இடுகைகள்

த.நா.சேனாபதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நகர இளைஞரை மயக்கும் இயற்கையின் பேரழகு! வனவாசி - விபூதிபூஷன் வந்தோபாத்யாய

படம்
  வனவாசி விபூதிபூஷன் வந்தோபாத்யாய விடியல் ரூ.270 மொழிபெயர்ப்பு - த.நா.சேனாபதி நகரவாசி ஒருவர், எப்படி வனத்துக்குள் வேலை செய்ய வந்து வனவாசி ஆகிறார் என்பதே கதை.  தினந்தந்தி போல ஒருவரியில் கதையை இப்படி சொன்னாலும் படிக்கும்போது நாம் பார்க்கும் மனிதர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நாவல் முடியும் வரை புதிய மனிதர்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். நாவலின் புதிய பாணி என கொள்ளலாம்.  கல்கத்தாவில் விடுதி ஒன்றில் தங்கி வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்தான் கதை நாயகன். விடுதி மெஸ்சில் அக்கவுண்ட் வைத்து சாப்பிடுபவருக்கு, வேலை கிடைத்தால் தான் சாப்பாட்டுக்கடனை அடைக்க முடியும். இந்த நிலையில் நண்பர் அழைத்தார் என விழா ஒன்றுக்கு செல்கிறார். அங்கு நிம்மதியாக சாப்பிட்டுவரும்போது கல்லூரி நண்பர் ஒருவரைப் பார்க்கிறார்.  அவர் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் மூலம் பூர்ணியா எனும் காட்டுப்பகுதியில் உள்ள நிலங்களை கவனித்துக்கொள்ளும் வேலைக்கு செல்கிறார். நகரில் இருக்கத்தான் இளைஞருக்கு விருப்பம். ஆனால் வேலை வேண்டுமே என்பதற்காக ஜமீன் காரியாலயத்திற்கு செல்கிறார். அங்கு செல்வதற்கான பயணமே காரியாலய வாழ்க்கை