நடுத்தர வயதில் காலம் வேகமாக நகர்வது தோன்றுவது ஏன்?

 அறிவியல் தகவல்கள்
மிஸ்டர் ரோனி

நடுத்தர வயதில் காலம் வேகமாக நகர்வது தோன்றுவது ஏன்?

இப்போதுதான் உடையை வாங்கினேன். ஆனால், அதற்குள் இந்த நாகரிகம் பழசாகிவிட்டதா? காலம் வேகமாக ஓடுகிறது என சிலர் ஆச்சரியப்படுவார்கள். அவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயது ஆசாமிகளாக இருப்பார்கள். குழந்தையாக இருப்பவர்களுக்கு நேரம் என்பது அப்படியே உறைந்து நிற்பது போல தோன்றும். இளையோருக்கு குழந்தையிலிருந்து நீண்ட தொலைவு பயணித்து வந்தாலும், காலம் வேகமாக நகர்ந்திருப்பதை அறியமாட்டார்கள். எதிர்காலம் என்ன விஷயங்களைக் கொண்டிருந்தாலும் நடைமுறை மட்டுமே நிஜம் என்பதை புரிய சிலகாலம் தேவை. 

ஒரு மனிதர் இயல்பாக நடைபாதையில் நடந்து செல்லும்போது சுற்றியுள்ள கட்டுமானங்கள் அப்படியே மாறிக்கொண்டே நவீனமாக மாறுவது போலத்தான் காலம் மாறுவதை கருதவேண்டும். காலம் வேகமாக நகருவதை நடுத்தர வயது கொண்டவர்கள் உணர்வார்கள். 

டிமென்சியா என்றால் என்ன?

டிமென்சியா என்றால் மூளையில் உள்ள ஒருவரின் அறிவுத்திறன்களை இழக்கும் நோய் என்று கூறலாம். திட்டமிடல், கருத்துகளை கோர்வையாக கூறுவது, சுயமாக தன்னை கண்காணித்தல், நினைவுகள் ஆகியவற்றை நோயாளி இழந்துவிடுவார். இதன் இரண்டு வடிவங்கள் - அல்சீமர்ஸ், வஸ்குலர் டிமென்சியா. 

அல்சீமர் வந்தவர்கள் தங்களது தினசரி செயல்பாடுகளைக் கூட செய்யமுடியாமல் தடுமாறுவார்கள். வஸ்குலர் டிமென்சியா வந்தவர்கள், மூளைக்கு செல்லும் ரத்தவோட்டம் தடைபடும். இதனால் வாதம் ஏற்படும். 

ஒருவருக்கு அறுபது வயதில் டிமென்சியா வருவது அரிது. எண்பது, தொண்ணூறுகளில் இந்நோய் வருவது இயல்பானது. எண்பத்தைந்து வயது தாண்டியவர்களுக்கு ஐம்பது சதவீதம் அல்சீமர் வருகிறது. உணர்வு ரீதியாக பொருளாதார ரீதியாக டிமென்சியா ஏற்படுத்தும் இக்கட்டுகள் அதிகம். தொழில்மயமாக்கலின் காரணமாக ஏராளமான முதியோர்கள் நோய்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை செய்ய போதுமான பொருளாதார வளம் தேவைப்படுகிறது. 


உலகில் எத்தனை வகையான காதல் உள்ளது?

ஆராய்ச்சியாளர் ஜான் லீ ஆறு வகையான காதல்களை பட்டியலிட்டுள்ளார். பாலுறவு காதல் இரோஸ், விளையாட்டு காதல் - லுடஸ், மெதுவாக உருவாகும் காதல் - ஸ்டோர்ஜ், பொறாமை கொண்ட காதல் - மேனியா, அகப்பே, பிராக்மா - நடைமுறையான காதல். 

முக்கோண காதல் கோட்பாட்டை பற்றி பார்ப்போமா?

இதை உருவாக்கியவர் பெயர் ராபர்ட் ஸ்டெர்ன்பெர்க். நெருக்கம், ஆர்வம், பொறுப்பு ஆகியவைதான் முக்கோண காதல் கோட்பாடு. நெருக்கம் என்பதில் பராமரிப்பு, உணர்வு ரீதியான ஆதரவு உள்ளது. ஆர்வம் என்பதில் உணர்வு, உடல் ரீதியான உறவு , ஆதரவு உள்ளது. பொறுப்பு என்பதில் ஒருவருக்கொருவர் காதலை வளர்த்திசெல்வது, அன்பு செலுத்துவது ஆகியவை உள்ளது. இந்த கோட்பாட்டை வைத்து எட்டு வகையான காதலை பட்டியல் போடுகிறார் ராபர்ட். 

 பெண்களை ஈர்க்கும் அம்சங்கள் எவை?

இளமை, கட்டு செட்டான உடல், அழகான கட்டழகு ஆண் கண்ணில் தெரிந்தால் பெண்கள் அவர்களை விரும்புவார்கள். இதனால்தான், பல்வேறு விளம்பரங்களில் நடைமுறை வாழ்க்கையில் அவ்வளவு எளிதாக பார்க்க முடியாத ஜிம் அழகர்கள் தோன்றுகிறார்கள். நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பேர் சொட்டைத்தலையாக சோம்பிபோய், தொந்தி விழுந்து இருக்கிறார்கள். பத்து சதவீதம் பேர் அழகாக, வெண்ணிற தோலோடு கட்டழகோடு இருக்கிறார்கள். எப்படி பெண்கள் ஆண்களை தேர்ந்தெடுக்கிறார்கள்? அழகான கட்டுசெட்டான சிக்ஸ்பேக் உடலா? அவனால் தன்னை பாதுகாக்க முடியும். பெரிய தோள்களா அணைத்துக்கொண்டால் இனிமை. அதோடு பிறக்கும் குழந்தைகளும் அவனைப்போன்ற கட்டுசெட்டான உடலோடு பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேமாதிரி சூழல்கள் அமையுமா என்றால் தெரியாது. நம்பிக்கை அவ்வளவுதான். காலம் மாறுகிறது இன்று ஆண்மைத்தன்மை என்பது வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்வது, பிள்ளைகளை வளர்ப்பது, உணவு தயாரிப்பது என மாறியிருக்கிறது. எனவே, ஜிம் செல்வது மட்டுமே போதாது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!