முஸ்லீம்களை உளவு பார்க்கும் சீன அரசு!



Image result for china ijop plan




நேர்காணல்

சீனா, தன் நாட்டிலுள்ள இய்கூர் மற்றும் துருக்கிய முஸ்லீம்களை கவனமாக பார்த்து கட்டுப்படுத்த குறிப்பிட்ட ஆப்பைப் பயன்படுத்துகிறது. இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்தால் ஒருவரின் மின்கட்டணம் இணையம் முதற்கொண்டு கண்காணிக்க முடியும். 

ஐஜேஓபி பற்றி கூறுங்கள். 

நாடு முழுக்க ஒரே கணினியில் கொண்டுவரும் கண்காணிப்புத் திட்டம் இது. செக் போஸ்ட்,மக்கள் ஒன்றுகூடும் இடங்கள், பள்ளிகள் தெரு என அனைத்து இடங்களிலும் இந்த கண்காணிப்பு உண்டு. ஜின்ஜியாங் பகுதியில் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது ஆபத்தான கண்காணிப்பு திட்டமாக மெல்ல மாறிக்கொண்டிருக்கிறது.



Interactive: How Mass Surveillance Works in Xinjiang, China


ஆப்பின் செயல்பாடு பற்றிக் கூறுங்கள். 

நீங்கள் அரசு கூறும் விதிகளை மீறீனாலே ஆப் தானாகவே அருகிலுள்ள அதிகாரிக்கு செய்தி அனுப்பி விடும். நீங்கள் என்ன வலைத்தளத்தை பார்க்கிறீர்கள். அதில் வன்முறையைத்தூண்டும் விஷயங்கள் உண்டா? விபிஎன் பயன்படுத்துகிறீர்களா? வேறு என்ன ஆப் பயன்படுத்துகிறீர்கள் என அத்தனை விஷயங்களையும் கண்காணிப்பு ஆப் பதிவு செய்யும். 
Image result for china ijop plan




எப்படி இந்த ஆப் இப்படி கண்காணிக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது?

ஐஜேஓபி என ஆப் ஸ்டோரில் தேடினால் Hebei Far East Communication System Engineering Company  என்ற  கம்பெனி வெளியிட்ட ஆப் ஒன்று கிடைக்கிறது. இதுவும் சீன அரசின் தளம் ஒன்றில் கிடைக்கும் ஆப்பும் ஒன்றுதான். மேற்சொன்ன ஆப்பின் சோர்ஸ்கோடை முன்னமே நாங்கள் இணையத்தில் வெளியிட்டோம். இதற்கு நிதியளித்து மேம்படுத்துவது அரசு நிறுவனம் என்பதையும் பின்னர் அறிந்தோம். 


அதில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தினீர்கள்?

அதில் சோர்ஸ்கோடு மாறியிருப்பதை எங்கள் இயக்குநருக்கு தெரியப்படுத்தியதும், சீன அரசு தடைசெய்த வார்த்தைகளின் பட்டியலை அவர் அனுப்பினார். இதனை க்யூர் 53 என்ற ஜெர்மனி பாதுகாப்பு நிறுவனத்திடம் கொடுத்து சில விஷயங்களை மாற்றினோம். 

ஏனெனில் எனக்கு கணினி நிரலைப் படிக்கத் தெரியாது. சீன மொழி தெரிந்தால் மட்டுமே அதிலுள்ள விஷயங்களை மாற்ற முடியும் சூழல் இருந்தது. அதில் ஹஜ் பயணிகளைக் குறித்தும் பல்வேறு தகவல்கள் பொதியப்பட்டிருந்தன.


செய்தியாளர் மாயா வாங். 


நன்றி: மனித உரிமைகள் கண்காணிப்பகம்