இடுகைகள்

தேசபக்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய துப்பறியும் விவகாரத்தை விளையாட்டுத்தனமாக கண்டுபிடிக்கும் ஆத்ரேயா! - கடிதங்கள்

படம்
  சாய் சீனிவாஸ் ஆத்ரேயா  அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? கடந்த மாதம் எங்களுக்கு பாதி நாட்களிலேயே வீட்டிலேயே வேலை பார்ப்பதற்கான அனுமதியை வழங்கிவிட்டார்கள். அதற்காக சம்பளத்தை முழுக்க கொடுக்க முடியுமா? பாதிதான் கொடுத்தார்கள். இந்த மாதம் முழுக்க விடுமுறை என்று சொல்லிவிட்டார்கள்.  விஸ்வரூபம் எண்ட மூரி வீரேந்திரநாத்தின் நாவல் ஒன்றை படித்தேன்.  ராமகிருஷ்ணன் என்ற முன்னாள் ராணுவ வீரன் ஒருவனை காதலை காரணமாக காட்டி அணு ஆயுத ரகசியங்களை திருடுகிறது தாலிபன். இதைவைத்து சாரங்கபாணி என்ற விஞ்ஞானியை பயன்படுத்தி ஆயுதங்களை தயாரித்துத் தர சொல்லுகிறது. அவனையும் அவன் மனைவியை தந்திரமாக அவனே கொன்றான் என்று தடயங்களை உருவாக்கி மிரட்டுகிறது. இவற்றை ராமகிருஷ்ணன் எப்படி முறியடித்து இந்தியாவை காப்பாற்றுகிறான். தாலிபன் தீவிரவாதிகளை கொல்கிறான் என்பதுதான் கதை. 336 பக்க கதையில்  நாம் இந்தியா, இரான், ஆப்கானிஸ்தான், டெல்லி, பாகிஸ்தான் என பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கிறோம். தமிழ் மொழிபெயர்ப்பு கௌரி கிருபானந்தன்.  விறுவிறுப்பான தேசபக்தி நாவல். தொடக்கத்தில் வரும் காதல் உரையாடல்கள் நன்றாக இருக்கி

பகைவனுக்கும் அருளும் இதயநோய் மருத்துவனின் ரத்தசரித்திரம்! - டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் - இறுதிப்பகுதி

படம்
        பகைவனுக்கும் அருளும் நெஞ்சமுடைய மருத்துவனின் ரத்தசரித்திரம் ! டாக்டர் ஸ்ட்ரேஞ்சர் இறுதிப்பகுதி கொரிய தொடர் எம்எக்ஸ் பிளேயர் முன்னமே கூறியது போல வெறும் காதல் கதை என்பதாக எடுக்காமல் , வடகொரியா , தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான வெறுப்பு , அரசியல் சதிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கொரிய தொடர் . துருக்கி தொடர்கள் போல வளவளவென நீளாமல் இருபது எபிசோடுகளில் கதையை நிறைவு செய்திருப்பதற்கு தொடரின் இயக்குநருக்கு நன்றி சொல்லவேண்டும் . பார்க் குவான் இதயநோய் மருத்துவர் . அவரின் அப்பா புகழ்பெற்ற இதயநோய் மருத்துவர் . அவரின் நண்பர் சோய் செய்த அறுவை சிகிச்சை தோற்றுப்போக , மனசாட்சிப்படி அது மருத்துவமனையின் , மருத்துவரின் தவறு என்று சாட்சி சொல்ல தயாராகிறார் . ஆனால் மருத்துவமனை சேர்மன் மருத்துவமனையைக் காப்பாற்ற , ஊழல் பிரதமரின் செல்வாக்கைப் பெற்று பார்க் குவானின் அப்பாவை வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கிறார் . உதவி என்று அனுப்பி வைக்கப்பட்டாலும் அவர் திரும்பி வரக்கூடாது என்பதுதான் தென்கொரியா , வடகொரியா அரசியல்வாதிகளுக்குள் ப

நேரத்தை வீணாக்கிய சாணக்கியத்தனம்! - சாணக்கியா படம் எப்படி?

படம்
சாணக்கியா இயக்கம் - திரு ஒளிப்பதிவு - வெற்றி பழனிசாமி இசை - விஷால் சந்திரசேகர் ஆஹா கோபிசந்த் மட்டும்தான். கூடவே துணைக்கு விஷால் சந்திரசேகர். வேறு யாருமில்லை. ஒளிப்பதிவாளர் சொன்ன வேலையைச் செய்திருக்கிறார். ஐயையோ மற்ற எல்லாமும்தான். மெஹ்ரின் பிர்சாதா, பாட்டுக்கான நாயகியாக மாறிவிட்டார். தன் குடும்பத்தைப் பற்றிப் பேசும் இடம் மட்டும்தான் தேறுகிறது. ஹீரோ எப்போதும் தன் நண்பர்கள் சகிதமாக இருக்கிறார். அவர்களுக்காக சண்டை போடுகிறார். ஓடுகிறார். அடிக்கிறார். ரா தலைவருக்கே கட்டளைகள் பிறப்பிக்கிறார். கதை: நண்பர்களைக் காப்பாற்றும் ரா ஏஜெண்டின் கதை. எப்படி இருக்க வேண்டும் என நினைப்பீர்களோ அப்படியெல்லாம் இல்லை. கதையும் பிரமாண்டம் என்றால் படத்தையும் அப்படித்தானே எடுக்கவேண்டும்? படத்தில் எந்த விஷயமும் அப்படி இல்லை. குத்துப்பாடலில் அறிமுகமாகும ஜரின் கானைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். மெரினை இம்மியளவும் ஏற்க முடியவில்லை. திணிப்பாகவே இருக்கிறது. பின்னே பாட்டு வெச்சாச்சு. அதுக்கு ஒரு பொண்ணு வேண்டாமா என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. அலி, சுனில் ஆகியோரை வீணடித்து இருக்கிறார