இடுகைகள்

மனநிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவில் வறுமையில் வாடும் குழந்தைகள்!

படம்
  அமெரிக்காவில் வறுமை விளிம்பில் தள்ளப்படும் சிறுவர்கள்! அமெரிக்காவில் வறுமை நிலையில் உள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரித்து வருகிறது. இதை அமெரிக்க அரசின் மக்கள்தொகை அமைப்பு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு, 5.2 சதவீதமாக இருந்த வறுமை நிலையிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது 12.4 சதவீத்த்திற்கும் அதிகமாக உள்ளது. அமெரிக்க அரசும் கையைக் கட்டிக்கொண்டு சும்மாயிருக்கவில்லை. குழந்தை வரி கடன் திட்டம் என்பதை அமல்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்கள் தொழில் செய்து வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குழந்தைக்கு 3,600 டாலர்கள் வரியைக் கடனாக கொடுக்கிறார்கள். இத்தொகையை அரசு வரி வருவாயில் இருந்து விட்டுக்கொடுக்கிறது. இதன்மூலம் அரசுக்கு வருமானம் குறைந்தாலும் கூட குழந்தைகள் ஏழ்மை நிலையில் இருந்து வெளியே வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்போதைக்கு இந்த திட்டம் மூலம எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை . ஆனால் எதிர்காலத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறது. தனிப்பட்ட மனிதர்களின் தோல்வி என்று இல்லாமல் அரசின் கொள்கை ரீதியான முடிவுகளே

திறமையான வீரர்களுக்கு ஓய்வு அவசியம் தேவை! - கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

படம்
  ஹர்பஜன் சிங் கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹர்பஜன் சிங் நேர்காணல் இந்தியாவுக்கு விளையாட வந்துள்ள ஆஸ்திரேலிய அணிகளில் தற்போதைய அணி, இதுவரை வந்து விளையாடியதில் மிகவும் பலவீனமான அணியாக உள்ளதா? எப்படி சொல்கிறீர்கள்? முன்னர், இந்தியாவில் விளையாடுவதற்கு வந்த ஆஸி. அணியைப் பார்த்தாலே வேறுபாடு தெரியும். அதற்காக முப்பது நாற்பது ஆண்டுகள் பின்னே போகவேண்டாம். எனக்குத் தெரிந்து இப்போது வந்து விளையாடும் அணி மிகவும் பலவீனமாக இருக்கிறது இங்கு நான் கூறுவது திறமையைப் பற்றியல்ல. அவர்களின் மனநிலையைப் பற்றி… முந்தைய அணி வீரர்களைப் போல இவர்களால் களத்தில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை. அதனால்தான் இந்த அணி, ஆஸியைப் போல இல்லை. நாங்கள் விளையாடிய ஆஸி. அணியைப் போல இல்லை என்று கூறுகிறேன். அணியில் என்ன போதாமை இருக்கிறது என கூறுகிறீர்களா?ஆ ஆஸி அணி, எப்போதும் ஒரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் வருவதற்கு முன்னரே பல்வேறு திட்டங்களைத் தீட்டி வைத்திருப்பார்கள். விளையாடும் நாட்டின் தட்பவெப்பநிலை பற்றிய தீர்க்கமான அறிவு ஆஸி அணிக்கு உண்டு. இதனால்தான் அவர்கள் பிற அணிகளை விட அதிக வெற்றிபெற்றவர்களாக இருக்கிறா

மனநோயாளிகளோடு ஒரு போர் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  மனநோயாளிகளோடு நேருக்கு நேர் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உடல்நலனோடு மனநலனைப் பராமரிப்பது கடினமாக இருக்கிறது . நான் அமைதியாக இருந்தாலும் அலுவலகத்தில் உள்ள உளவியல் பிரச்னை கொண்டவர்கள் ஏதாவது பிரச்னையை செய்துகொண்டே இருக்கிறார்கள் . நமக்கு தொடர்புடையவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் . இதன் பொருட்டு சில சமயங்களில் நமக்கே பாதகமான முடிவுகளைக் கூட நாம் எடுக்கவேண்டியுள்ளது . அண்மையில் அலுவலகத்தில் சேர்ந்தவர் , கணிதப்பக்கத்தைக் கவனிக்கிறார் . அவர் , இதுபோல குறைபுத்தி கொண்டவர்களால் பாதிக்கப்பட்டார் . என்னோடு டீ குடிக்க வருவதால் அவரை கார்னர் செய்தனர் . எனவே , அலுவலக நண்பரை விட்டு தனியாக பிரிய முடிவெடுத்துள்ளேன் . ஆசையா , நிம்மதியா என்றால் நான் நிம்மதியைத் தான் தேர்ந்தெடுப்பேன் . நன்றி ! அன்பரசு 7.12.2021 மயிலாப்பூர் ------------------------------------------------------------------------------- ------------------------------------------------ என்னமோ ஏதோ ... அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? எங்கள் நாளிதழ் ஜனவரி தொடங்குவதாக கூறியிருக்கிறார்கள் . கட்

தனிநபர்களை தாக்கும் வன்முறைக்கு பெயர் என்ன? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  ரன்னிங் அமோக் (Running amok) என்பது உடல்நலக்குறைபாடா?  மலாய் வார்த்தையான மெங் அமுக் (Meng amuk)என்பதிலிருந்து ரன்னிங் அமோக் என்ற வார்த்தை உருவானது. சமூகத்தை புறக்கணித்த மனிதர், பெருந்திரளான அல்லது தனிநபர்களை தீவிரமாக தாக்கும் குறைபாடு என ரன்னிங் அமோக்கை வரையறை செய்யலாம். 1770ஆம் ஆண்டு கடல் பயணம் செய்த கேப்டன் குக் என்பவர், மலேஷிய பழங்குடிகளிடையே ரன்னிங் அமோக் மனநல குறைபாடு இருப்பதை பதிவு செய்துள்ளார்.  ஜீன்ஸ் பேண்டிலிலுள்ள சிறிய பாக்கெட் எதற்கு?  1879ஆம் ஆண்டு, லீவிஸ் ஸ்ட்ராஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜீன்ஸ் பேண்டில் நான்கு பாக்கெட்டுகள் இருந்தன. இதில் ஒரு சிறிய பாக்கெட்டும் உள்ளடங்கும். அன்றைய காலத்தில், ஆண்கள் தங்களின் பாக்கெட் வாட்சுகளை ஜீன்ஸில் வைத்துக்கொள்ளத்தான் இந்த வசதி. ஆனால் பின்னாளில் சிறிய பாக்கெட்டின் பயன்பாடு மாறி பயணச்சீட்டு, நாணயங்களை வைத்துக்கொள்வதாக மாறிவிட்டது.  https://www.rd.com/article/tiny-pocket-in-jeans/  https://www.rd.com/list/interesting-facts/ https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC181064/

அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ளும் கோஸ்டிங் மனநிலை!

படம்
  திடீரென காணாமல் போகும் காதலி!  கோஸ்டிங் என்பது இப்போதைக்கு டேட்டிங் ஆப்ஸ்களில் அதிகம் நிலவும் ஒரு சூழல் என வைத்துக்கொள்ளலாம்.  ஒருவர் உங்களோடு நன்றாக பழகிக்கொண்டிருக்கிறார். தொலைபேசி எண், வாட்ஸ்அப், டெலிகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து கணக்குகளிலும் ஒன்றாக இருக்கிறீர்கள். சாட் செய்கிறீர்கள். இன்பாக்ஸில் செய்தி போடுகிறீர்கள். வீக் எண்டில் சந்திக்கிறீர்கள் என இருக்கும் உறவு ஒருநாள் திடீரென மாறுகிறது. எப்படி என்றால் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் நண்பர், தோழி திடீரென அனைத்து தொடர்புகளையும் உங்களுடன் துண்டித்துக்கொள்கிறார். உங்களுக்கு என்னாகும்? என்னாச்சு என பதற்றமாவீர்கள். ஆனால் அவர் அழைப்பு, குறுஞ்செய்தி, சமூக வலைத்தள செய்தி என அனைத்தையும் புறக்கணிக்கிறார். இது மனதளவில் யாரையும் பாதிக்க கூடியது.  இதைத்தான் கோஸ்டிங் என்கிறார்கள். ஒருவர் தான் கொண்டுள்ள உறவை அனைத்து மட்டங்களிலும் துண்டித்துக்கொண்டு கண் பார்வைக்கே படாமல் காணாமல் போவது.  கோஸ்டிங் என்பது உறவுகளுக்கு மட்டுமல்லாது, பல்வேறு குற்றங்களுக்கும் கூட ஆதாரமாக இருக்கலாம் என டேட்டிங் ஆப்கள் நினைக்கின்றன. எனவே, அவை இத

புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான கூடு!

படம்
  பொள்ளாச்சியில் சரணாலயம் ஜோதி என்ற தன்னார்வ அமைப்பு தொண்டாற்றி வருகிறது. இதைத் தொடங்கிய வனிதா ரங்கராஜூக்கு இப்போது 67 வயதாகிறது. மாவட்டத்தில் மூன்று இடங்களில் இந்த அமைப்பின் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.  வனிதாவுக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் பிறந்தன. அப்போதுதான் நடந்தது முக்கியமான நிகழ்ச்சி. காந்தி நகரிலுள்ள குடிசைப்பகுதிகளுக்கு நலத்திட்டங்கள் தொடர்பாக சென்றிருந்தார். அங்கு மூளை தொடர்பான குறைபாடு உள்ள சிறுவனைப் பார்த்தார். அவனுக்கு உள்ள பிரச்னையை மருத்துவர்கள் செரிபெரல் பால்சி என்று அழைத்தனர்.  பையனை முழுக்க வீட்டிலிருந்தே பார்த்துக்கொள்ள முடியாதபடி அவனது அம்மாவுக்கு பொருளாதார நிலைமை இருந்தது. காலையில் வேலைக்கு போய்விட்டு வந்து பார்த்தால் தரையில் அப்படியே விழுந்து கிடப்பான் குழந்தை. பதறிப்போய் பார்த்தால், உடலில் பல்வேறு இடங்களில் பூனையின் நக கீறல்கள். அவனுக்கு வனிதா வைத்த பெயர் சக்தி. ஆனால் அங்குள்ளவர்கள் அவன் எப்போது தரையில் விழுந்து கிடப்பதால், அவனை பூச்சி என பட்டப்பெயர் வைத்து அழைத்தனர்.  அவனைக் கவனித்துக்கொள்ள ஏதாவது செய்யத் தோன்றியது. உடனே வனிதா தனது தந்தையிடம் சிறிது பணம் பெ

குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் மனநிலை!

படம்
  குற்றங்களை ஆவணப்படுத்துவர் கொல்லப்படுவாரா ஆங்கில திரைப்படங்களில் இப்படி காட்டுவார்கள். ஆனால் உண்மையில் குற்றங்களை ஆவணப்படுத்துபவர் நூலகத்தில் இருப்பார். அல்லது காவல் நிலையத்தில் குற்றம் பற்றிய புகைப்படங்களை ஆய்வு செய்துகொண்டிருப்பார்.  அதிகபட்சமாக சிறை சென்று சிலரை நேர்காணல் செய்துகொண்டிருப்பார். பொதுவாக கொலை செய்த இடத்திற்கு சென்று விசாரிப்பது காவல்துறையினரின் வேலை. அங்கு வேறுவழியில்லாமல் செல்லவேண்டிய நிலையில்தான் குற்றங்களை ஆவணப்படுத்துபவர் செல்வார்.  தான் திட்டமிட்டபடி கொலைகளை நம்பிக்கையுடன் செய்துகொண்டிருக்கும் சீரியல் கொலைகாரர், காவல்துறையின் தொடர்பு கொண்டவரை கொல்வது அரிது. தேவையில்லாமல் எதற்கு மாட்டிக்கொள்ள அவர் நினைக்கவேண்டும்? குற்றங்களை செய்யும் மனம் குற்றங்களை ஆவணப்படுத்துபவர், பல்லாண்டுகளாக இதுதொடர்பான ஆய்வில் இருப்பவர். யாராக இருந்தாலும் கொலையைப் பார்த்தவுடனே சற்று மனம் அதிர்ச்சியடையவே செய்யும். ஆனால் பிறருக்கு ஏற்படும் அதிர்ச்சியை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இதனால் கொலையைப் பார்த்தவுடனே கொலையாளியை எப்படி கண்டுபிடிப்பது என அவர்கள் யோசிப்பார்கள். தடயங்களை சே

சமூகத்திலிருந்து ஒருவர் தனிமைப்படுவதற்கான காரணம்!

படம்
                  பல்வேறு விழாக்கள் , கலந்துரையாடல் , நிகழ்ச்சிகள் என்று செல்லும்போது வயிற்றுக்குள் வெடிகுண்டு வெடிக்கிறதா ? தலை கிறுகிறுவென வருகிறதா அத்தனைக்கும் அடிப்படைக் காரணம் சமூக பற்றிய பதற்றம்தான் . இது அனைவருக்கும் என்று கூற முடியாது . சிலருக்கு இதுபோல பதற்றம் இருக்கும் . மது அருந்துபவர்கள் , வேலையில் மன அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கு சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது கடினமாகவே இருக்கும் . இவர்கள் பெரும்பாலான கூட்ட நிகழ்வுகளை தவிர்த்து விடுவார்கள் . பொதுவாக வேட்டையாடி பிழைக்கும் காலத்தில் மனிதர்கள் ஒன்றாக குழுவாக வாழ்ந்தார்கள் . அவர்கள் யாருக்கு யார் என்பது சமூக அந்தஸ்து அடிப்படையில் தெளிவாக தெரியும் . ஆனால் இன்று குழப்பாக சூழல் நிலவுகிறது . மக்கள் தனியாக வசிக்கிறார்கள் . வாழ்கிறார்கள் . எனவே அவர்களை ஒன்றாக இணைக்கும்போது பிறரைப் பற்றிய பயம் ஏற்படுகிறது . பதற்றத்தைக் குறைக்க பெரிய விழாக்களில் பிறரை வரவேற்பது , நண்பர்களுடன் பேசுவது என நிதானமாக இருந்தாலே போதும் . அதில் அணியும் ஆடையைக் கூட ஒத்திகை பார்த்து கொள்ளலாம் . தன்னைப்பற்றிய கவனம் , பதற்றம் இல்லாமல் இருக்

வெயில், மழையால் மனநிலை மாற்றங்கள் நடக்குமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி வெயில் அதிகரிக்கும்போது நமக்கு ஏன் கோபம் அதிகரிக்கிறது? வரிசையில் ரேஷன் வாங்க நிற்கிறீர்கள். அப்போது டீன் ஒருவன் கேசுவலாக உள்ளே வந்து அண்ணே அரிசியைப் போடுங்க என்று கார்டை நீட்டினால், டேய் வரிசையில் வந்து நில்லு என்று சொல்லுவீர்கள்தானே?  அனைவரும் கடையில் நின்று பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது குறுக்கே ஒரு சிறுவன் புகுந்து இந்த லிஸ்டுல இருக்குற பொருட்களைக் கொடுங்க அங்கிள் என என்று சொன்னாலும் இதே போலத்தான் நமக்கு கோபம் பொங்கும். ஆனால் இந்த கோபத்திற்கும் அன்று உதித்த சூரியனுக்கும் தொடர்பு இருக்கிறது. 1990 களில் இதுபற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், வெயில் அதிகமாக இருந்தபோது குற்றச்சம்பவங்கள் 2.7 சதவீதம் அதிகரித்ததாக கண்டுபிடித்தனர். இது இந்த நாடு மட்டுமல்ல, வெயில் அதிகமாக உள்ள நாடுகளில் அனைத்திலும் கோபக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள். இதனால் போலீஸ் ஸ்டேஷன்களும் நிறைந்து உள்ளன. 2016 ஆம் ஆண்டு டெக்ஸாசிலுள்ள டெக் பல்கலைக்கழகத்தில் இரண்டு விளையாட்டு வீர ர்களிடையே இச்சோதனையை செய்தபோது, வெயில் அதிகமாக இருந்தபோது நிறைய பந்துகளை பௌல் செய்து அலம்பல் செய்த

ஹாப்டிக் மெமரி - தொட்ட அனுபவித்த நினைவுகளின் களஞ்சியம் என்பது உண்மையா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஹாப்டிக் மெமரி என்றால் என்ன? ஹாப்டிக் மெமரி என்பது ஒன்றைத் தொட்டது பற்றிய நினைவு. ஒரு பூட்டைத் தொட்ட நினைவு இன்னொரு பூட்டைத் தொடும்போது, அல்லது திறக்கும்போது வரலாம். ஒருவரின் கையைத் தொடும்போது, அதன் மென்மை உங்களுக்கு பழகியது போல தோன்றினால் அதுதான் ஹாப்டிக் மெமரி. இந்த நினைவு ஒரு பொருளைத் தொடுவது, அல்லது அது தொடர்பான நினைவுகளின் சேகரிப்பால் உருவாகிறது. நன்றி:  https://www.alleydog.com

கொலைகாரர்களின் மனநிலை இதுதான்!

படம்
கொலைகாரர்களின் மனநிலை பொதுவாக கொலை என்பது ஆசை, அன்பு, பொறாமை இதன் பொருட்டுதான் நடைபெறுகிறது. பெரும்பாலும் அன்பின் மறுபக்கம் இதுபோல பொறாமை, கொலை ஆகியவை மறைந்திருக்கும். கொடூரமான கொலை நடந்திருக்கும். ஏசி வெடித்து மரணம் என்றிருந்தால், நன்றாக விசாரித்தால் அது சின்ன வயதில் தன்னை கவனிக்காமல் தம்பியை மட்டும் கவனித்தார்கள். அது நெஞ்சில் ஆறாக்காயமாக இருந்தது. பிளான் செய்து போட்டுத் தள்ளினேன் என்று கூறுவார்கள். இதெல்லாம் தந்தியில் நீங்கள் வாசித்திருப்பீர்கள். பொதுவாக ஆண்கள் குற்றங்களில் அதிகம் ஈடுபடுபவர்கள் என தந்தி முதல் டெக்கன் கிரானிக்கல் வரை நம்ப வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் அந்த குற்றங்களுக்கு பின்னணியாக பெண்களும் உண்டு என்ற உண்மையை பத்திரிகைகள் மறைத்துவிடுகின்றன. எதற்கு பெண்களின் வாழ்க்கையைக் காப்பற்றத்தான். ஆண், பெண் இருவரின் குற்றச்செயல்பாடுகளை இலண்டன் மருத்துவர் மஹ்மூத் நசிரி ஆராய்ந்தார். இவர் அரசின் என்ஹெச் எஸ் ஸில் பணிபுரிகிறார். பெண்கள் குற்றங்களில் கொலைகளில் ஈடுபடக்காரணம் பெரும்பாலும் சொத்துக்கள்தான். காப்பீடு, குடும்ப பெருமை, கௌரவம் ஆகியவற்றுக்காக பெண்கள் குற்றச்செ

சைக்கோ கொலைகாரர்களின் மனநிலை என்ன?

படம்
சைக்கோ கொலைகாரர்களின் மனநிலை 2012 ஆம் ஆண்டு டாக்டர் பால் பாபியாக் குழுவினர் சைக்கோ கொலைகார ர்களின் உளவியல் குறித்த அறிக்கை ஒன்றைத் தயாரித்தனர். அதில்  எஃப்பிஐயின் 2012 ஆம் ஆண்டு அறிக்கையை முக்கிய ஆதாரமாக சுட்டிக்காட்டினர். அதில் அமெரிக்காவிலுள்ள 20 லட்சம் சிறைக்கைதிகளில் 90 சதவீதம் பேர் உளவியல் பிரச்னைகளுக்குள்ளானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் சைக்கோ கொலைகார ர்கள் செய்யும் கொலை திட்டமிடப்பட்ட ஒன்று என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் அதனை தற்செயலானது என்றே விசாரணையில் கூறுவார்கள். ஆனால் சமூகத்திடமிருந்து விலகி நடக்கும் குணம் கொண்ட இவர்களை எளிதாக கண்டறிய முடியாது. பொதுவாக இவர்களுக்கு கொலையில் உதவுபவர்கள், மனநிலை பாதிப்பற்றவர்களாகவே இருப்பார்கள். ஏதோ ஒருவகையில் கொலைகார ருக்கு நட்பு ரீதியில் உதவினாலும் பின்னாளில் இவர்கள் மீது பழிதூக்கி போடப்படுவதும் உண்டு. கொலையானவர்களை கொலைக்கு காரணமாக சொல்வது மனச்சிதைவுக்கு உட்பட்டவர்களின் குரூர யுக்தி. பொதுவாகவே பல்வேறு வழக்குகளில் இந்த தன்மையைக் காணலாம். நீதிமன்றத்தில் குற்றங்களை அரசு தரப்பு அடுக்கும்போது சைக

வன்முறையைத் தூண்டுகிறதா இசை?

படம்
பிபிசி மெட்டல் மியூசிக் வன்முறையைத் தூண்டுகிறதா? பொதுவாக ஹெவி மெட்டல் எனும் இசைவகை, வன்முறை கொண்டதாக பலரும் பார்க்கிறார்கள். டாட்டூ குத்தியபடி கிடாரின் கம்பிகள் அறுந்துவிழும் வேகத்தில் இசைக்கும் இசையை பலரும் கேட்டு கெட்ட ஆட்டம் போடுவது உலக வழக்கம். அப்போது அத்தனை பேரின் மனநிலையும் வன்முறையை நோக்கித்தான் குவிகிறதா? என்று ஆராய்ந்தபோது கிடைத்த முடிவுகள் அப்படி அல்ல என்று கூறிவிட்டன. பார்க்கும் படம், சாப்பிடும் உணவு ஆகியவற்றை வைத்து ஒருவரின் கேரக்டரை வரையும் பழக்கம் இந்தியாவில் மட்டும் அல்ல. உலகம் முழுக்கவே உண்டு. இசை கேட்பதும் அதில் ஒன்றுதான். வன்முறையான தீமில் இசை கேட்பது, மனதில் வன்முறையை ஏற்படுத்தும் என்பது தவறு மேக்குவார் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. வறுமை, உறவு, போதைப் பொருட்கள் பயன்பாடு, தனிமை உணர்ச்சி ஆகியவையும் இதனோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. அரிஸ்டாட்டில் இதுபற்றி, ஒருவர் நீண்டநாட்கள் குறிப்பிட்ட வகையிலான இசையைக் கேட்பது அவரின் ஆளுமையை வெளிப்படுத்துவதோடு,  உள்மன ஆசைகளையும் கூறுகிறது என்கிறார். ஆனால் இந்த கருத்துகளையும் தாண்டி மெட்டல் இசை கேட்கும்