யூக்கு டூவு - சீனா பொழுதுபோக்கு வீடியோ துறையில் அரசன்
file:///home/anbarasu/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/3.jpg யூக்கு டூவு - சீனா பொழுதுபோக்கு வீடியோ துறையில் அரசன் யூக்கு டூவு என்ற வலைத்தளம்தான் சீனாவில் பொழுதுபோக்கு வீடியோக்களில் நாற்பது சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. இதற்குப்பிறகுதான் பைடு, டென்சென்ட்டெல்லாம் வருகிறது. 2014ஆம் ஆண்டே இதில் 500 மில்லியன் பயனர்கள் இருந்தனர். யூக்கு டூவைத் தொடங்கியவர் விக்டர் கூ. இவர் ஹாங்காங்கை பூர்விகமாக கொண்டவர். ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளில் படித்தவர். எம்பிஏவை ஸ்டான்போர்டில் படித்தவர், முதலீட்டு நிறுவனமான ரிச்சினா குழுமத்தில் பணியாற்றி வந்தார். 1999ஆம் ஆண்ட சீனாவில் இணையம் பெரிதாக வளரவில்லை. அப்போது சோகு என்ற நிறுவனத்தில் வேலை செய்தார். தனக்கென தனியாக சொந்த நிறுவனம் தொடங்கும் ஆசை இருந்தது. 2005ஆம் ஆண்டு யூக்கு நிறுவனத்தை தொடங்கினார். அடுத்த எட்டு ஆண்டுகளில் நிறுவனம் பெரிதாக வளர்ந்தது. 2010ஆம் ஆண்டு நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2012ஆம் ஆண்டு அதன் போட்டியாளரான டூவு.காம் நிறுவனத்தோடு இணைந்தது. சீனாவிலேயே இரண்டாவது பெரிய ஆன்லைன் வீடியோ சேவை நிற...