இடுகைகள்

விபச்சாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களை விபச்சாரத்திற்கு விற்கும் தந்திர இளைஞர் கூட்டத்தை தேடும் போலீஸ்காரர்! 100 - சாம் ஆண்டன்

படம்
  அதர்வா, ஹன்சிகா - 100 படத்தில் -இயக்கம் சாம் ஆண்டன் இயக்குநர் சாம் ஆண்டனின் 100 படத்தில் அதர்வா 100 இயக்கம் சாம் ஆண்டன் அதர்வா, ஹன்சிகா, ராதாரவி, ஆடுகளம் நரேன், யோகிபாபு களத்தில் வேலை செய்ய நினைக்கும் நாயகனை கட்டுப்பாட்டு அறையில் உட்கார வைத்தால் என்னாகும் என்பதுதான் கதை.   காவல்துறையில் வேலை பார்க்க நினைக்கும் நாயகனுக்கு கிடைக்கும் வேலை என்னமோ கட்டுப்பாட்டு அறையில் அழைப்புகளை எடுத்து பேசுவதுதான். அந்த அழைப்புகளை வைத்து அவர் களத்தில் ரகசியமாக இறங்கி பெண்களை விபச்சாரத்தில் இறக்கும் இளைஞர் கூட்டத்தை பிடித்து, குற்றவாளியை கொல்கிறார். படம் தொடக்கம் முதலே ஆட்கள் காணாமல் போய் பிறகு கொலை செய்யப்பட்டு அந்த வழக்கு முடிந்ததாக காவல்நிலையத்தில் முடித்துவைக்கப்படும் காட்சியோடு தொடங்குகிறது. இயக்குநர் சாம் ஆண்டன், படத்தில் பெண்களை கடத்தி அதை காதல் போல நாடகமாடி அவர்களை விபச்சாரத்தில் தள்ளுவதை விரிவாக விளக்கியிருக்கிறார். இந்த கதையில் கட்டுப்பாட்டு அறை, அதன் முக்கியத்துவத்தைப் பேசியிருக்கிறார்கள். அதுதானே படத்தின் தலைப்பு. படத்தில் வரும் காதலை வெட்டி எடுத்துவிட்டால் எந்த சேதாரமும் இல்லை.

இந்தி சினிமாக்களில் விலைமாதுக்களின் நிலை!

படம்
  பாலியல் தொழிலாளிகளையும் மதிக்கவேண்டும். அவர்கள் செய்வதும் தொழில்தான். விலைமாதுக்களையும் கௌரவமாக நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கௌரவம் நிஜமாக கிடைக்குமோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் திரைப்படங்களில் விலைமாதுக்களை காட்டிய சினிமாக்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். இது இந்தி சினிமாக்கள் மட்டுமே.  பேகம் ஜான்  பீரியட் படம்தான். முகேஷ் பட் தயாரிக்க 2017இல் வெளியான படம். சுதந்திரத்திற்கு பிறகான விலைமாதுக்களின் நிலையைப் பேசிய படம் இது. வித்யாபாலன் தான் விலைமாதுக்களின் தலைவி. வங்காளப் படமான ராஜ்கஹினி என்ற படத்தின் இந்தி ரீமேக் இது.  மண்டி  1983ஆம் ஆண்டு ஷியாம் பெனகல் உருவாக்கிய படம்தான் மண்டி. படத்தில் ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா படேல், நஸ்ரூதின் ஷா ஆகியோர் நடித்திருந்தனர். இதன் மூலம் உருது சிறுகதை. ஆனந்தி என்ற சிறுகதையை எழுதியவர் குலாம் அப்பாஸ். விபச்சாரத்தை நடத்துபவராக தலைவியா ஷபனா ஆஸ்மி நடித்திருந்தார். இவரது கட்டுப்பாட்டில் உள்ளவருக்கு உருவாகும்  இன்னொரு உறவால் ஏற்படும் பாதிப்புகள்தான் கதை. காமம், உடல்ரீதியான மகிழ்ச்சி ஆகியவற்றைப் பற்றிய பேசிய வகையில் முக்கியமான படம். 1984ஆம் ஆண்டு மண்டி ப

உணர்ச்சியை விட செயல்தான் முக்கியம்! டாக்டர் 2021

படம்
  டாக்டர் நெல்சன் அனிருத் குழந்தைகளை கடத்தி அவர்கள் வயதுக்கு வந்ததும் அவர்களை விபச்சாரத்திற்கு விற்கும் கும்பலைப்பற்றிய கதை. வருண் பெண் பார்க்கப் போகும் வீட்டில் ஒரு சிறுமி காணாமல் போகிறாள். அவளை வருண் கண்டுபிடித்து தர உதவுகிறான். இதை எப்படி செய்தார்கள் என்பதுதான் கதை.  ஒருவருக்கு ஏற்படும் பிரச்னை என்பதை மூன்றாவது நபர் பார்க்கும்போது அதில் அவர் பெரிதாக தன்னை இணைத்துக்கொள்ள மாட்டார். அந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை அதில் தனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று பார்ப்பதே இன்று உலக வழக்கமாகியிருக்கிறது. இந்த இயல்பை புரிந்துகொண்டால் மட்டுமே படத்தை ரசிக்கமுடியும். இல்லையென்றால் பிளாக் அண்ட் ஒயிட் டிவியில் படம் பார்ப்பது போலவே இருக்கும்.  சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளும் பிரச்னையை படம் பேசுகிறது. நிறைய ஆங்கிலப் படங்கள் கூட அதனை வெகு தீவிரமாக பேசியுள்ளன. அப்படியில்லாமல் அதனை அவல நகைச்சுவையாக மாற்றியதுதான் படத்தின் வெற்றி. படத்தில் நிறைய இடங்களில் வசனங்களுக்கு பதில் உடல்மொழியே நகைச்சுவைக்கு போதுமானதாக இருக்கிறது.  எஸ்கேவின் அனைத்து பிளஸ்களும் படத்தில் இருந்து எடுத்துவிட்டால் மீதி என்ன இருக்கும்? அதுத

இருபது ஆண்டுகளில் பதினெட்டு பஞ்சம்! - விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண்கள்!

படம்
  அனந்தப்பூர், ஆந்திரப் பிரதேசம் தெலுங்கில் அனந்தப்பூர் என்றால் நிறைய விஷயங்களால் ஆசிர்வதிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் நிஜமோ படுமோசமாக இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் வறட்சி, பஞ்சத்தால் பதினெட்டு முறை பாதிக்கப்பட்டுள்ளது இந்த ஊர். காரணம் மழைப்பொழிவு குறைந்ததுதான். இதனால் அங்குள்ள மக்கள் நிறையப் பேர் இடம்பெயர்ந்து வருகிறார்கள்.  தென்னிந்தியாவின் வறண்ட மழைமறைவுப் பகுதியாக ராயலசீமாவின் அருகில் உள்ளது அனந்தப்பூர். இதன் வரலாற்றைத் தேடிப் பார்த்தால் 1882ஆம் ஆண்டு நெடும் பஞ்சங்களும் நீர் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது நடைபெற்றிருக்கும் பஞ்சங்கள் அதை விட மோசமாக இருக்கிறது.  இப்படி பஞ்சங்கள் வந்துகொண்டிருந்தால் எப்படி இங்கு விவசாயம் நடைபெற முடியும்.? கேள்வி நியாயமானதுதான். அதனால்தான் 30 லட்சமாக இருந்த விவசாய பரப்பு இப்போது 15 லட்சமாக குறைந்துவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு ஏற்படும் பஞ்சத்தின் நடைமுறை மாறுகிறது.  1989 முதல் 2018 வரையில் பெய்த மழை அளவை கணக்கிட்ட வானிலை ஆராய்ச்சி நிலையம், இங்கு பஞ்சம் அல்லது வெள்ளம் வரும் என கூறியுள்ளது. அனந்தப்பூரில் நடைபெ

என்ஜிஓக்கள் குழந்தைகளை எப்படி தத்தெடுத்து விற்கிறார்கள்?

படம்
          குழந்தைகள் விற்பனை - என்ஜிஓக்களின் தில்லுமுல்லு கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி , தமிழ்நாட்டில் 295 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அரசு அறிவித்தது . அதில் கூடுதலாக இரு குழந்தைகள் பின்னர் இணைந்தனர் . இவர்கள் இருவரும் , இதயம் டிரஸ்ட் எனும் என்ஜிஓ மூலம் கோவிட் காரணமாக இறந்துபோனதாக கணக்கு காட்டப்பட்டு தத்து எடுக்க்ப்பட்டு காசுக்கு விற்கப்பட்டனர் . இதயம் டிரஸ்டின் நிறுவனரான ஜி . ஆர் . சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் இதற்கு முக்கியமான காரணம் . இந்த அமைப்பு , மாநில அரசின் ஏராளமான விருதுகளை வென்றுள்ளது . காவல்துறையோடு இணக்கமாக செயல்பட்டு வருகிறது . தங்களது செல்வாக்கை திறமையாக பயன்படுத்திக்கொண்டு முகமூடியுடன் ஆதரவில்லாத குழந்தைகளை விற்பனை செய்துவந்திருக்கிறது . மதுரை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான கட்டிடத்தில் இதயம் டிரஸ்ட் , பல்வேறு பணிகளை செய்துவந்துள்ளது . இந்த விவகாரம் வெளிவந்தவுடன் பிற குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகங்களும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளன . மதுரையில் மாநில அரசுக்கு சொந்தமான காப்பகம் ஒன்றும் , மத்திய அரசின் உதவியுடன் நடைபெறும் காப்பகம் ஒன்றும் உள்ளது . இவையன

குழந்தைகளை கடத்தி விபச்சாரத்திற்கும் அடிமைகளாக விற்பதும் அதிகரித்து வருகிறது! - கைலாஷ் சத்யார்த்தி

படம்
      கைலாஷ் சத்யார்த்தி         நேர்காணல் கைலாஷ் சத்யார்த்தி பச்பன் பச்சாவோ அந்தோலன் நிறுவன தலைவர் பெருந்தொற்று பாதிப்பு குழந்தைகளை எப்படி பாதித்துள்ளது ? பெருந்தொற்று இந்தியாவின் வளர்ச்சிப்பணிகளை பல்லாண்டுகள் பின்னோக்கி நகர்த்தியுள்ளது . 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் திரும்ப பள்ளிக்கு செல்வது கடினம் . நூறுகோடிக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு செல்லமுடியாமல் வீட்டில் உள்ளனர் . பெருந்தொற்று காரணாக குறைந்திருந்த குழந்தை தொழிலாளர் பிரச்னை , குழந்தைகள் கடத்தல் , அடிமையாக வேலை வாங்குவது ஆகியவை மெல்ல அதிகரித்து வருகின்றன . நீங்கள் முன்னமே இப்படியொரு நிலை ஏற்படும் என்று கணித்தீர்களா ? அதைப்பற்றி கூறுங்கள் . எங்கள் நிறுவனமே இப்படி சிக்கலில் சிக்கித் தவித்த 1600 குழந்தைகளை மீட்டோம் . இதில் தொடர்புடைய 132 பேர்களை கைது செய்ய வலியுறுத்தினோம் . பெருந்தொற்று காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் விரைவாக நடைபெறுகின்றன . இக்காலகட்டத்தினால் தடுப்பூசித் திட்டங்கள் , ஊட்டசத்து திட்டங்கள் செயல்படுத்தமுடியாமல் போய்விட்டனவே ? நான் முன்னமே கூறியதுபோல இ