மக்களின் அபிமானத்தை சம்பாதித்த ஓடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்! - கடிதங்கள்

 வெற்றிகரமான முதல்வர் நவீன் பட்நாயக்

அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். 

நலமாக இருக்கிறீர்களா? பிரன்ட்லைன் இதழுக்கு சந்தாகட்டி வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன். வங்க எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரியின் நேர்காணலை சிறப்பாக எடுத்து எழுதியியுள்ளனர். ரிக்சா ஓட்டிக் கொண்டிருந்தவர் இப்போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஆகிவிட்டார். வாழ வழியில்லாத நிலையில் மாநில அரசின் விருது எதற்கு என துணிச்சலாக சொல்லியிருக்கிறார் மனிதர். 

நவீன் பட்நாயக் பற்றிய கட்டுரையும் நன்றாக எழுதப்பட்டிருந்தது. ஒடிஷாவில் மத்திய அரசின் திட்டங்களை கைவிட்டுவிட்டு மாநில அரசின் திட்டங்களை எப்படி நடைமுறைக்கு கொண்டு வந்து மக்களின் அபிமானத்தை சம்பாதித்துள்ளார் என்பதை கட்டுரையில் ஏராளமான தகவல்களை கொண்டு பேசியிருந்தார்கள். இப்போது ஞாயிறு மட்டும் தி இந்து ஆங்கில நாளிதழை வாங்கிக்கொண்டிருக்கிறேன். 

நிறைய முக்கியமான விஷயங்களை நடுப்பக்க கட்டுரைகளில் எழுதுகிறார்கள். மொழிபெயர்த்து எழுதுவதை இன்னும் மேம்படுத்திக்கொள்ள இக்கட்டுரைகளை வாசிப்பதும், தமிழில் மொழிபெயர்ப்பதும் உதவும் என நம்புகிறேன். 

அண்மையில் வடபழனிக்கு சென்று பேலசோ தியேட்டரில் நண்பர் மோகனுடன் லவ் ஸ்டோரி என்ற தெலுங்குப் படத்தைப் பார்த்தேன். சாதி, பாலியல் அத்துமீறல் ஆகிய கருத்துகளை நாயகன், நாயகிக்கு ஆளுக்கொரு பிரச்னையாக பிரித்து தந்து படத்தை எடுத்துள்ளார். படம் வெற்றிபெற்றுவிட்டது என கூறினார்கள். தனிப்பட்ட ரீதியில் சாதியைக் கையாள்வதிலும், பாலியல் அத்துமீறல்களை பேசுவதிலும் காட்சிகள் வலுவாக இல்லை என்று தோன்றியது. சேகர் கம்முலாவின் பாத்திரங்கள அனைத்துமே நல்ல படித்த பண்பான அதிகார பதவியில் இருப்பவர்கள் என்று இருக்கும். இந்த மட்டத்தில் சாதியைப் பேசியது ஒட்டவில்லை என்று பட்டது. என்னுடன் வந்த நண்பருக்கு படம் சரியில்லை என பாதியிலேயே டாக்டர் படத்தின் டிரைலரை போனில் ஓடவிட்டு பார்க்க தொடங்கிவிட்டார். எனக்கு ரொம்ப நாட்களுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்த்தது மகிழ்ச்சி. தியேட்டரே குதூகலமாக இருந்தது. அதற்கு சாய்பல்லவி மட்டும்தான் காரணம். 

நன்றி

ச.அன்பரசு

3.10.2021


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?