கவர்ச்சியும் ஈர்ப்பும் கொண்ட பெண் இணையை எப்படி விவரிப்பது?
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி
ஆண், பெண் இருவருக்குமான காதல், பெற்றோர் பிள்ளைகள் மேல் கொண்டுள்ள பாசம் என இரண்டும் வேறுபட்டதா?
பெற்றோர், பிள்ளைகள் மீது கொண்டுள்ள பாசம் என்பது ஆண், பெண் இருவருக்கும் உள்ள காதலை விட முந்தையது. மனிதர்களை விட விலங்குகள், தங்கள் குட்டிகளை வளர்ப்பதில் அதிக தீவிரம் கொண்டவை. அதில் இடையூறை விரும்புவதில்லை. ஏற்பதில்லை. அந்தவகையில், இரு பாலினத்தவரின் காதலை, பெற்றோராக பிள்ளை மீது காட்டும் பாச உறவோடு ஒப்புமைபடுத்த முடியாது. இரண்டுமே செயல்பாடு, அணுகுமுறை இரண்டிலுமே வேறுபட்டது.
ஆண், பெண் என இருபாலினத்தவருக்கான காதல் பரிணாம வளர்ச்சிக்கு உதவுகிறதா?
காதலிப்பவர்கள் , அந்த காதலை உறவைக் காத்துக்கொள்ள முயல்வார்கள். பிள்ளைகள் பிறப்பது, அவர்களை வளர்ப்பது, அன்பை வெளிக்காட்டுவது ஆகியவை நடைபெறுகிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு பெற்றோரின் அன்பு, பாதுகாப்பு, பொருளாதார பலம் ஆகியவை கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் தங்களை வலுப்படுத்திக்கொள்ளலாம். தாய், தந்தையினரின் அன்பு, நேசம் பிள்ளைகளுக்கு மனரீதியாகவும் மாற்றத்தை உருவாக்குகிறது.
காதலில் வீழ்வது என்பது பரிணாம வளர்ச்சியில் என்ன பங்கை ஆற்றுகிறது?
ஒருவர் எதிர் பாலினம் மீது ஈர்ப்புகொண்டு உறவை ஏற்படுத்தி தொடர்வதற்கான தோராய காலம் இரண்டு ஆண்டுகள் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பள்ளியில் பெண் ஆசிரியை மீது மாணவர்களுக்கு சொல்ல முடியாத ஈர்ப்பு வருகிறது. இயக்குநர் மாரிசெல்வராஜின் வாழை படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதை முன்மாதிரி ஒருவர் மீது கொள்ளும் ஈர்ப்பு, மரியாதை என்று கொள்ளலாம். வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பகுதியில் காதலில் வீழ்வதை ஒருவர் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். காதலை உளவியல் பூர்வமாக ஆராய்ந்தால், தனது இணை இப்படியாக இருக்கவேண்டும் என நினைப்பவர், அப்படியானவர் எதிர்பட்டால் அவரோடு உறவை ஏற்படுத்திக்கொண்டு நேரத்தை செலவிட முனைகிறார். தன்னை முழுமையாக காதலில் கரைத்துக்கொள்ள தயாராக இருக்கிறார். காதல் உறவு முதிர்ச்சியடைந்து உறவு வலுவாக காலம் தேவைப்படுகிறது. இரு பாலினத்தவர்களுக்கும் நிறைய அனுபவங்கள் தேவையாக உள்ளது.
கவர்ச்சியும் ஈர்ப்பும் கொண்ட பெண் இணையை எப்படி விவரிப்பது?
ஜென்டில்மேன் படத்தில் குஷ்பு அப்பளம் என கவுண்டமணி எடுத்துக்காட்டுவாரே? அதுபோல்தான் இருக்கவேண்டும். அடிப்படையில் பெண் இளமை, ஆரோக்கியம், கருத்தரிப்பு திறன் ஆகியவற்றை கொண்டிருக்கவேண்டும். இதை புகைப்படத்தில் காட்டுவதற்கு அழகுசாதன கலைஞர்கள் லிப்ஸ்டிக், பவுடர், க்ரீம் என நிறைய மெனக்கெடுகிறார்கள். வடக்கு நாட்டில் திரைப்படங்களில் வரும் பெண்கள் மிகவும் ஒல்லியானவர்களாக காண்பிக்கப்படுகிறார்கள். ஆனால் அதுவே தென்னாட்டில் பெண்கள் செப்புக்குடம் போல முலைகளை, வளைவு நெளிகள் கொண்ட இடுப்பைக் கொண்டிருக்கவேண்டும் என எதிர்பார்ப்புகள் உள்ளது. வட்டமுலை, வளைந்த அழகிய இடுப்பு, சுருக்கம் விழாத தோல், கன்னங்களில் உடலில் ரத்தவோட்டம் தெரியவேண்டும் என ஒருவிதமாக பெண்ணின் கவர்ச்சியை, ஈர்ப்பை வரையறுக்கலாம்.
கலாசாரங்கள் சார்ந்து காதல் எப்படி இருக்கிறது?
ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் குழுவாதம் அதிகம் உண்டு. இங்கு காதல், நட்பை விட குடும்ப உறவுகள் முக்கியமானவை. அதுவே தனி மனிதர்களை அடிப்படையாக கொண்ட சமுதாயங்களாக ஐரோப்பா, அமெரிக்கா உள்ளது. இந்த நாடுகளில் நட்பு, காதல் குடும்பத்தை விட ஆதிக்கம் செலுத்துகிறது. அவற்றுக்கே அங்குள்ளவர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக