இடுகைகள்

எல்எஸ்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகை புதிய கோணத்தில் பார்க்க வலியுறுத்திய உளவியலாளர் - டிமோத்தி லேரி

படம்
  அமெரிக்காவைச் சேர்ந்த உளவியலாளர் டிமோத்தி லேரி. இவர் 1960ஆம் ஆண்டு டர்ன் ஆன், ட்யூன் இன், ட்ராப் அவுட் எனும் கொள்கை ஒன்றை உருவாக்கி பிரபலப்படுத்தினார். ஆனால் இந்த கொள்கை வாழ்க்கை பற்றிய புதிய அணுகுமுறையைக் கொண்டிருந்தது. இதை அன்றைக்கு தவறாக புரிந்துகொண்டவர்களே அதிகம்.  மேலே சொன்ன வரிசைப்படி ஒருவர் தனது வாழ்வை பின்பற்றவேண்டும் என டிமோத்தி கூறவில்லை. அது ஒரு வரிசை முறை. ஒட்டுமொத்த சமூகமும் அரசியலால் களங்கப்படுத்தப்பட்டுவிட்டது. அதை ஒருவர் தூய்மை செய்யவேண்டும். மையச் சமூகத்தில் இருந்து எந்த கருத்துகளையும் எடுத்துக்கொள்ளாமல் ஒருவர் சுயசிந்தனையோடு வாழப் பழகவேண்டும். இந்த அடிப்படையில்தான் அவர் ட்ராப் அவுட் என்ற வார்த்தையைக் கூறினார். ஆனால் மக்கள் தாங்கள் செய்து வந்த வேலையை விட்டு விலகவேண்டும் என்று புரிந்துகொண்டனர். அப்படியான அர்த்தத்தில் அவர் கூறவில்லை.  டர்ன் ஆன் என்ற வார்த்தையை ஒருவர் தன்னுணர்வு நிலையை உணர்ந்து யதார்த்த நிலையை புரிந்துகொள்ளவேண்டும் என்ற அர்த்தத்தில் கூறினார். ஆனால் அத்தகையை நிலைக்கு மனித மனத்தை கொண்டு வர போதைப்பொருட்களை பயன்படுத்த கூறினார். எல்எஸ்டி என்ற மாயக்காட்சிகளை

பசுக்களைத் தாக்கி பால் சுரப்பைக் குறைத்து கொல்லும் எல்எஸ்டி நோய் - பாதுகாப்பது எப்படி?

படம்
            பசுக்களைக் காப்பாற்றுங்கள் - தலித்துகளுக்கு எதிரான கட்டுரை அல்ல கால்நடைகளை தாக்கும் வைரஸ் நோய்  வேகமாக வட இந்தியாவில் பரவி வருகிறது. அதன் பெயர் எல்எஸ்டி. போதை வஸ்தாது பெயர் என்பதால் அதே அளவுக்கு கிளுகிளுப்பாக இருக்கும் என நினைக்கவேண்டாம். இது பசுக்களை கொன்று வருகிற வைரஸ் ஏற்படுத்தும் நோயின் பெயர். லம்பி ஸ்கின் டிசீஸ் என்பதுதான் எல்எஸ்டிக்கான விளக்கம். கார்பிபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்த வைரஸ் இந்நோயை ஏற்படுத்துகிறது. உணவு, நீர் ஆகியவற்றில் ஏற்படும் கலப்படம் மற்றும் பூச்சிகள், கொசு, உண்ணி ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய் கால்நடைகளுக்கு குறிப்பாக பசுக்களுக்கு பரவுகிறது. நோய் பரவி முதிர்ச்சி அடையும் காலம் 4 முதல் 14 நாட்கள். பசுக்களின் நிணநீர் கணுக்கள் வழியாக கிருமிகள் பரவி பசுக்களைப் பாதிக்கின்றன. அறிகுறிகள் என்னென்ன? உடல் வெப்பம் அதிகரிப்பு, சரியாக சாப்பிட முடியாது, பால் சுரப்பு குறைந்துவிடும், மூக்கில் நீர் வடிவது, எடை குறைவு ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தர்காண்ட், மகாராஷ்டிரா, உ.பி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தி அத

மைக்ரோடோஸ் அளவில் எல்எஸ்டி பயன்படுத்தலாமா?

படம்
  ஹெராயின், கஞ்சா, கோகைன் ஆகியவற்றை மைக்ரோடோஸ் அளவில் கொஞ்சமாக எடுத்துக்கொண்டால் மனநிலை மகிழ்ச்சியாகும், உற்சாகம், ஊக்கம் கிடைக்கும் என பலரும் பேசிவருகிறார்கள். உலகில் பல்வேறு நாடுகளில் போதைப்பொருட்களை சட்டரீதியாக பயன்படுத்தவும் தடை நீங்கி வருகிறது. உண்மையில் குறிப்பிட்டளவு போதைப்பொருட்களை பயன்படுத்தினால்  நன்மை கிடைக்குமா என்று  பார்ப்போம்.  1960களில் சிலோசைபின் என்ற போதைப்பொருள், எல்எஸ்டி ஆகியவை ஹிப்பிகளிடையே பிரபலமாக இருந்தன. உளவியலாளர் டிமோத்தி டியரி என்ற உளவியல் ஆய்வாளர், ஹார்வர்டில் பணிபுரிந்து வந்தார். இவரது தனது மாணவர்களுக்கு 2 ஆண்டுகளாக சிலோசைபின் மருந்தைக்  கொடுத்து சோதித்து வந்தார்.  எல்எஸ்டியை மைக்ரோடோஸாக பயன்படுத்தினால் அதன் 6 முதல் 25 மைக்ரோகிராமாக இருக்கவேண்டும். இதனை முழுமையான அளவில் பயன்படுத்தினால் 100 முதல் 150 மைக்ரோகிராம் அளவில் பயன்படுத்தலாம்.  ரெட்டிட் சேனலில் மைக்ரோடோஸ் பயன்படுத்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,61,000. அமெரிக்க அரசின் எப்டிஏ அங்கீகாரம் இல்லாமல் 9 கிராம் எல்எஸ்டி வைத்திருந்தால்  அவருக்கு ஆயிரம் டாலர் அபராதம் கட்டவேண்டும். இல்லையென்றால் ஓராண்டு சிற

போதை மருந்துகளைச் சாப்பிட்டால் என்னாகும்?

படம்
போதை மருந்துகளைச் சாப்பிட்டால் கண்களுக்கு விநோத காட்சிகள் தெரியும் என்கிறார்களே. அது உண்மையா?  எனக்கு தெரிந்த நாளிதழ் பொறுப்பாசிரியர் சினிமா வட்டாரத் தொடர்பு கொண்டவர். நான் எல்எஸ்டி கூட பயன்படுத்திவிட்டேன் என மாஸ் என்ட்ரி கொடுத்து டயலாக் பேசினார். போதைப்பொருட்களை சாதாரமாக சாப்பிடும்போது மூளையிலுள்ள செரடோனின் போன்ற சுரப்பிகளின் செயல்பாடு அதிகரிக்கும். இதன்விளைவாக மகிழ்ச்சியான காற்றில் பறப்பது போன்ற எண்ணம் உருவாகும்.  மூளையிலுள்ள தகவல்தொடர்புகளுக்கு நியூரான்கள்தான் பொறுப்பு. அவற்றின் செயல்பாடுகளை போதைப்பொருட்கள் தளர்த்தி விலக்கும். இதனால்தான் இந்த ஆட்களுக்கு அந்நேரத்தில் என்ன நடந்தது என்றே தெரியாது. மூன்றாவது கண் திறந்தது போல மிதமிஞ்சிய உற்சாகத்துடன் திகழ்வார்கள். இதனாலேயே மனக்கோளாறுகளைக் கொண்டவர்களின் மூளைக்கொதிப்பை அடக்க தூக்க மருந்துகளை மனநல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. கற்றல் குறைபாடு கொண்டவர்களும் இதேபோல்தான். அவர்களுக்கு கண்களை மூடித் தூங்கத் தெரியாது. உடலின் மொத்த ஆற்றலும் காலியானால் மட்டுமே பேட்டரி தீர்ந்த ரோபோ கணக்காக ஓய்வாவார்கள். நன்றி - பிபிசி

ஹிப்பி திருவிழா - 1969 வுட்ஸ்டாக் கொண்டாட்டம்!

படம்
அரை நூற்றாண்டுக்கு முன்பு இசைக்கலாசாரம் ஒன்று தொடங்கியது. இதில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விநோதர்கள் கலந்துகொண்டனர். ஆம் இவர்கள்தான் இசை, ஆன்மிகம் என நாடோடியாக அலைந்து திரிந்த கேசுவல் ஹிப்பிகள். எல்எஸ்டி போர்டு வைத்து அதனை விற்று காசு சேர்த்து ஜமாய்த்த கில்லாடிகள். அமைதியும் இசையும் என்ற பெயரில் இந்த இசை விழாக்கள் அக்காலத்தில் மரபு ஆட்களையும் அமைப்புகளையும் அதிரடித்தன. அதைப் பலரும் பின்பற்றி இசையமைத்து பாடல்களும் வெளியிட்டனர். வுட்ஸ்டாக் இசைவிழாவை மைக்கேல் லாங், ஆர்டி கான்ஃபெல்ட், ஜோயல் ரோசன்மென், ஜான் ராபர்ட்ஸ் ஆகியோர்தான் தொடங்கினர். இவர்கள் பல்வேறு இசை நட்சத்திரங்களை அணுகி, நிகழ்ச்சி நடத்தக் கேட்டனர். ஆனால் அவர்கள் ஏதோ காரணத்தால் மறுத்துவிட்டனர். ஆனாலும் இளைஞர்களை சந்திக்க முடியும் காரணத்தினால் புகழ்பெற்ற சிலர் இசைந்தனர். இதன் விளைவாக, அவர்கள் புகழின் உச்சத்தைத் தொட்டனர். வால்கில் எனுமிடத்தில் விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அவர்களும் ஒரு கட்டத்தில் இசைவிழாவுக்கு இடம் தர மறுத்துவிட்டனர். பின் பெதல் பகுதியில் நிலமுள்ள பால்பண்ணை விவசாயி இடம் தர முன்வந்தார். அதற்கும்