155 ஆண்டுகளைக் கடக்கும் சூயஸ் கால்வாய்!
சூயஸ் கால்வாய் |
சூயஸ் கால்வாய்
உலகில் நீளமான ஆறு, எகிப்தில் உள்ள நைல் ஆறு. ஆனால் நீளமான கால்வாய் எதுவென தெரியுமா? தலைப்பில் சொல்லிவிட்டோமே, இதில் என்ன ரகசியம் இருக்கப் போகிறது. அதைப்பற்றிய கட்டுரைதான் இது.
ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு செல்வது பல மாதங்கள் நீண்ட பயணமாக இருந்தது. காரணம், அனைத்து கப்பல்களும் ஆப்பிரிக்காவை சுற்றி சென்று சுற்றி வந்தன. சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைத்தது. மத்திய தரைக்கடலிலிருந்து எளிதாக இந்திய பெருங்கடலை அடைய சூயஸ் கால்வாயே உதவியது. இதன்மூலம் கப்பலின் பயண தூரம் 7 ஆயிரம் கி.மீ. குறைந்ததோடு, பயண நாட்களும் 23 நாட்களாக சுருங்கியது.
1859 - 1869 என பத்தாண்டுகள் சூயஸ் கால்வாய் கட்டப்பட்டது. இதன் மொத்த நீளம் 193.30 கி.மீ. ஆகும். இதனை தொடக்கத்தில் ஆங்கர் லைன் என்ற ஸ்காட்டிஷ் கம்பெனி ஒன்று தனக்கு சொந்தமாக்கி வைத்திருந்தது. 1867 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று முதல் கப்பல் இதில் பயணித்தது. 2022ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் கட்டப்பட்டு 155 ஆண்டுகள் ஆகிறது.
இந்த கால்வாயில் 1,50,000 டன்கள் கொண்ட கப்பல்கள் பயணிக்கலாம். இதனைக் கடக்க ஆகும் தோராய நேரம் 15 மணி நேரம். ஆண்டுக்கு 15 ஆயிரம் கப்பல்கள் இந்த கால்வாயைக் கடந்து பயணிக்கின்றன.உலகளவில் கப்பல் போக்குவரத்தில் 14 சதவீதம் என வரையறுக்கலாம். ஐரோப்பாவிற்கும் தெற்காசியாவிற்குமான கப்பல் போக்குவரத்திற்கு சூயஸ் கால்வாய் முக்கியமானது. கூடவே கிழக்கு ஆப்பிரிக்காவிற்கும் செல்ல இக்கால்வாய் முக்கியமான வழித்தடமாக உள்ளது.
டெல் மீ வொய் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக