நவீன குழந்தைகளுக்கு ஏற்றபடி கதைகளை மாற்றும் காமிக்ஸ் நிறுவனங்கள்! - மாற்றங்கள் ஏன்?

 


அமர்சித்ரகதா





மாற்றம் பெறும் காமிக்ஸ் மற்றும் குழந்தைகளின் நூல்கள்!

உலகமெங்கும் உள்ள காமிக்ஸ் நூல்களின் மையப் பொருள் மாறுதல் பெறத் தொடங்கியுள்ளன. மாற்றுப்பாலினத்தவர், கருப்பினத்தவர்களையும் மெல்ல முக்கியமான பாத்திரங்களாக மாற்றுவதற்கு கதை எழுத்தாளர்கள் முன்வந்துள்ளனர். இதனை பதிப்பிக்கும் நிறுவனத்தினரும் இதனை ஏற்றுள்ளனர். ஒருவகையில் மாறும் காலத்திற்கேற்ப மாற்றங்கள் வணிகத்திற்கு அவசியம் என்பது உண்மை. 

கூடுதலாக வாசகர்களும் தொன்மையான நீதிகளை, விதிகளை பேசும் நூல்களை வேண்டாம் மாற்றம் வேண்டும் என கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் இந்தியாவில் உள்ள அமர்சித்ர கதா, டிங்கிள் காமிக்ஸ், ஃபிளேவே பே போன்ற இதழ்களும் கூட மாற்றங்களுக்கு ஏற்ப கதைகளை எழுதி வெளியிடத் தொடங்கியுள்ளன. இயற்கை சார்ந்த விஷயங்கள் மெல்ல காமிக்ஸ் வடிவத்தை பெற்று வருகின்றன. ரோகன் சக்ரவர்த்தி க்ரீன் ஹியூமர் என்ற பெயரில் தனி வலைத்தளத்தில் தனது இயற்கை சார்ந்த விஷயங்களை எழுதி  வரைந்து வெளியிட்டு வருகிறார். இந்து ஆங்கிலம் தேசிய நாளிதழிலும் இவரது கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டு வருகிறது. 

டிங்கிள் காமிக்ஸ் 


விலங்குகள் பேசுவது போல இவரது காமிக்ஸ்கள் வெளியாகின்றன. இவற்றை அச்சு ஊடகங்களில் வெளியிடுவதோடு, பிற சமூக வலைத்தளங்களிலும் கூட எளிதாக வெளியிடுமாறு சூழல் மாறியுள்ளது. அமர்சித்ரகதா நூல்களை புராண கதைகளுக்காக பலரும் வாங்குவார்கள். ஆனால் இன்று அவர்கள் எழுதும் பல்வேறு கதைகள் புராணம் சார்ந்தவையாகவே உள்ளன. இனவெளி , பாலின பாகுபாடு என பல்வேறு விவகாரங்களுக்காக விமர்சிக்கப்படத் தொடங்கியுள்ளன. 

எனவே விமர்சனங்களைத் தவிர்த்து நல்ல பெயரை எடுக்க நாட்டைக் காப்பாற்றி சாதனைப் பெண்கள், பெண் அறிவியலாளர்கள் என வேறு ரூட் பிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ற பாலின சமநிலை, ஜாதி , நிறவெறி, இனவெறி ஆகியவற்றை பற்றியதாக கதைகளை வெளியிடத் தொடங்கியுள்ளது. டிங்கிள் என்ற காமிக்ஸ், ஒற்றைப் பெற்றோர் குழந்தைக்கு சமைத்துக் கொடுத்து அவர்களை பார்த்துக்கொள்வது, அவர்களை வளர்ப்பது என கதைகளை மாற்றி வெளியிடத்தொடங்கியுள்ளனர். மாற்றுத்திறனாளிகள், அவர்களது வாழ்க்கை பற்றியும் கூட காமிக்ஸ்களை டிங்கிள் தயாரித்து வெளியிடத் தொடங்கியுள்ளது. 

க்ரீன் ஹியூமர் ரோகன் சக்ரபர்த்தி


இன்றைய கால குழந்தைகள் உடல் பருமன்,கருப்பாக இருப்பது, கற்றல் குறைபாடு, பாலியல் அத்துமீறல்  என பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இதனை மையப்படுத்தி கதை எழுதி அதன் வழியாக அவர்களுக்கு எளிதாக நம்பிக்கையும் ஊக்கமும் கொடுக்க முடியும். 

ஃபிளைவே பாய் என்ற நூலை பஃபின் என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை ஜேன் டி சூசா எழுதியுள்ளார். இதில் வரும் சிறுவன் பிற குழந்தைகளைப் போல இருப்பதில்லை. படிப்பதில்லை விளையாடுவதில்லை. இப்படி இருப்பது சரியா, தவறாக என்ற கேள்வியை வாசிப்பவர்களிடையே ஏற்படுத்துகிறது. இதில் குழந்தைகளுக்கு செய்தியை சொல்லவேண்டுமா, பொழுதுபோக்கு மட்டுமே இருக்கலாமே என்று கூட குரல்கள் எழுந்து வருகின்றன. இதனை எழுதும் எழுத்தாளர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். அமர்சித்ரகதா பதிப்பகம், செய்தியை நேரடியாக அல்லது மறைமுகமாக சொல்லுவதும் கதை சொல்லுவதில் உள்ள திறமைதான். எனவே அதனை முழுமையாக தவிர்க்க முடியாது. 

ரோகன் சக்ரவர்த்தி 



குழந்தைகளுக்கு வேறுபட்ட கதைக்களமாக இருந்தாலும் கூட அதனை அவர்களுடன்  இணைக்கும்படியாக எழுதும் திறமையை எழுத்தாளர்கள் கொண்டிருக்கவேண்டும். அப்போதுதான் இளம் எழுத்தாளர்கள் புதிதாக வருவார்கள். அவர்களையொட்டி புதிய வாசகர்களும் உருவாகுவார்கள். 

பினான்ஷியல் எக்ஸ்பிரஸ் 

ரியா மெஹ்ரோத்ரா

 

 


கருத்துகள்