இடுகைகள்

விபிஎன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2020 ஆண்டின் சிறந்த கணினி மென், வன்பொருட்கள்!

படம்
      2020 ஆண்டின் சிறந்த கணினி மென் , வன்பொருட்கள் சிறந்த விபிஎன் புரோடான் விபிஎன் தகவல்களை சேமித்து வைக்காமல் சேவையை வழங்குகிறது . இதன் இமெயில் சேவை புகழ்பெற்றது . இதனை காசுகொடுத்து அல்லது இலவசமாக நீங்கள் பயன்படுத்தினாலும் சிறப்பாக செயல்படுகிறது . தனிப்பட்ட அந்தரங்கம் சார்ந்த பாதுகாப்பு என்பதில் கவனம் செலுத்துகிற ஸ்விட்சர்லாந்து கம்பெனியின் தயாரிப்பு . காசுதான் முக்கியம் என்று சிலர் சொன்னால் முல்வட் விபிஎன் என்ற மென்பொருளைப் பயன்படுத்தலாம் . பாஸ்வேர்டு கூட இல்லாமல் இதனை இயக்கலாம் . மாதம் ஐந்து டாலர்களை செலுத்தினால் சிறப்பான சேவையை அளிக்கிறார்கள் . இதிலேயே எலைட்டாக விபிஎன் வேண்டும் என்பவர்களுக்கு நார்டுவிபிஎன் தெரிந்திருக்கும் . அதனை மாதம் 11 டாலர்கள் செலுத்தி பயன்படுத்தலாம் . சிறந்த வெப்சைட் டிசைனர் விக்ஸ் வெப்சைட்டுகளை உருவாக்கும் துறையில் முன்னணியில் இருப்பது இப்போதைக்கு விக்ஸ்தான் . எளிமையான் வடிவமைப்பு , அனிமேஷன் , மொபைல் ஆப்ஸ்கள் என காசு கொடுத்தால் ஏகப்பட்ட ஆப்ஷன்களை கொடுக்கிறார்கள் . வெப்சைட்டை இணையத்தில் சேமித்தும் வைத்துக்கொள்ள இணையத்தில்

விபிஎன் பயன்படுத்தினால் குற்றமா?

படம்
விபிஎன் பயன்படுத்தினால் குற்றமா? அண்மையில் காஷ்மீரில் மக்கள் இணையம் வழியாக சமூக வலைத்தளங்களை அணுகுவது தேசதுரோகச் செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபிஎன் மென்பொருட்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விபிஎன் என்பதை தவறான மென்பொருள் கிடையாது. இதனை இன்ஸ்டால் செய்து அரசு தடைசெய்த அஜூக்கு குமுக்கு வலைத்தளங்களை பார்வையிட முடியும்.  ரகசியமான தகவல்களை, கோப்புகளை அனுப்ப இந்த மென்பொருட்களை உலகம் முழுக்க பயன்படுத்துகின்றனர். இந்தியா இப்பட்டியலில் 43 சதவீதம் எனும் எண்ணிக்கையை எட்டிப்பிடித்து இரண்டாமிடத்தில் இருக்கிறது. குற்றம் என்றவுடன் பயந்துவிடாதீர்கள். இந்தியாவில் விபிஎன் பயன்படுத்துவதை தடுக்கும் எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. ஏனெனில் இந்த வசதியை பல்வேறு பன்னாட்டு, இந்திய நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன. இதைப்பயன்படுத்தி தமிழ்ராக்கர்ஸை கூட அணுகி புதிய படங்களைப் பார்க்க முடியும்.  இங்கிலாந்தில் அல்லது பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும்போது விபிஎன்னைப் பயன்படுத்தி அமெரிக்காவில் மட்டும் வெளியாகும் இணையத் தொடர்களைப் பார்க்கலாம். சீனாவில் கூட பல்வேறு பாதுக