இடுகைகள்

உணர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நினைவுகளின் சேமிப்பு காலத்தை தீர்மானிக்கும் உணர்ச்சிகள்!

படம்
  1950ஆம் ஆண்டு, மனிதர்களின் மூளை, அதில் பதிவாகும் நினைவு பற்றிய ஆராய்ச்சிகள் வேகம் பிடித்தன. மூளையில் குறைந்தகால நினைவுகள், அதிக காலம் உள்ள நினைவுகள் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. 1970ஆம் ஆண்டு, கற்றல் கோட்பாடு, நினைவுகள் பற்றிய ஆய்வுகள் தொடங்கியது. சில நினைவுகளை நாம் எளிதாக நினைவுகூர்ந்து மீட்டெடுப்போம். அப்படி திரும்ப மீட்கும் நினைவுகள் பற்றித்தான் உளவியலாளர்கள் ஆர்வமாக தெரிந்துகொள்ள நினைத்தனர். உளவியலாளர் கார்டன் ஹெச் போவர், மூளையில் சேமித்து வைக்கும் நினைவுகளை உணர்ச்சிகள் பாதிப்பதைக் கண்டுபிடித்தார். அதாவது நினைவுகளை குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கும்போது அந்த நேரத்தில் உள்ள உணர்ச்சிகளும் அதோடு இணைந்துவிடுகின்றன. திரும்ப அதே நினைவில் நாம் இருக்கும்போது அந்த நினைவுகளை எளிதாக மீட்டெடுக்க முடிகிறது.  துயரமான நிலையில் உள்ளவர்கள், தங்கள் வாழ்க்கையில் நடந்த துயரமான வலி, வேதனை பெருக்கும் நினைவுகளை துல்லியமாக அன்று நடந்தது போல கூற முடியும். ஆனால் அதே மனிதர்கள் மகிழ்ச்சியான நிலையில் இருக்கும்போது துயர நினைவுகளை முன்னர்போல தெளிவாக கூற முடியாது. இதை மூட் கான்க்ரன்ட் புரோசஸிங் என்று

பூச்சிகளுக்கு உணர்ச்சிகள் உண்டா?

படம்
  பூச்சிகளுக்கு உணர்ச்சிகள் உண்டா? தேனீகளுக்கு உணர்ச்சிகள் உண்டு. அவை உயர்ந்தும் தாழ்ந்தும் மாறுகின்றன. இதில் சில பொம்மைகளோடு விளையாடும் இயல்பு கொண்டுள்ளன. கரப்பான் பூச்சிகளுக்கு ஆளுமைகள் உள்ளன. பழ ஈக்களுக்கு பய உணர்வு உள்ளது ஆகிய உண்மைகள், பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளில் தெரிந்துள்ளது. பூச்சிகளுக்கு உணர்ச்சிகள் உள்ளது என்பது புதிய சிந்தனை கிடையாது. 1872ஆம் ஆண்டு, சார்லஸ் டார்வின்   பூச்சிகளுக்கு பயம், பீதி, பொறாமை, காதல் ஆகிய உணர்ச்சிகள் உண்டு என்று கூறியுள்ளார். இப்போதுவரை பூச்சிகளின் மூளையில் என்ன சிந்தனை ஓடுகிறது என கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், நரம்பியல் ஆய்வாளர்கள், தத்துவவாதிகள் இந்தக்கருத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு சயின்ஸ் இதழில் அறிவியல் கட்டுரை ஒன்று வெளியானது. அதில் கட்டுரையாளர்களான ஃபிரான்ஸ் டே வால், தத்துவ பேராசிரியர் கிரிஸ்டன் ஆண்ட்ரூஸ் ஆகிய இருவரும் பூச்சிகளுக்கு உணர்வுகள் இருப்பது உண்மையென்றால், அவைக்கு குண இயல்புகளும் உண்டு என அர்த்தமாகிறது என கூறியிருந்தனர். மனிதர்கள் என்றால் அவர்கள் மனதில் நினைப்பது என்ன என்று கூற வாய்ப்பு

மக்களின் உணர்ச்சி தான் எனக்கு முக்கியம்! - ராஜமௌலி, தெலுங்கு சினிமா இயக்குநர்

படம்
  ராஜமௌலி தெலுங்கு சினிமா இயக்குநர் கருத்தியல் ரீதியாக வலதுசாரிகளுக்கு ஆதரவாக படமெடுப்பவர். காட்சிரீதியாக பார்வையாளர்களுக்கு நிறைவான அனுபவம் தருபவர். பாகுபலி மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் தெரிய வந்தவர். அதற்குமுன்னர் தெலுங்கில் இயக்கிய ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்ரி, எமதொங்கா, விக்ரமார்குடு, சத்ரபதி என அனைத்து படங்களிலும் ஏதாவதொரு புது விஷயத்தை முயற்சி செய்திருப்பதை பார்த்தாலே அறியலாம்.  நீங்கள் தெலுங்கு மொழியில் படம் எடுக்கிறீர்கள். ஆனால் அதை இந்தி மக்கள் வரவேற்கிறார்களே? நான் இந்தி, தெலுங்கு என எதையும் வேறுபடுத்தி பார்க்கவில்லை. காட்சிரீதியாக தான் நான் கதை சொல்லுகிறேன். மொழி ரீதியாக அல்ல. மொழி என்பது தகவல் தொடர்புக்கானது தான். அதை நடிகர்கள் பேசுகிறார்கள். எனது படங்களில் பெரும்பகுதி தகவல் தொடர்பு காட்சி ரீதியாகவே நடைபெறுகிறது. மொழியை நான் தடையாக நினைக்கவில்லை.  தென்னிந்தியப் படங்கள் இந்தி திரையுலகில் வெற்றி பெற காரணம், அவர்கள் சரியான முறையில் படங்களை எடுக்காததே காரணம். வெற்றிக்கான காரணம் என நம்மை நாமே கூறிக்கொள்ள முடியாது. 90களில் இந்தி திரையுலகம் அற்புதமாக கதை சொல்லும் ஏராளமா

உலகை மாற்றிய பெண்கள் - கவிஞர் சாபோ, எமிலி டிக்கின்சன்

படம்
                    பெண் கவிஞர் சாபோ தொன்மைக்கால புகழ்பெற்ற பெண் கவிஞர் தொன்மைக்காலத்தில் தனது ஆழ்மன உணர்ச்சிகள் , கருத்துகள் பற்றி பாடல்களை எழுதிய பெண்மணி . அந்த காலத்திலேயே இந்த வகையில் ஒன்பது பாகங்களாக கவிதை நூல்களை எழுதி குவித்தார் . இன்று சாபோ எழுதியவற்றில் 650 வரி கவிதைகள் மட்டுமே மிச்சம் .    சாபோ அன்றைய காலத்தில் டிரெண்டிங்கை பின்பற்றாமல் அதனை உருவாக்கியவராக இருந்தார் . இவர் எந்த ரிதத்தில் , எந்த பாணியில் கவிதையை எழுதினாரே அதே போல நகலெடுத்து ஏராளமான கவிஞர்கள் கவிதைகளை பின்னாளில் எழுதினர் . லையர் எனும் இசைக்கருவியை இசைக்க அதற்கு கவிதையைப் பாடுவது சாபோவின் திறமை . சாபோவின் காலம் 630 முதல் 612 வரை இருக்கலாம் . இவரது சொந்த வாழ்க்கை பற்றி நமக்கு குறைவான தகவல்களை கிடைக்கின்றன . கிரேக்க தீவான லெஸ்போஸில் பிறந்த பெண் கவிஞருக்கு மணமாகி பெண் குழந்தை இருந்திருக்கிறது . கடல் பயணி மீது காதல் கொண்டு அக்காதல் நிறைவேறாத தால் மலை உச்சியில் இருநது கீழே குதித்து உயிரை விட்டார் என்று தகவல்கள் சொல்லுகின்றன . தொன்மை நாணயங்களில் சாபோவின் உருவம் பொறிக்கப்பட்ட

மூளையில் நினைவுகள் எப்படி பதிவாகின்றன?

படம்
            நீண்டகால நினைவுகள் நமது மூளையில் நீண்ட காலத்திற்கு நினைவுகள் எப்படி சேமிக்கப்படுகின்றன என்பதை விளக்கமாக பார்க்கலாம் . கவன ஈர்ப்பு பொதுவாக ஒரு இடத்திற்கு செல்லும்போது நம்மை கவனிக்க வைக்கும் சில அம்சங்கள் இருக்கும் . பெண்களின் லோஹிப் ஜீன்ஸ் , தொட்டிச்செடி கட்டிங் , உடைகள் , ஒருவர் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை சொல்லலாம் . இவற்றின் ஆயுள் காலம் 0.2 நொடிகள்தான் . இவை முக்கியம் என நீங்கள் நினைத்தால் , அது மூளையிலுள்ள நியூரான்களை தூண்டுகிறது . தொடர்ச்சியாக இந்த தூண்டுதல் நடந்தால் அதுவே நீண்டகால நினைவாக சேகரிக்கப்படுகிறது . உணர்ச்சிகர ஈர்ப்பு உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உணர்ச்சிகளோடு தொடர்புடையதாக இருந்தால்அது மூளையிலுள்ள அமிக்டலாவில் பதிவாகி நீ்ண்டகால நினைவாக வாய்ப்புள்ளது . நீங்கள் சோகமாக இருக்கும்போது இசைக்கப்படும் இளையராஜாவின் ஆறுதல் பாட்டு , தந்தையைப் போன்ற ஒருவரிடமிருந்து கிடைக்கும் பாராட்டு , நம்மைச் சார்ந்தவர்களிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரம் , மகிழ்ச்சியாக இருக்கும்போது பெய்யும் மழை என பலவிஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம் .

உணர்ச்சிகள் வழியாக ஒருவரை எளிதாக புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவு! - பரபரக்கும் ஏஐ ஆராய்ச்சி உலகம்

படம்
  உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவு ! செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சி , மனிதர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு முன்னேறி வருகிறது . செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் வளர்ச்சிபெற்று வருகிறது . பல்வேறு இணையத்தளங்களில் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதும் ஏ . ஐ நுட்பம்தான் . புகைப்படங்களை பயிற்சி செய்து விலங்குகளை எளிதில் அடையாளம் காண கற்பதோடு மனிதர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளும் முயற்சியில் செயற்கை நுண்ணறிவுத்துறை பயணிக்கிறது . எப்படியிருக்கிறீர்கள் , சாப்பிட்டீர்களா ? என்ற வார்த்தைகளை இன்று பலரும் வீடியோ அழைப்புகளிலும் , குறுஞ்செய்திகளிலும்தான் கேட்டு வருகிறார்கள் . இந்த அழைப்புகள் நேருக்கு நேர் பேசுவது போல இருக்காது . இதில் ஒருவரின் உணர்வைப் புரிந்துகொண்டு பேசினால் எப்படியிருக்கும் ? எல் கலியோபி என்ற பெண்மணி , அஃபெக்டிவா என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் . வண்டி ஓட்டும்போது , மின்னஞ்சல் அனுப்பும்போது ஒருவரின் உணர்வுகளை எளிதாக அடையாளம் காணமுடியும் என இந்நிறுவனம் கூறுக

அகதி சிறுவனைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஆறு மாணவர்களின் வீரச்செயல்! - 7 டேஸ் வார்- அனிமேஷன்

படம்
    7 டேஸ் வார்!   7 டேஸ் வார்! ஜப்பான் அனிமே மாமோரு கானுக்கு, தன்னுடைய வகுப்பில் கூடவே படிக்கும் தோழி மீது காதல். ஆனால் அதனை நேரடியாக சொல்ல துணிச்சல் இல்லை. நிறைய படிப்பவன். நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவன். ஆனால் அவன் சொல்வதை காதுகொடுத்து கேட்க கூட அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் இல்லை. இந்த நிலையில் அவனது பள்ளித்தோழி கான் வாழும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. அப்போது அவளின் பிறந்த நாளும் வருகிறது. இதனைப் பயன்படுத்தி அவளை இம்ப்ரெஸ் செய்ய கான் முயல்கிறான். இதற்காக பயன்பாட்டில் இல்லாத தொழிற்சாலை ஒன்றுக்கு ஜாலியாக செல்ல திட்டமிடுகிறார்கள். அங்கு தோழியின் நண்பர்கள் அனைவருமே வருகிறார்கள். ஒரே வகுப்பில் இருந்தாலும் கூட அதிகம் பேசிப்பழகாத ஆட்கள். அங்கு வாழும் தாய்லாந்து சிறுவன், பெற்றோரை தவறவிட்டு அவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன். அவனைப் பிடிக்க ஜப்பான் குடியுரிமைத்துறை முயற்சிக்கிறது. கான் தலைமையில் அவனது நண்பர்கள் ஒன்று திரண்டு அந்த தொழிற்சாலையில் அச்சிறுவனைக் காக்க முயல்கிறார்கள். இது தேசிய அளவில் செய்தியாக, அச்சிறுவனின் பெற்றோர் கிடைத்தார்களா

வெப்பத்தை மூளை எப்படி உடனே உணர்ந்துகொள்கிறது?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி வேறு எந்த உணர்ச்சிகளை விடவும் உடலில் சூடு பட்டவுடன் எப்படி வேகமாக உணர்கிறோம்? சூடு பற்றிய தகவல் மூளைக்கு 27 மில்லி செகண்டுகளில் சென்று சேர்ந்துவிடும். நம் கைகளில் நொடிக்கு 50--60 மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும். ஸ்டவ்வில் நீங்கள் கையில் வைத்திருக்கிறீர்கள் என்றால், நாம் முடிவெடுத்து கையை எடுப்பதற்குள் கை வெந்துவிடும். இதற்காகவே, உடலின் இயல்பான பாதுகாப்பு அமைப்பு சூடு, குளிர்ச்சி என்பதை உடனே உணர்ந்து தன்னை அதிலிருந்து விடுவித்துக்கொள்ள முயற்சிக்கும். இதனை மோட்டார் இயக்கம் எனலாம். சட்டை பட்டன் போடுவது, ஆணிகளை திருகிப் பொறுத்துவது போன்றவை இதில் அடங்கும்.  இவை முதுகெலும்போடு இணைந்துள்ளன. அனைத்து விவகாரங்களிலும் மூளை முடிவெடுத்தால் நாம் உயிர் வாழ முடியாது. எனவே சில விஷயங்களில் உடல் தன்னிச்சையாக முடிவெடுக்கும். எதற்காக, தன்னைக் காத்துக்கொள்ளத்தான். 

உலகின் இரண்டாவது சர்ச் எஞ்சின் எது? - ஜிபி வலைத்தளம் பிறந்த கதை!

படம்
ஜிபி எனும் ஜிஃப் படங்களுக்கான வலைத்தளம்தான் இந்த சாதனை செய்துள்ளது. கூகுளுக்கு அடுத்தபடியாக அதிகளவு தேடுதல் தகவல்களை இத்தளத்தில்தான். அலெக்ஸ் சுங் இந்த தகவலைச் சொல்லி பரவசப்படுத்திய நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. எங்களுடைய வலைத்தளம் கூகுளுக்கு மிக அருகில் இருக்கிறது. ஒரு நாளுக்கு 9 பில்லியன் படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. தகவல் போட்டியில் கூகுளை நாங்கள் ஒப்பிடவில்லை. உணர்வுகள், கலாசாரம் ஆகியவற்றை கொண்டு செல்வதில்தான் நாங்கள் போட்டியிடுகிறோம். அது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் பல்வேறு திரைப்பட நிறுவனங்களுடன் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளோம் என்று கூறினார் அலெக்ஸ் சுங். எப்படி இப்படியொரு தளத்தைத் தொடங்கினீர்கள் என்று கேட்டோம். அதற்கு, நான் நண்பர்களுடன் விளையாட்டாக  தொடங்கிய வலைத்தளம் இது. சவால் இதுதான். நான் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். ஆனால் எனக்கு நிறைய மொழிகள் தெரிந்தால்தான் அது சாத்தியம். படங்கள் கூட உதவும். ஆனால் அது டைனமிக்காக இயங்கும்படி இருந்தால் எப்படியிருக்கும் என யோசித்தோம். ஜிபி பிறந்தது. என்று கூறியவர் ஜாலியாக இதற்கு ஒரு ஜிஃப் போட்ட

மூளையை கணினியுடன் இணைத்து உணர்ச்சிகளையும் உருவாக்கலாமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நாம் நம்முடைய மூளையை கணினியில் இணைக்கும்போது நம்முடைய உணர்ச்சிகளும் அதில் பதிவாகுமா? எலன்மஸ்க் ஏற்கனவே தன் எண்ணத்தைச் சொல்லி நியூராலிங்க் எனும் நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார். எனவே நிச்சயம் எதிர்காலத்தில் நம்முடைய மூளை ஏதோவொரு கணினியில் இணைக்கப்படும். அப்போது நம் மூளையிலுள்ள கருத்துகள் எண்ணங்கள் உணர்ச்சிகளும் கணினியில் பதிவாகுமா? மூளையில் நியூரான்கள், கிளியல் செல்கள், ரத்தசெல்கள் இவற்றில் நடக்கும் வேதிவினைகள்தான் நம் எண்ணங்களுக்கு காரணம். ஒருவரின் உடலை விட்டு உயிர் பிரிந்தபின்னரும் கூட அவரின் மூளை மூலம் அவரின் எண்ணங்களை உயிரோடு வைத்திருக்க முடியும். இதனை பின்னர் இன்னொருவரின் உடலோடு கூட பொருத்தமுடியும் என்று வையுங்களேன். நினைவில் கொள்ளுங்கள். இயற்கையான மூளையிலிருந்து டிஜிட்டல் பிரதி உருவான பிறகு, இயற்கை மூளை குப்பையில் எறியப்பட்டு விடும். அதுவே உண்மை. அதற்குப்பிறகு மனித உடலை டிஜிட்டல் முறையில் செயற்கையாக நாமே வடிவமைத்துக்கொள்ள முடியும். இதற்கான சாட்சிகளை நாம் விரைவில் பார்க்கத்தான் போகிறோம். நன்றி: பிபிசி