தனது காதலியை பறித்த ஊரை வேட்டையாடத் துடிகும் ஷிபு! - மின்னல் முரளி - பசில் ஜோசப் - மலையாளம்

 






மின்னல் முரளி

பசில் ஜோசப்

மலையாளம் 


ஜெய்சனை மின்னல் முரளியாக கண்டுபிடித்துப் பேசும் காட்சி


ஒரு கிராமம். அங்கு ஏற்படும் வரலாற்று முக்கியமான கிரக சூழ்நிலையில் மின்னல் தாக்குகிறது. அதன் பாதிப்பில் கிராமத்திலுள்ள இருவர் மாட்டுகின்றனர். இருவரும் அதனால் சக்தி பெறுகிறார்கள். அதனை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதே கதை. 

ஜெய்சன், ஊரில் டெய்லர் கடை வைத்திருக்கிறார். அவருக்கு ஒரே லட்சியம், பாஸ்போர்ட் வாங்கி அமெரிக்காவுக்கு போவதுதான். தனியாக அமெரிக்காவுக்கு போய் என்ன செய்வது என, அந்த கிராமத்து  இன்ஸ்பெக்டர் பெண்ணையும் காதலிக்கிறார். அதாவது, ஜெய்சனுக்கு அந்தப் பெண் மீது காதல் இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கான பொழுதுபோக்குக்கு ஜெய்சன் உதவுகிறான். ஆனால் அவள், வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை  திருமணம் செய்துகொள்ள இசைகிறாள். 


உஷாவை சந்தித்துப் பேசும் நெகிழ்ச்சியான காட்சி...


இதனால், ஜெய்சன் கோபம் கொள்ளுகிறான். அதேநேரம், அங்குள்ள டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்பவன், ஷிபு. இவனை கிராமத்தில் யாருக்கும் பிடிப்பதில்லை. இதற்கு காரணமான காட்சி, தாசனுடன் ஷிபு பேசும் காட்சி. 

ஷிபுக்கு ஒரே லட்சியம், பசியைச் சமாளிப்பதுதான். அப்படி சமாளித்து வாழ உஷா என்ற பெண்தான் உதவுகிறாள். ஷிபுக்கு தனது மனநிலை பிறழ்ந்த அம்மாவுக்கு பிறகு பிடித்தவள் உஷாதான். ஆனால் அவளும் லாரி டிரைவரோடு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறாள். இதனால் வாழ்க்கையை இருண்டுபோனதாகிறது. இவனுக்கு கிடைக்கும் மின்னல் ஆற்றல், அவனுக்கு பெரும் தன்னம்பிக்கை கொடுக்கிறது. 

இதை வைத்து ஷிபு தனது வாழ்க்கையை திரும்ப வாழ நினைக்கிறான். அதற்கேற்ப உஷா, தனது நோயுற்ற மகளோடு திரும்ப ஊருக்கு வருகிறாள். பலரும் அவளை செக்சிற்கு பயன்படுத்த நினைக்கிறாள். ஷிபுக்கு எப்படியாவது தனது காத்திருப்பு முடிந்தது என அவளை மணம் செய்துகொள்ள நினைக்கிறான். ஆனால் அதை செய்வதற்கான காலம் கனிவதற்குள், ஷிபு செய்த செயல்களே பிரச்னையாக முன்னே வருகின்றன. அவன் என்ன செய்தான் என்பதே இறுதிக்காட்சி. 

படத்தில் ஜெய்சனாக டோவினோ தாமஸ், ஷிபுவாக குரு சோமசுந்தரம் நடித்திருக்கிறார். குரு சோமசுந்தரத்திற்கு சொல்ல வாழ்க்கை இருக்கிறது. யாரிடம் பகிர்ந்துகொள்வது என்று சொல்ல முடியாத வலி இருக்கிறது. அவன் முக்கியமாக நினைத்த இருவர் பறிபோக அவனது கோபம் ஊர் மக்கள் மீது திரும்புகிறது. அவன் ஜெய்சன் பற்றி உண்மை தெரிந்த பிறகும் கூட அவனை கொல்லவோ காயப்படுத்தவோ நினைப்பதில்லை.  நீ கிளம்பு, ஊர்க்காரங்க என்னைத்தான் தேடறாங்க என்று சொல்லுகிறார். 

ஊரைவிட்டு கிளம்பலாம் என்று நினைக்கும்போதுதான் உஷா அவனைத்தேடி வந்திருப்பதை பார்க்கிறான். அங்கு இருவருக்கும் நடைபெறும் உரையாடல் நெகிழ்ச்சியானது. அதுதான் அவர்களின் ஆயுளுக்கும்  இறுதியானதும் கூட.

 படம், கிராமத்தில் உள்ள இயல்பான மனிதர்களை காட்சிபடுத்தியிருக்கிறது. இறுதிக்காட்சி தவிர நாயகனுக்கு சூப்பர் மேன் சூட் கூட கிடையாது. துண்டை முகத்தில் கட்டியபடி, வேட்டியோடுதான் ஓடுவார். சண்டை போடுவார். ஷிபுவுக்கு மட்டும் சாக்கில் செய்யப்பட்ட மாஸ்க். 

ஃபிளாஷ், பேட்மேன், ஜோக்கர் என நிறைய ஆங்கிலப் படங்களை மின்னல் முரளி நினைவுபடுத்தலாம். அதிகளவு சிஜி காட்சிகள் இல்லாமல் முடிந்தவரை இயல்பான சூப்பர் ஹீரோவை காட்சிபடுத்திய வகையில் மின்னல் முரளி சிறப்பாக உள்ளது. குறிப்பாக குரு சோமசுந்தரத்தின் நடிப்பை மறக்க முடியாது. படத்தின் கதையே ஷிபுவை சுற்றித்தான் அமைகிறது. 

கோமாளிமேடை டீம் 


கருத்துகள்