சிங்கிளாக நிற்கும் சிறுத்தை, சிங்கங்களின் விருப்பம் என்ன?

 



The Emotional Stages of Every Tinder Date - Things Every Woman Thinks On A Tinder  Date
டேட்டிங் விருப்பங்கள் என்னென்ன?



டேட்டிங் பிளாட்பாரங்கள்தான் விர்ச்சுவலாக ஒருவர் சந்தித்துக்கொள்ளும் பீச், பார்க், கஃபே என்றாகிவிட்டது. அதிலுள்ள டிரெண்டுகளைப் பார்ப்போம். 

வீடியோ டேட்டிங்

2021ஆம் ஆண்டு நாகரிகப்படி, ஒரு பெண்ணை அறிமுகம் செய்துகொள்ள மிகவும் மெனக்கெட வேண்டாம். வீடியோ டேட்டிங்கை முயன்று பார்க்கலாம். பம்பிள் டேட்டிங் வலைத்தளம் எடுத்த ஆய்வில் 39 சதவீதம் பேர் முதல் டேட்டிங் நாளுக்கே வீடியோவை நாடியிருக்கிறார்கள். நேரடியாக நேரில் பார்ப்பதைவிட வீடியோவில் விர்ச்சுவலாக பார்ப்பது பாதுகாப்பு என 48 சதவீதப் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கூடவே நேரத்தையும் காசையும் மிச்சம் செய்கிறது என்று வேறு கூடுதல் மக்கள் கருத்தும் கிடைத்திருக்கிறது. 

மெல்லகா மெல்லகா....

ஜாலி வாலி பெண்கள் எல்லாம் அடக்கமாக உட்கார வைக்கப்பட்டு டிண்டர் என் வாழ்க்கையை மாத்துச்சு என சொல்லுவார்களே அதே வலைத்தளம்தான் உறவை மெதுவாக செலுத்த சிங்கிள்கள் விரும்புகிறார்கள் என கூறுகிறு. இந்த வகையில் 62 சதவீதம்பேர், டேட்டிங் உடனே சீரியசாக வேண்டாம் நட்போடு தொடங்கட்டுமே என்கிறார்களாம். கோ ஸ்லோ என போர்டை பார்த்து நாம் என்றைக்காவது வண்டியை ஓட்டியிருக்கோமா சொல்லுங்க ப்ரோ?

உணர்ச்சிகள்தான் முதலில்

கல்யாணத்துக்கப்புறம்தான் டச்சிங் டச்சிங் என எண்பது தொண்ணூறுகளில் காதல் பாட்டு எழுதுவார்கள். அதேகணக்கில் உணர்ச்சிகரமான விஷயங்களில் பாக கனெக்ட்டான பிறகு உடல் ரீதியான சமாச்சாரங்களுக்கு போகலாம். என ஓகே க்யூபிட்டில் 84 சதவீதப் பேர் ஆய்வுக்கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள். 

எல்லாத்துக்கும் காரணம் வைரஸ்தான்

கொரோனா வந்தபிறகுதான்  பிக் அப் ஆகிடும்னு நினைத்த பல்வேறு காதல் உறவுகள் கைமா ஆகின. அதற்கு மோசமான டேட்டிங் பழக்கங்கள்தான் காரணம் என ஹின்ஞ் வலைத்தளத்தில் ஆய்வு வெளியாகியுள்ளது. 45 சதவீதம் பேர் இப்படி கருத்து சொல்லியிருக்கிறார்கள். குறைந்த தகவல்தொடர்பு முக்கியமான காரணம் 27 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். 

நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

61 சதவீத ஜென் இசட் இளங்காளைகள், எதிர்பாலினத்தவரின் உடலை பார்ப்பதில்லையாம். மனதைப் பார்க்கிறார்களாம். 69 சதவீதம் பேர் தங்களுடைய பார்ட்டனர் பற்றி நிறைய நேரம் ஒதுக்கி புரிந்துகொள்கிறார்களாம். இந்த அரிய தகவலை ஆய்வு செய்து சொன்னது மேட்ச் வலைத்தளம். நேர்ச்சுக்கோ நேர்ச்சுக்கோ....

சுத்தம் முக்கியம்

கோவிட் காலமில்லையா, காதல் வேண்டும் என்று போய் காலன் வந்துவிட்டால்... டேட்டிங்கின் போதே நன்றாக சுத்தமாக இருக்கவேண்டுமென நினைக்கிறார்கள். 66 சதவீதம் பேர் டேட்டிங்கிற்கு வருபவர்கள் மாஸ்க் அணியவேண்டுமென எதிர்பார்க்கிறார்களாம். ஈசியாக போடணும் அதைவிட ஈசியாக  ஐந்து நிமிடங்களில் கழட்டிடணும்... அதுதான்  மாஸ்க்கின் விதி....

இது டிண்டரில் வெளியான ஆய்வு. 


இந்தியா டுடே 







கருத்துகள்