வைரலாகும் வார்த்தை விளையாட்டு !
ட்விட்டரில் இப்போது வேர்டில் என்ற வார்த்தை விளையாட்டு பிரபலமாகி பரவி வருகிறது. அந்தந்த பிராந்திய மொழிகளில் இதனை பல்வேறு மென்பொருள் திறமைசாலிகள் மேம்படுத்தி வருகிறார்கள். ஐடியா ஒன்றுதான். அதனை மொழிகளை மாற்றி சில மாறுதல்களை செய்கிறார்கள். குறிப்பிட்ட மொழிகளுக்கு மாற்றும்போது அதற்கான நிறைய சவால்கள் உண்டு.
வேர்டில் என்ற விளையாட்டி ஒரு நாளுக்கு ஒருமுறை தான் விளையாட முடியும். மேலும் இதில் சரியான வார்த்தைகளை நிரப்புவதற்கான வாய்ப்புகளும் குறைவுதான். புதிய சொற்களை கண்டுபிடிப்பதற்கான ஆர்வம் கொண்டவர்களுக்கு இது சுவாரசியமான சவால்.
லியூடில்
இது முழுக்க காதல் போதை நிரம்பியவர்களுக்கானது.நான்கு எழுத்து வார்த்தைகளை கண்டுபிடிக்கவேண்டும் வயது வந்தவர்களுக்கானது என்பதால் அதற்கேற்ப யோசியுங்கள். வேர்டில் விளையாட்டு போலத்தான். ஆனால் இதில் காம மோகமாக யோசித்தாலும் பிழையில்லை.
அப்சுர்டில்
இதுவும் வேர்டில் போலத்தான். இதில் நீங்கள் நிரப்பும் வார்த்தைகள் பற்றி அதிக தகவல்களை தருவதில்லை. எனவே நீங்கள்தான் வார்த்தைகளை சரியாக நிரப்ப வேண்டும். விளையாட்டின் நடுவிலும் கூட யோசித்து குறிப்பிட்ட வார்த்தையை கண்டுபிடித்து நிரப்பலாம்.
டார்டில்
இது கொஞ்சம் சவால் நிரம்பியது. ஒரே நேரத்தில் இரண்டு வார்த்தைகளை யோசித்துக் கண்டுபிடித்து எழுத வேண்டும். முடியும் என்றால் முயற்சி செய்யுங்கள்.
ஹலோ வேர்டில்
இதுவும் சற்று வேறுபட்டதுதான். குறிப்பிட்ட வார்த்தையில் எத்தனை எழுத்துகள் இருக்கவேண்டுமென நீங்கள் முடிவெடுக்கலாம். நான்கு எழுத்து கொண்ட வார்த்தை அல்லது பதினொரு எழுத்து கொண்ட வார்த்தை என எதை வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்த்து நேரத்தை கழிக்கலாம். சில நேரங்களில் இதில் சிக்கி இன்செப்ஷனின் லிம்போ போல மாட்டிக்கொள்ளாமல் இருந்தால் சரிதான்.
தேசி நகல் பிரதி
இந்தியில் உள்ள இந்த விளையாட்டு சப்டில் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் இலக்கணம் சார்ந்த வார்த்தைகள் உள்ளன. இதில் நிரப்பும் வார்த்தைகளுக்கான வாய்ப்பும் கூடுதலாக உள்ளது. முயலுங்கள்.
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக