2022இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் புதிய நூல்கள்!
டிரேஸி ஃபிளிக் கேனாட் வின்
டாம் பெரட்டா
டிரேஸி ஃபிளிக் என்ற பாத்திரம் எப்படி பாலின வேறுபாடுகளைத் தாண்டி தனது துறையில் வெல்கிறார் என்பதே கதை. எலக்சன் என்ற நூலை எழுதியபிறகு 25 ஆண்டுகள் கழித்து டிரேஸி ஃபிளிக் என்ற பாத்திரத்துடன் வாசகர்களை எழுத்தாளர் டாம் பெரட்டா சந்திக்க வந்துள்ளார். உயர்நிலைப்பள்ளி துணை முதல்வராக உள்ள டிரேசி பல்வேறு சவால்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.
தி கிரேன் வைஃப்
சிஜே ஹாசர்
ஆய்வுக்காக செல்லும் பயணத்தில் காதல், அன்பு, திருமணம் ஆகியவற்றை புரிந்துகொள்கிறார் எழுத்தாளர் ஹாசர். இதன் விளைவாக நடக்கவிருந்த தனது திருமணத்தைக் கூட நிறுத்திவிடுகிறார். இப்படி செய்ய என்ன காரணம் என்பதை நூலில் ஹாசர் வாசகர்களுக்கு கூறுகிறார்.
ரெயின்போ ரெயின்போ
லிடியா கான்கிளின்
நூல் முழுக்க மாற்றுப்பாலினத்தவர்களின் கதைகள் நிரம்பி வழிகின்றன. ஓரினச்சேர்கைத் தம்பதிகள், சமூகத்தோடு இணைந்து வாழ விரும்பும் மாற்றுப்பாலினத்தவர்கள் சந்திக்கும் அனுபவங்கள், இதில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என பல்வேறு உணர்வுகளை சொல்லும் கதைகளாக உள்ளன. விரும்புபவர்கள் இதனை வாங்கி வாசிக்கலாம்.
எய்தர் ஆர்
எலிஃப் பாத்துமன்
கல்லூரியில் நடக்கும் காதல் அனுபவங்களை பற்றிய நாவல் இது.
டைம் ஈஸ் மதர்
ஓசன் வியோங்
வியோங், மனதை நெகிழ்ச்சி செய்யும் இயல்புடைய கவிதைகளை நூலாக எழுதி தொகுத்திருக்கிறார். தனது அம்மா இறந்தபிறகு கவிதைகளை எழுதியுள்ளதால் இழப்பின் வலியை கவிதை வரிகள் பிரதிபலிக்கின்றன. சோகத்தை தாங்க முடியுமென்றால் நூலை வாங்கி படியுங்கள்.
யங் முங்கோ
டக்ளஸ் ஸ்டூவர்ட்
முங்கோ, ஜேம்ஸ் என இருவருக்கும் காதல் உருவாகிறது. இதனை முங்கோ தனது இனக்குழுவில் மறைத்து வைக்கிறார். இதனால் என்ன நேருகிறது என்பதுதான் கதை.
டைம் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக