இடுகைகள்

கும்பமேளா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2021 முக்கியமான டேட்டாக்கள்!

படம்
டோக்கியோ ஒலிம்பிக்ஸிலும் பாராலிம்பிக்ஸிலும் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 7 முதல் 19 ஆகும். இதுதான் இந்தியாவில் ஆல்டைம் அதிக எண்ணிக்கை கூட. இந்த ஆண்டில் இந்திய நிறுவனங்கள் பங்கு வெளியீடு மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாயை திரட்டியுள்ளன. பத்தாண்டுகளில் இதுவே அதிக அளவு ஆகும். இலங்கை பாடகியான யோகானி தனது மணிகே மகே பாடலுக்கு 3 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளார். இலங்கை பாடகருக்கு இதுவே அதிகபட்ச பார்வையாகும். கடந்த செப் - ஜூலையில் 50 சதவீத எஸ்யூவி வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதற்குப்பிறகுதான் செடான், ஹாட்ச்பேக் கார்கள் எல்லாம். தலைவன் எஸ்யூவிதான். பயணிகள் அதிகம் பயணிப்பதற்கான வாகனத்தின் மீது மக்களுக்கு ஆர்வம் கூடியுள்ளது. ஸ்டேன்சாமி. கிறிஸ்தவர் என்பதால் தீவிரவாத குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறையில் குற்றுயிராக ஆக்கப்பட்டவர். 84 வயதில் அவரை ஒன்றிய அரசு சிறைவைத்து சித்திரவதை செய்து கொன்றது. இந்த வயதில் தீவிரவாத குற்றச்சாட்டுக்கு ஆளான வேதனையான பெருமை ஸ்டேன்சாமிக்கே சொந்தம். இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு என்ற பெருமையை இடதுசாரி அரசு கேரளத்தில் பெற்றுள்ளது. அங்

இரண்டாவது அலையை கணிக்க தவறியது மத்திய அரசின் குற்றம்தான்! - பூபேந்திரசிங் பாதல் -சத்தீஸ்கர் முதல்வர்

படம்
              பூபேந்திரசிங் பாதல் சத்தீஸ்கர் முதல்வர் - காங்கிரஸ் உங்கள் மாநிலத்தில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு உள்ளதா ? நாங்கள் இரண்டு நாட்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளோம் . 45 முதல் 60 வயது கொண்ட 63 சதவீத மக்களுக்கு நாங்கள் தடுப்பூசியை செலுத்தியுள்ளோம் . அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க வயது வரம்பை தளர்த்த மத்திய அரசிடம் கூறியுள்ளோம் . கொரோனா நோய்த்தொற்று வயது வரம்பின்றி அனைத்து மக்களையும் பாதித்துள்ளது . தற்போது உள்ள இரண்டு தடுப்பூசிகளை மட்டுமே வைத்து மக்களை பாதுகாக்க முடியாது . முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங் கூறியபடி வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதோடு , உ்ள்நாட்டு தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யவேண்டும் . அப்போதுதான் தடுப்பூசியை மக்கள் அனைவருக்கும் வழங்க முடியும் . மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தைக்கூட நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் . அவருடைய கடிதத்திற்கு ஹர்ஷ்வர்த்தன் காங்கிரஸ் தலைவர்கள் , முதல்வர்களை தாக்கி பதில் கூறியிருக்கிறாரே ? இங்கே பாருங்கள் . ஹர்ஷ்வர்த்தன் மரியாதைக்குரிய பதவியில் இருக்கிறார் . அதற்க