இடுகைகள்

ஆணையம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சதுப்புநிலத்தைக் காக்கும் இந்திய அரசின் திட்டம்!

படம்
  சூழலைக் காக்கும் சதுப்புநில நண்பன்  திட்டம்! இந்தியா முழுவதும் உள்ள சதுப்பு நிலங்கள், சூழலின் பல்லுயிர்த்தன்மைக்கு உதவுகின்றன. இவற்றை பாதுகாப்பதும், ஆக்கிரமிப்பிலிருந்து தடுப்பதும் சவால் நிறைந்ததாக உள்ளது. இதற்கான தீர்வை வெட்லேண்ட் மித்ரா (Wetland Mitra) எனும் திட்டத்தை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.  தற்போது, சென்னையில் 'சதுப்புநில நண்பன்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதன்படி, சூழலியலில் ஆர்வம் உள்ளவர்கள், தன்னார்வலராக இதில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட இடைவேளையில் ஏரி, சதுப்பு நிலங்களைக் கண்காணிக்க வேண்டும். இதுதான் அவர்களது பணி. இதன்மூலம் ஏரி, சதுப்புநிலங்களின் பாதுகாப்பு உறுதிப்படுகிறது. அங்கு வரும் பறவைகள், பட்டாம்பூச்சிகள் பற்றிய துல்லியமான தகவல்களும் சதுப்புநில ஆணையத்திற்கு கிடைத்துவிடுகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியர் உள்ளார். தேவையான அரசு அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க தன்னார்வலர்களின் தகவல்கள் உதவுகின்றன.  “தற்போது சென்னையில் 106 சதுப்பு நில நண்பர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் கிடைக்கும் தகவல்களைப் பெற்று சதுப்புநிலங்களைப் ப

எட்டு முறையீட்டு ஆணையங்களை மூடுகிறது மத்திய அரசு! - வழக்குகள் என்னவாகும்?

படம்
  மத்திய அரசு விரைவில் எட்டு புகார் முறையீட்டு ஆணையங்களை மூடவிருக்கிறது. இதற்கு இந்த ஆணையத்தில் போதுமான பணியாளர்கள் இல்லை என்று காரணம் கூறியிருக்கிறது. இதில் நடந்து வரும் வழக்குகள் என்னவாகப்போகிறது என யாருக்கும் தெரியவில்லை. திரைப்பட சான்றிதழ் முறையீட்டு ஆணையம், அறிவுசார் காப்புரிமை முறையீட்டு ஆணையம், சேவை வரி தொடர்பான முறையீட்டு ஆணையம், விமானத்துறை முறையீட்டு ஆணையம், தேசிய நெடுஞ்சாலை முறையீட்டு ஆணையம் ஆகியவை இதில் உள்ளடங்கும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபது என்வி ரமணா இதுபற்றி அரசிடம் கேள்வி கேட்டுள்ளார்.  2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள முறையீட்டு ஆணைய சீர்திருத்த மசோதா எட்டு ஆணையங்களை கலைக்க உள்ளது. இதில் உள்ள வழக்குகள் எல்லாம் அப்படியே குடிமை நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட உள்ளது. இந்த மசோதாவை ஆகஸ்ட் 3 அன்று நிதியமைச்சர் நிர்மலா மக்களவையில் தாக்கல் செய்தார். ஆணையத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மூன்று மாத சம்பளம் கொடுக்கப்பட்டு அவர்களை பணியிலிருந்து நீக்குவது அரசின் திட்டமாக உள்ளது.  இந்தியாவில் தற்போது பதினாறு ஆணையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மத்திய அரசு கடந்