பார்வையற்றவர்களுக்கு லூயிஸ் ப்ரெய்லியின் பங்களிப்பு!

இன்றிலிருந்து சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வோம். அங்கு கூப்ரே என்ற சிறுநகரத்தில் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தார். அவன் பெயர் லூயிஸ் ப்ரெய்லி. இவரது அப்பா தோல் பொருட்களை தயாரித்து வந்தார். லூயிஸ் விளையாடிக் கொண்டிருக்கும்போது அப்பாவின் ஊசியை தவறுதலாக எடுத்து கண்ணில் குத்திக்கொண்டான். கண்ணில் தொற்று வேகமாக பரவ, விரைவில் பார்வையை இழந்தான். புத்திசாலி என்பதால் கண்பார்வை குறைவை சமாளித்து பாடங்களை சிறப்பாக படித்தான். பின்னாளில் பார்வையற்றோருக்காக ராயல் சொசைட்டியில் உதவித்தொகை பெற்று படித்தான். இங்கு இருந்த நூல்களை எளிதாக லூயிஸ் படிக்க முடிந்தது. இதுபோல அனைவரும் படிக்கும்படி நூல்களை உருவாக்கினால் என்ன என்று யோசித்தார். இதனால் அதற்கெனவேஏ ப்ரெய்லி முறையை உருவாக்கினார். நூல்களை எழுதினார். ப்ரெய்லி முறைக்காக இவர் பயன்படுத்திய கருவி, தனது கண்களை எதைக்கொண்டு தவறுதலாக குத்திக்கொண்டாரோ அதுதான் என்பதை நகைமுரணானது. ஆனால் காலம் அவரை அப்படித்தான் செய்ய வைத்தது. லூயிஸ் பாடுபட்டு இம்முறையை உருவாக்கினாலும் கூட இதனை பலரும் கண்டுகொள்ளவே இல்லை. லூயிஸ் இறந்தபிறகு அவரது முறை மெல்ல பயன்பாட்டுக்கு வந்தது. உலகம் முழுக்க பல்வேறு வகையான பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் இதனைப் பயன்படுத்த தொடங்கினார். ப்ரெய்லி பார்வையற்றவர்களுக்கு செய்த உதவி காரணமாக ஆண்டுதோறும் ஜனவரி 4ஆம் தேதி உலக ப்ரெய்லி தினம் கொண்டாடப்படுகிறது. டெல் மீ வொய் இதழ்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்