறவு, தீவிர வன்முறை காட்சிகள் கொண்ட திரைப்படம். படத்தில் மூன்று கதைகள் உள்ளது. ஒன்று இன்ஸ்பெக்டர் போதைப்பொருட்கள் குழுவை தேடி அலையும் கதை. இதில் அவர், சில டபுள் ஏஜெண்டுகளை போதைப்பொருள் கேங்கில் இருந்து விலைக்கு வாங்கி தகவல்களை வாங்கி அவர்களை பிடிக்க முயல்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு சப் இன்ஸ்பெக்டர் மூலம் இன்னொரு வழக்கும் வருகிறது. அது ஒரு கொலை வழக்கு.  இரண்டாவது கதை, கொலைவழக்கு.இதில் நாயகன் வீட்டில் கொலை ஒன்று நடக்கிறது. அவரது வீட்டில் தங்கியிருந்த பெண் கொலை செய்யப்பட்டு ஹாலில் கிடக்கிறார். வயிற்றில் அலங்காரப் பொருள் ஒன்று துளைத்து சென்றிருக்கிறது. நாயகன், கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு அங்குள்ள கைரேகைகளை துடைக்கிறார். தடயங்களை அழிக்கிறார். பிறகு போலீசுக்கு போன் செய்து தகவல் கொடுக்கிறார். போலீசாரும் வந்து பெண்ணின் உடலை மீட்டு செல்கிறார்கள். தகவல் கொடுத்த நாயகன் மீது சந்தேகம் தோன்ற அவனை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்கிறார்...

காதல் மீட்டர் - சமரசம் செய்து காதலிக்கலாமா?

படம்
  காதல் மீட்டர்  4 இன்று பல்வேறு கலாசாரங்களை சேர்ந்தவர்கள் காதலால் வேறுபாடுகளை மறக்கிறார்கள். ஒன்றாக சேர்கிறார்கள். எனவே, நீங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. எந்தளவு திறந்த மனது கொண்டவராக இருக்கிறீர்கள், நடந்துகொள்கிறீர்கள் என்பதே முக்கியம். இணையர்கள் சமூகத்திற்கு எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவர்களுடைய வாழ்வை முழுமையான திருப்தியோடு வாழ்ந்தால் போதும்.  டேட்டிங் செல்பவர்கள், திருமண வாழ்க்கைக்கு அந்த செயல்பாடு கூட்டிச்செல்லும் என ஈடுபடலாம். சிலர், அதில் பாலுறவிலும் கூட ஈடுபடுகிறார்கள். இதெல்லாம் சரியானதா இல்லையா என்றால் அதை தனிப்பட்ட இருநபர்கள்தான் முடிவு செய்யவேண்டும். இங்கு நான் பல்வேறு ஆலோசனைகளை அறிவுறுத்தல்களைக் கூறலாம். அவற்றை நீங்கள் பகுத்தாய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளலாம். அல்லது மறுக்கலாம். ஒருவர் கூறும் அறிவரையை அப்படியே நம்புவதும் தவறு. தன்னுடைய அறிவை முழுக்க புறக்கணிப்பதும் அழிவையே கொண்டு வரும்.  சமரசம் செய்துகொண்டால் சமாதான வாழ்க்கை என்று சில பழம்பெருச்சாளிகள் அறிவுரை கூறுவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை தரம், விதிகள் என எதிலும் பின்வ...

காதல் மீட்டர் - உறவுகளை பாதுகாப்பது எப்படி?

படம்
  காதல் மீட்டர்  2 ஒருவர் நண்பராக இருந்து அப்டேட் ஆகி காதலராக மாற வாழ்க்கையில் வாய்ப்பு உள்ளது. இதற்கும் அவர் நம்பிக்கையை சம்பாதித்து உழைக்கவேண்டும். ஒரு பதவி கொடுத்தால், முந்தைய பதவியை விட கூடுதலாக உழைக்கவேண்டும் என்றுதானே கொடுக்கிறார்கள். அந்த வேலையை செய்யாமல் அவர் உறங்கிவிட்டால் என்னாவது? ஒருவருக்கொருவர் லட்சியங்களில் உதவிக்கொள்வது நண்பர்களுக்கு சாத்தியம். அதேசமயம், அவர்களில் ஒருவருக்கு மட்டும் வெற்றி கிடைக்கிறது. இன்னொருவருக்கு கெடுவாய்ப்புகளே அதிகம் என்றாலும் அந்த உறவு அதிக நாட்களுக்கு தாக்குப்பிடிக்காது. இருவர் வாழும் உறவில் ஒருவருக்கு மட்டுமே பயன் விளைகிறது என்றால் இன்னொருவர் மனதிற்குள்ளாக வருத்தமுறுவார். இங்கு யாரும் மகான் அல்லது துறவி கிடையாது அல்லவா? அகமணமுறையை எடுத்துக்கொள்வோம். சாதியைக் காப்பாற்றுவதுதான் அதன் ஆழத்தில் உள்ள நோக்கம். மேல்சாதி இந்துகள் தங்கள் அந்தஸ்து, பணம், அசையும் சொத்து, அசையா சொத்து என பலதையும் பார்த்துத்தான் மணம் செய்கிறார்கள். இதெல்லாம் இல்லாமல் வரதட்சணைப் பணம் வேறு இருக்கிறது. இதையெல்லாம் வைத்துத்தான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். அவ்வளவு பணத்தை ...

ஒன்றாகச் சேர்ந்து காதலிக்க என்ன தேவை?

 ஒன்றாக சேர்ந்து... உறவுகளைப் பொறுத்தவரை எதுவுமே உறுதி கிடையாது. உறவே எளிதாக உடையக்கூடியது என ஜே கிருஷ்ணமூர்த்தி கூறியிருக்கிறார். இருவர் ஒன்றாக வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் சில தவிர்க்க முடியாத தேவைகளுக்காக அப்படி இருக்கலாம். மனப்பூர்வமாக ஒன்றாக இணைந்து இருக்கிறார்களா என்றால் சந்தேகமே. உடல் அளவில் ஒன்றாக இருந்தாலும் மனம் என்ற அளவில் பல கி.மீ. தொலைவில் உள்ள மனிதர்கள் ஏராளமானோர் உண்டு. ஒரே வீட்டில் வசித்தாலும் வேறு வேறு உலகில் இருப்பார்கள்.  டேட்டிங் விஷயத்தைப் பொறுத்தவரை ஆணும், பெண்ணும் மனம் என்ற அளவில் நெருங்கி வருவதையே முக்கியமாக கருதலாம். அப்படியான நெருக்கம், விருப்பங்களின் ஒற்றுமை அளவில் நட்பு உருவாகி பின்பு காதலாக மாறி திருமணமாக அடுத்த நிலைக்கு செல்லலாம். உங்களுடைய உறவில் நட்புத்தன்மை இருக்குமாறு பார்த்துக்கொண்டால் பின்னாளிலே அதில் சிக்கல் வந்தாலும் தீர்த்துக்கொள்ள முடியும். உடல், மனம் சார்ந்த ஊக்கம் பரவசம் என்பது மாறக்கூடியது. எப்படி பருவகாலங்கள் மாறும்போது அதையொட்டி நமது உணவு மாறுகிறதோ அதைப்போலவேதான். காதலில் ஏற்படும் காயங்கள் ஆறுவது கடினம். ஆனால், நட்பில் அப்படி பெரிய...

உயிர் உண்ணும் கண் - எக்ஸ்டென்டன்ட் எடிஷன் டேட்டிங் விதிமுறைகள்

படம்
  உயிர் உண்ணும் கண் - எக்ஸ்டென்டன்ட் எடிஷன் டேட்டிங் விதிமுறைகள் ஆண் பெண் என இருவரும் திருமணம் செய்வது குடும்பம் என்ற அதிகாரப்பூர்வ அமைப்பிற்குள் வருவதற்கு உதவி புரிகிறது. அதேசமயம், காதலித்து பழகி பிறகு திருமணம் செய்வது இன்று முக்கியத்துவம் பெறுகிறது. டேட்டிங் என்பது மேற்கு நாடுகளில் மட்டுமல்ல ஆசிய நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. பலரும் அதை நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாக செயல்படுத்த முயல்கிறார்கள். நேரடியான சந்திப்பு என்பது காதலில் நுழைபவர்களுக்கான வாசல். அதற்கு முன்னதாக டின்டர், பம்பிள் என ஆப்கள் மூலம் பேசி அறிமுகமாகி பிறகு டேட் செய்து காதலித்து மணந்தவர்களே புதிய தலைமுறையினர்.  இணையத்தின் வசதியால் சிலர் தங்களது ஆளுமையை, முழுமையான குண இயல்பை மறைத்துக்கொள்ள முடியலாம். ஆனால், நேரடியான சந்திப்பில் அது சாத்தியமில்லை. டேட் செய்வது திருமண வாழ்க்கைக்கான ஒரு பயிற்சி என்றே வைத்துக்கொள்ளலாம்.  எப்படி டேட் செய்வது, அதற்கென ஏதாவது வயது தகுதி உண்டா என்று எல்லாம் கேள்வி வருகிறது.  இன்று கணவரை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்களும் கூட டேட் செய்கிறார்கள். டேட் செய்வது பற்றி இது சரி இத...

காதல் என்பது கலையா?

 காதல் என்பது கலையா? காதல் என்பது கலையா, அல்லது வெறும் மகிழ்ச்சிகரமான உணர்வா? கலை என்றால் அதைக் கற்க அறிவு, முயற்சி, செயல்பாடு என பலவும் தேவை. மகிழ்ச்சிகரமான உணர்வு என்றால், அப்படியான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிற அனுபவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.  காதலை, நாம் விரும்பவில்லை என்று கூறமுடியாது. காதல் திரைப்படங்கள், காதலை மையப்படுத்திய தொடர்கள் இன்றுமே பல கோடி மக்களால் பார்க்கப்படுகிறது. காதலை நாம் பார்க்கும் கோணம் மாறிவிட்டிருக்கிறது. திரைப்படமோ, தொடரோ அதில் காட்சிகள் சுவாரசியமான வகையில் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியல்லாதபோது மக்கள் என்ன செய்வார்கள்? ஆங்கிலப்பட இயக்குநர் குவான்டின் டரன்டினோ, எடுக்கும் திரைப்படங்களைப் போன்றவற்றின் மலினமான நகல்களைப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியதுதான். இன்றும் பேருந்துகளில் காதல் பாடல்கள், மஜாவுக்கு அழைக்கும் பாடல்கள் என பலவும் மக்களால் கேட்கப்பட்டு வருகிறது. இசை பேரரசரின் காப்புரிமை பிரச்னை இருந்தாலும் மனதிற்குள்ளேயே அதை பாடிக்கொண்டு தனது சோகத்தை மறந்து காதல் உணர்வில் திளைக்கும் மக்களைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஆனாலும் கூட இப்படி ...