இடுகைகள்

தன்னார்வம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானாக முன்வந்து உதவும் ஆனந்த்! - திருச்சி தன்னார்வத் தொண்டர் கதை!

படம்
  சூரியன் வானில் வெளிச்சம் காட்டியபோதும் கூட சிகே ஆனந்தின் பணி நிற்கவில்லை.  அவரது போன் அழைப்புகள் வந்துகொண்டு இருந்தன. மழைப்பொழிவால் நீரில் மூழ்கிய பல்வேறு இடங்களிலிருந்து உதவி கேட்டு அழைக்கும் அழைப்புகள்தான் அவை. படகு வேண்டும், உணவுக்காக காய்கறிகள் வேண்டும் என குரல்கள் ஏதேனும் உதவிகளை கோரியபடி இருந்தன.  அத்தனை அழைப்புகளையும் சமாளித்து காய்கறிகளை தேவையான உதவிகளை ஆனந்த் வழங்கிக்கொண்டே இருந்தார். முப்பது வயதான ஆனந்த், தன்னையொத்த உதவும் மனம் கொண்ட தன்னார்வலர்களின் குழுவை ஒருங்கிணைத்து மேற்சொன்ன அழைப்புகளுக்கு வரும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார். வெள்ள பாதிப்பு பிரச்னை ஏற்பட்டபோது காலை ஏழுமணி தொடங்கி நள்ளிரவு வரை பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தது இக்குழு.  கருமேகங்கள் திருச்சி நகரை சூழ்ந்தபோது, லிங்கம் நகர், அருள் நகர், செல்வம் நகர், ராஜலட்சுமி நகர் ஆகிய இடங்களிலிருந்து உதவி கோரி அழைப்புகள் வந்தன. உடனே தன்னுடைய பகுதியை சேர்ந்த சில இளைஞர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றார் ஆனந்த். முதலில் முக்கொம்பு பகுதிக்கு போனவர், அங்கு மக்களுக்கு தேவையான தினசரி வாழ்க்கைக்க

ஆந்திரப் பிரதேசத்தில் பிச்சைக்கார ர்களுக்கும், வீடற்றோருக்கும் உணவு வழங்கும் மூன்று ராணுவ வீரர்கள்! - பெருகும் இளைஞர்களின் ஆதரவு

படம்
                  ஆதரவற்றோருக்கு உணவு ! ஆந்திரப்பிரதேசத்தில் மூன்று ராணுவ வீரர்கள் , ஆதரவற்றோருக்காக உணவு வழங்கி வருகின்றனர் . இப்பணியை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வருகின்றனர் . பலசா ரயில் நிலையத்தில் உள்ள பிச்சைக்காரர்கள் , வீடற்ற மக்களுக்கு விவேகானந்தா சேவா சமிதி என்ற பெயரில் அமைப்பை நிறுவி உதவிகளை வழங்கி வருகிறார்கள் . ரபகா கிரண் , பன்னி , தர்மா ஆகிய மூவரும்தான் இந்த பணியில் இறங்கி பல்வேறு உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள் . கிரண் இந்தோ திபெத் ராணுவ வீரர் என்றால் மற்ற இருவரும் அசாம் ரைபிள்ஸ் , எல்லைப்பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் . தொடக்கத்தில் பலசா பகுதியிலுள்ள உணவகங்களில் மீதியாகும் உணவைப் பெற்று பிச்சைக்காரர்களுக்கும் , உணவு தேவைப்படுவோருக்கும் வழங்கத் தொடங்கியுள்ளனர் . இந்த மூன்று ராணுவ வீரர்களின் பணியைப் பார்த்துவிட்டு மாவட்டத்திலுள்ள 600 இளைஞர்கள் இவர்களின் விவேகானந்தா சமிதி பணியில் இணைந்துள்ளனர் . மண்டசா , சோம்பேட்டா , ஹரிபுரம் என மூன்று பகுதிகளுக்கு உணவு அளிக்கும் பணி விரிவடைந்துள்ளது . இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தன்னார்வலர்க