பருவநிலை மாற்றம் பற்றிய இளைஞர்களின் எதிர்வினைகள்!
சூழல் பற்றிய கருத்து |
மேகேக் ஆனந்த், 16
வசந்த் வேலி பள்ளி, டெல்லி
நாம் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கவேண்டும். அதிக நுகர்வு சூழலை நிச்சயமாக பாதிக்கும். தங்களது வாழ்க்கை முறையை மாணவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இப்போதே தொடங்குவது நல்லது. நாளை என்று சொல்லாதீர்கள். இன்றே தொடங்குங்கள்
ஸெனப் ஹபீப், 20
பி.டெக் மாணவி
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது , குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவது, கழிவுகளை மறுசுழற்சி செய்வது ஆகியவற்றை செய்தால்தான் நாம் வாழும் பூமியை, தாய்மடியை காப்பாற்ற முடியும். இது எதிர்காலத்தில் நமது குழந்தைகளைக் காப்பாற்ற உதவும். எனவே சூழலைக் காப்பாற்ற இப்போதே செயல்படலாம்.
தனிஷ்கா பேடி, 17
ஹெரிடேஜ் எக்ஸ்பரிமென்டல் பள்ளி
குருகிராம்
அதிகரித்து வரும் மக்கள்தொகைதான் பிரச்னை. இவர்களுக்கு தேவையான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன. எனவே இப்பிரச்னையைத் தீர்க்க சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்ளூரில் கிடைக்கும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதால், தேவையில்லாமல் உணவு வீணாகுவது நடைபெறாது. இதுதான் இன்னும் நீண்டநாள் உலகை நடத்திச்செல்ல உதவும்.
ஆரண்யக் கோஷ் மஜூம்தார், 15
மாணவர், சவுத்பாய்ண்ட் மேல்நிலைப்பள்ளி, கொல்கத்தா
கார்பன் வெளியீட்டை ஒரே இரவில் நிறுத்திவிட முடியாது. இதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இதில் தவறு ஏற்படும்போது அதைப் பற்றி கேள்வி கேட்பார்கள். கார்பன் வெளியீட்டை தடுத்து நிறுத்த புதுப்பிக்கும் ஆற்றல்களில் ஏராளமாக முதலீடு செய்யவேண்டும். பாலைவனத்தில் சோலார் பேனல்களை பண்ணை போல வைக்கலாம் என கேள்விப்பட்டேன். இவை எல்லாமே நாம் எப்படி செயல்படுகிறோமோ அதை பொறுத்ததுதான்.
இஷான் லியோனார்ட் ராவ், 17
பிரிட்டிஷ் பள்ளி, டெல்லி
இன்று நமது பூமியில் நிலப்பரப்பும், உயிரினங்களும் அழிந்து வருவதைப் பார்த்து வருகிறோம். எனவே, இதனை சரி செய்வதற்கான முயற்சியை செய்யவேண்டும். அப்போதுதான் பல்லாண்டுகளுக்கு முன்னர் நம் பூமி இருந்த நிலையை அடையும்.
தியா மிட்லே, 17
ஹில் ஸ்ப்ரிங் உலகப் பள்ளி மும்பை
நமது வாழ்க்கையை இயற்கையை ஒட்டியதாக மாற்றிக்கொள்ள வேண்டும். சூழலுக்கு உகந்த செங்கற்களைப் பற்றி நண்பர்கள் மூலம் அறிந்தேன். இதனை வீடுகட்டுவதற்கு பயன்படுத்த பிரசாரங்களை செய்தோம். நான் எடுக்கும் நோட்ஸ்களுக்கான தாளைக் கூட வீணாக்காமல் பிறருக்கு கொடுத்து வருகிறேன். இது குறுகிய கால விஷயம் என்றாலும் உலகைக் காப்பாற்றுவதற்கு இதுபோன்ற முயற்சிகள் உதவும்.
அனுஷ்கா தேஷ்பாண்டே, 12
தாகூர் பப்ளிக் பள்ளி, மும்பை
குறைவாக பயன்படுத்துதல், மீண்டும் பயன்படுத்துதல், மறுசுழற்சி ஆகிய மூன்று விஷயங்கள் முக்கியம். தேவைக்கு தண்ணீரைப் பிடித்து வைத்து பயன்படுத்துவது, குழாயை சரியாக மூடுவது ஆகியவற்றை செய்து வருகிறேன். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை கைவிட்டு உலோக பாட்டில்களை பயன்படுத்துகிறேன். மறுசுழற்சி தாள்களை எழுத பயன்படுத்துகிறேன்.
இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக