இடுகைகள்

நிபந்தனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முன்முடிவுகளின்றி வாழ்க்கையை வாழ்ந்தாலே ஆனந்தம்தான்!

படம்
  பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மனநல குறைபாடு என்பது சரிவர புரிந்துகொள்ளப்படவில்லை. அதனை எதிர்மறையாகவே மருத்துவர்களும், மக்களும் புரிந்துகொண்டனர். அதைப்பற்றி பேசியும், எழுதியும் வந்தனர். மனநல குறைபாடு என்றால் இதுதான் என்று  வரையறைகளும், அதை தீர்ப்பதற்கான முறைகளும் கூறப்பட்டன.  மனிதர்களுக்கு ஏற்படும் மனநல குறைபாடு என்பது பன்மைத்தன்மையானது. அதை குறிப்பிட்ட இறுக்கமான வரையறைக்குள் அடைப்பது சரியானது அல்ல என்ற கருத்தை அமெரிக்க உளவியலாளரான கார்ல் ரோஜர்ஸ் கொண்டிருந்தார். மனநிலையை குறிப்பிட்ட வரையறைக்குள் அடைப்பதை அவர் ஏற்கவில்லை. நல்ல மனநிலையை ஒருவர் அடைவதற்கு குறிப்பிட்ட செயல்நிலைகள் கிடையாது என கூறினார். வாழ்க்கை ஒவ்வொரு கணமும் நடந்துகொண்டே இருக்கிறது. நாமும் வாழ்ந்துகொண்டே இருக்கிறோம். அதன் வழியாக அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே உள்ளது. எனவே, மனநிலை சீர்கெட்டு உள்ளதாகவும், அதை ஒருவர் சரிசெய்துகொள்ளவேண்டும் என்பதையும் ரோஜர்ஸ் ஏற்கவில்லை.  நல்ல வாழ்க்கையை ஒருவர் வாழ அவர் புதிய அனுபவங்களுக்கு தனது மனதை திறந்து வைக்க தயாராக இருக்கவேண்டும். நிகழ்காலத்தில் வாழ வேண்டும்.