இந்திய விவசாயமுறையில் செய்யவேண்டிய மாற்றம்! - புதிய விவசாய முறைகள்

 
ரிலே பிளான்டிங்


அமெரிக்காவிலுள்ள சிய அறிவியல் அகாடமி விவசாயம் மற்றும் அதில் குறைந்த கார்பன் வெளியீடு பற்றி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரிலே பிளான்டிங், ஸ்டிரிப் கிராப்பிங் என இரண்டு முறைகளைப் பற்றி பேசியுள்ளனர். இதன்படி விவசாயம் செய்தால் உணவு உற்பத்தி அதிகரிப்பதோடு, கார்பன் வெளியீடும் குறைவாகவே இருக்கும் என்று கூறுகிறார்கள். 

அறிக்கை அமெரிக்காவில் வெளியாகி இருந்தாலும் இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் இந்தமுறை பயனளிக்க கூடியதே. எப்படி? பெரும் விவசாயிகளை விட இங்கு சிறு, குறு விவசாயிகளே அதிகம். சிறு குறு விவசாயிகள் என்று கூறுவது இரண்டு ஹெக்டேர்களுக்கும் குறைவான நிலங்களை வைத்துள்ளவர்களைத்தான். 

நகரங்களில் வேறு தொழில்வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கிராமப்புறங்களில் எழுபது சதவீதம் பேர் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இப்படி விவசாயத்தை நம்பி வாழ்வாதாரமாக சிறு குறு விவசாயிகள் 82 சதவீதம் பேர் உள்ளனர். 2017-18ஆம் ஆண்டு உணவுதானியங்களின் உற்பத்தி 275 கோடி டன்களாக இருந்தது. இப்படி விவசாயம் பெற கடன் பெறுபவர்கள் 30 சதவீதம் பேர் முறையான நிதி நிர்வாக அமைப்புகளை அணுகுகின்றனர். அதாவது அரசு. ஆனால் 50 சதவீதம் பேர் கந்துவட்டிக்கார ர்களிடம் அல்லது அத்தகைய நிறுவனங்களிடம் கடன் வாங்கி விவசாயம் செய்து மாட்டிக்கொண்டு கஷ்டப்பட்டு வருகின்றனர். 

இப்போது ரிலே பிளான்டிங் பற்றி பார்ப்போம். 

தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிராவில்  ரிலே பிளான்டிங் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு லாபம் தந்துள்ளது. இதனை எப்படி செய்வது, அரிசி, கோதுமை, வெங்காயம், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு என பல்வேறு காய்கறிகளை அடுத்தடுத்து ஊன்றி விவசாயம் செய்வதுதான் ரிலே பிளான்டிங். இதன்மூலம் ஒரே பயிரை விவசாயி நம்பவேண்டியதில்லை. அடுத்து, இப்படி மாறுபட்ட பயிர்களின் மூலம் மண்ணுக்கு நைட்ரஜன் சத்துகள் கிடைக்கின்றன. குறிப்பாக ராகி, கொள்ளு போன்றவை. பூச்சிகளும் பயிர்களை தாக்குவது வெகுவாக குறையும். 

ஸ்ட்ரிப் கிராப்பிங் என்ற முறையை அமெரிக்கர்கள் பின்பற்றுகிறார்கள். இந்த வகையில் அதிக நிலங்கள் இருந்தால்தான் விவசாயமுறை பயன் அளிக்கும். இதில் சோளம், அரிசி, கோதுமை, சோயா ஆகிய பயிர்கள் ஒரே நேரத்தில் வளர்கின்றன. இவற்றுக்கு இடையில் புற்களை வளர்க்கிறார்கள். இங்கு நிலம் என்பது துண்டு துண்டுகளாக பிரிக்கப்படுகிறது. 

அடுத்து நிலத்தைக் காப்பாற்ற அதன் மீது வைக்கோல், இலைகள் கொண்டு மூடுவதை சாயில் மல்ச்சிங் என்று சொல்லுகிறார்கள். இப்படி செய்வதால் நிலத்தின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படுவதோடு, இலைகள், வைக்கோல் மட்கி அதில் மண்புழு போன்ற உயிரிகள் உருவாகும். இவற்றைப் பயன்படுத்தி நிலத்தை மேம்படுத்தி உற்பத்தியையும் பெருக்கலாம். 

டி பாலசுப்பிரமணியன்

இந்து ஆங்கிலம் கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?