சைக்கோ கொலைகாரர்களின் மனநிலை என்ன?



Lai N. Nguyen 8




சைக்கோ கொலைகாரர்களின் மனநிலை

2012 ஆம் ஆண்டு டாக்டர் பால் பாபியாக் குழுவினர் சைக்கோ கொலைகார ர்களின் உளவியல் குறித்த அறிக்கை ஒன்றைத் தயாரித்தனர். அதில்  எஃப்பிஐயின் 2012 ஆம் ஆண்டு அறிக்கையை முக்கிய ஆதாரமாக சுட்டிக்காட்டினர். அதில் அமெரிக்காவிலுள்ள 20 லட்சம் சிறைக்கைதிகளில் 90 சதவீதம் பேர் உளவியல் பிரச்னைகளுக்குள்ளானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அதேசமயம் சைக்கோ கொலைகார ர்கள் செய்யும் கொலை திட்டமிடப்பட்ட ஒன்று என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் அதனை தற்செயலானது என்றே விசாரணையில் கூறுவார்கள். ஆனால் சமூகத்திடமிருந்து விலகி நடக்கும் குணம் கொண்ட இவர்களை எளிதாக கண்டறிய முடியாது.

பொதுவாக இவர்களுக்கு கொலையில் உதவுபவர்கள், மனநிலை பாதிப்பற்றவர்களாகவே இருப்பார்கள். ஏதோ ஒருவகையில் கொலைகார ருக்கு நட்பு ரீதியில் உதவினாலும் பின்னாளில் இவர்கள் மீது பழிதூக்கி போடப்படுவதும் உண்டு. கொலையானவர்களை கொலைக்கு காரணமாக சொல்வது மனச்சிதைவுக்கு உட்பட்டவர்களின் குரூர யுக்தி. பொதுவாகவே பல்வேறு வழக்குகளில் இந்த தன்மையைக் காணலாம்.

நீதிமன்றத்தில் குற்றங்களை அரசு தரப்பு அடுக்கும்போது சைக்கோ கொலைகார ர்கள் உடனே குற்றத்தை உணர்ந்த தாகவும், கழிவிரக்கம் கொண்டதாகவும் பேசுவார்கள். காரணம் தண்டனை குறைவாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான்.

ஆக்கம்: பொன்னையன் சேகர்

நன்றி: சைக்காலஜி டுடே

Why We Love Serial Killers: The Curious Appeal of the World’s Most Savage Murderers.


பிரபலமான இடுகைகள்