இருபது ஆண்டுகளில் பதினெட்டு பஞ்சம்! - விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண்கள்!

 






அனந்தப்பூர், ஆந்திரப் பிரதேசம்


தெலுங்கில் அனந்தப்பூர் என்றால் நிறைய விஷயங்களால் ஆசிர்வதிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் நிஜமோ படுமோசமாக இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் வறட்சி, பஞ்சத்தால் பதினெட்டு முறை பாதிக்கப்பட்டுள்ளது இந்த ஊர். காரணம் மழைப்பொழிவு குறைந்ததுதான். இதனால் அங்குள்ள மக்கள் நிறையப் பேர் இடம்பெயர்ந்து வருகிறார்கள். 

தென்னிந்தியாவின் வறண்ட மழைமறைவுப் பகுதியாக ராயலசீமாவின் அருகில் உள்ளது அனந்தப்பூர். இதன் வரலாற்றைத் தேடிப் பார்த்தால் 1882ஆம் ஆண்டு நெடும் பஞ்சங்களும் நீர் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது நடைபெற்றிருக்கும் பஞ்சங்கள் அதை விட மோசமாக இருக்கிறது. 

இப்படி பஞ்சங்கள் வந்துகொண்டிருந்தால் எப்படி இங்கு விவசாயம் நடைபெற முடியும்.? கேள்வி நியாயமானதுதான். அதனால்தான் 30 லட்சமாக இருந்த விவசாய பரப்பு இப்போது 15 லட்சமாக குறைந்துவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு ஏற்படும் பஞ்சத்தின் நடைமுறை மாறுகிறது. 

1989 முதல் 2018 வரையில் பெய்த மழை அளவை கணக்கிட்ட வானிலை ஆராய்ச்சி நிலையம், இங்கு பஞ்சம் அல்லது வெள்ளம் வரும் என கூறியுள்ளது. அனந்தப்பூரில் நடைபெறும் விவசாயம் பெரும்பாலும் மழையை நம்பித்தால் என்பதால் பாதிப்பும் அதிகமாக இருக்கிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் பஞ்சம், மூன்று முறை அதிக மழை ஆகியவற்றால் பயிர்களால் குறிப்பிடத்தக்க விளைச்சல் கிடைக்கவில்லை 

இங்குள்ள நில உரிமையாளர்கள் மழையில்லாத காரணத்தில் நிலத்தை ரூ.500, ரூ.1000 என குறைந்த குத்தகைக்கு  அடைத்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். அப்படி இல்லாமல் இலவசமாக விவசாயம் செய்யுங்கள் என்றும் சொல்லிவிட்டு செல்லும் தாராள மனம் படைத்தவர்களும் இருக்கிறார்கள்.  இங்குள்ள நில உரிமையாளர்கள் பெங்களூரூ அல்லது ஹைதராபாத் நகரங்களுக்கு சென்று கூலித்தொழிலாளியாக மாறி வேலை செய்கிறார்கள். பெரும்பாலும் சொந்த ஊரிலுள்ளவர்களை பார்க்க உகாதி, சங்கராந்தி விழாக்களுக்கு மட்டுமே செல்கிறார்கள். 

பஞ்சம் பெண்களுக்கு ஏற்படுத்திய விளைவு மிகவும் கோரமானது., இங்குள்ள பெண்கள், சிறுமிகள் விபசாரத்தில் தள்ளப்படுகிறார்கள்., கடந்த இருபது ஆண்டுகளில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இப்பகுதி பெண்களின் எண்ணிக்கை 14    ஆயிரமாக உள்ளது. மும்பை, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் என பல்வேறு பகுதிகளுக்கு விபசாரத்திற்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். 

அனந்தப்பூரில் வேர்க்கடலையை மட்டுமே அதிகமாக பயிரிட்டிருக்கிறார்கள். வேறு பயிர்களை பயிரிடாத காரணத்தில் இயற்கை சூழ்நிலையே மாறிவிட்டிருக்கிறது. மேலும் இயற்கை ஏற்படுத்திய அடுத்த இடியாக நிலங்களிலுள்ள மண் மெல்ல மணலாக மாறத் தொடங்கியுள்ளது. ஏறத்தாழ இந்த நிலங்கள் பாலையாகவும் மாறலாம். 

ராயதுர்க் சட்டமன்ற தொகுதியில் உள்ள கும்மகட்டா மண்டல் பகுதியில் வாழ்ந்த நாற்பது சதவீத மக்கள் அங்கிருந்து இடம்பெயரும் தொழிலாளிகளாக மாறிவிட்டனர். பெங்களூருவில் கட்டட பணியாளர்களாக உள்ளனர். நகரங்களில் வேலைக்கு சென்றவர்கள் பூமிக்கு கீழே உள்ள கேபிள்களை பதிக்கும் பணியையும் கற்றுக்கொண்டு செய்து வருகின்றனர். கோவிட் காரணமாக நகருக்கு சென்ற மக்கள் அனந்தப்பூருக்கு திரும்ப வந்துள்ளனர். இவர்களுக்கு பல்வேறு பயிர்களை வழங்கி விவசாயம் செய்ய ஊக்குவிக்கும் பணியில் மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி உள்ளார். நூறு நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்திய ஊரும் அனந்தப்பூர்தான். கூடுதலாக நிதியை ஒதுக்கி மக்களுக்கு அரசு உதவிவருகிறது. 

டைம்ஸ் ஆப் இந்தியா

உஜ்வால் பொம்மகாந்தி






கருத்துகள்