பருவநிலை வேறுபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலை! - டேட்டா ஜங்ஷன்
டேட்டா ஜங்ஷன்
கரிம எரிபொருட்களால் உலகில் 90 சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெப்ப நிலை உயர்வால் 820 மில்லியன் குழந்தைகள் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். அதாவது மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் எனலாம்.
920 மில்லியன் குழந்தைகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவநிலை மாறுபாட்டால் பஞ்சம், வறட்சி, நீரைப் பெறுவதற்கான போட்டி ஆகியவை எதிர்காலத்தில் ஏற்படும்.
மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதில் 600 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கில் ஒரு குழந்தை என தோராயமாக மதிப்பிடலாம்.
நானூறு மில்லியன் குழந்தைகள் புயல்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கடல்சார்ந்த வெள்ளத்தாலும் ,புயல்களாலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
2020இல் 33 மில்லியன் குழந்தைகள் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட பருவநிலை மாற்றம் காரணமாக உள்ளது.
டைம்ஸ் எவோக்
2
பிற இடங்களை விட ஆர்க்டிக் இருமடங்கு வேகத்தில் வெப்பமாகி வருகிறது. இதனால் கடந்த பத்தாண்டுகளில் 14 சதவீத பனிக்கட்டிகள் கரைந்துள்ளன. உணவுக்கும், நீருக்கும் பனிக்கட்டிகளை துருவக்கரடிகள் சார்ந்துள்ளன. அவை அழிந்தால் கரடிகளும் உண்ண உணவின்றி பட்டினி கிடந்து அழியும்.
உலகம் முழுக்க 3,200 புலிகள் மட்டுமே சுதந்திரமாக உலவுகின்றன. புலிகள் தமது வாழிடத்தை 95 சதவீதம் இழந்துவிட்டன. இதற்கு, வேளாண்மை பரப்பு அதிகரிப்பு, கட்டுமான வேலைகள், மரங்களை வணிகத்திற்காக வளர்ப்பது ஆகியவை முக்கியக் காரணங்களாகும். 2070இல் கடல்மட்டம் உயர்வு, மாங்குரோவ் காடுகள் அழிவு ஆகியவற்றால் சுந்தரவனக்காடுகளின் புலிகள் முழுமையாக அழியும்.
ஆப்பிரிக்க யானைகள் 30 சதவீத நிலப்பரப்பை இழந்துவிட்டன. 12 மில்லியனாக இருந்த எண்ணிக்கை சுருங்கி, 4 லட்சமாக மாறிவிட்டது. ஆண்டுக்கு இருபதாயிரம் யானைகள் தந்த த்திற்காக சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறது.
டைம்ஸ் எவோக்
கருத்துகள்
கருத்துரையிடுக